under review

புவனா நடராஜன்: Difference between revisions

From Tamil Wiki
Line 5: Line 5:


==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
புவனா நடராஜன் 1942-ல் பிறந்தார். சென்னை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் படித்தார் என்பது தவிர அவர் வாழ்க்கை பற்றிய விவரங்கள் அறியவரவில்லை. அவர் தமிழ், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
புவனா நடராஜன் 1942-ல் பிறந்தார். சென்னை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் படித்தார். தமிழ், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.


==தனி வாழ்க்கை==
==தனி வாழ்க்கை==
புவனா மணமானவர். கணவர் நடராஜன். இவர்களுக்கு ஒரு மகன். திருமணத்துக்குப்பின் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கல்கத்தாவிலும் பின்னர் சென்னையில் வாழ்ந்தார்.
புவனா மணமானவர். கணவர் நடராஜன். இவர்களுக்கு ஒரு மகன்.  
 
புவனா திருமணத்துக்குப்பின் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கல்கத்தாவிலும் பின்னர் சென்னையில் வாழ்ந்தார்.


== இலக்கிய வாழ்க்கை==
== இலக்கிய வாழ்க்கை==

Revision as of 00:38, 22 July 2026

நடராஜன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நடராஜன் (பெயர் பட்டியல்)
புவனா நடராஜன்
சாகித்ய அகாதெமி விருது

புவனா நடராஜன்(பிறப்பு: 1942) தமிழ் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். வங்காள மொழியிலிருந்து ஆஷாபூர்ணா தேவியின் முதல் சபதம் உள்ளிட்ட முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

பிறப்பு, கல்வி

புவனா நடராஜன் 1942-ல் பிறந்தார். சென்னை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் படித்தார். தமிழ், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

புவனா மணமானவர். கணவர் நடராஜன். இவர்களுக்கு ஒரு மகன்.

புவனா திருமணத்துக்குப்பின் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கல்கத்தாவிலும் பின்னர் சென்னையில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

புவனா நடராஜனின் பல சிறுகதைகள் கல்கி, மங்கையர் மலர் , சாவி, சுமங்கலி, ஞான பூமி, இதயம் பேசுகிறது, கோகுலம் ஆகிய தமிழ் இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளன. தாராசங்கர் பந்தோபாத்யாயவின் 'கணதேவதா', ஆஷாபூர்ணா தேவியின் 'முதல் சபதம்', சரத்சந்திரரின் 'தேவதாஸ்' உள்ளிட்ட நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

1995-ல் நடைபெற்ற தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் கல்கத்தாவின் பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் பார்வையாளராகப் பங்கேற்றார்.

விருதுகள், பரிசுகள்

  • நல்லி திசை எட்டும் விருது (2007) வங்காளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம்
  • திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் 2007-க்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
  • சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசு(2009) -முதல் சபதம் மொழியாக்கத்துக்காக

நூல்கள்

மொழியாக்கங்கள்
  • கடைசி நமஸ்காரம்: சந்தோஷ் குமார் கோஷ் - புவனா நடராஜன் (சாகித்திய அகாடெமி)
  • அந்தக் காலம் (வங்காள நாவல்): சுநீல் கங்கோபாத்யாய - புவனா நடராஜன் (சாகித்திய அகாடெமி)
  • வங்காள சிறுகதைகள் - சிறுகதைகள் ஆஷபூர்ணா தேவி
  • முதல் சபதம் -ஆஷாபூர்ணா தேவி
  • சோழ மண்ணைத்தேடி - தஸ்லிமா நஸரீன்
  • கண தேவதா - தாராசங்கர் பானர்ஜி
  • தேவதாஸ் - சரத் சந்திர சட்டர்ஜி
  • அந்தக்காலம் - சுனில் கங்கோபாத்யாய்
  • ஜக்மோஹனின் மரணம் - மஹாஸ்வேதா தேவி
  • கருப்பு சூரியன் - ஆஷாபூர்ணா தேவி
  • தர்மமும் அதர்மமும் - (சிறுகதைத் தொகுப்பு)
  • என் தாய்க்கு என் கடைசி நமஸ்காரங்கள் - சந்தோஷ் குமார் கோஷ்
  • போரட்டம் - சுனில் கங்கோபாத்யாய
  • வங்க மொழி சிறுகதைத்தொகுப்பு - விபூதிபூஷண் பந்தோபாத்யாய்
  • ஓரு ஒலியின் மரணம் - (சிறுகதைத் தொகுப்பு)
  • மகிசம்னு மானம் - (சிறுகதைத் தொகுப்பு
நூல்கள்
  • அன்னை தெரசா
  • ராஜா ராம் மோகன் ராய்
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

உசாத்துணை


✅Finalised Page