under review

செ. இராசநாயகம்: Difference between revisions

From Tamil Wiki
Line 9: Line 9:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:யாழ்ப்பாணச் சரித்திரம்.png|thumb|யாழ்ப்பாணச் சரித்திரம்]]
[[File:யாழ்ப்பாணச் சரித்திரம்.png|thumb|யாழ்ப்பாணச் சரித்திரம்]]
செ. இராசநாயகம் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்ட காலம் தொடங்கி, ஒய்வு வேளைகளில் இலங்கையின் வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ‘பண்டைக்கால யாழ்ப்பாணம்’ (Ancient Jaffna) என்ற பெயருடன் யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். யாழ்ப்பாண வரலாறு குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரே ஆய்வு நூலாக இது விளங்கியது. இந்நூலை செ. இராசநாயகம் தமிழிலும் இரண்டு பகுதிகளாக எழுதினார். இலங்கையின் பழைய திருக்கோயில்களுள் ஒன்றாகிய கதிர்காமம் பற்றிய நூலினை ஆங்கிலத்தில் எழுதினார்.  

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின் இங்கிலாந்துக்குச் சென்று பிரிட்டன் அரும்பொருட்காட்சிச் சாலையில் கிடைத்த பழைய யாழ்ப்பாண வரவாறுகளாகிய கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை, ஆகிய இரு நூல்களையும் பார்த்துப் படியெடுத்தார். ‘கைலாய மாலை’யின் பதிப்பொன்று செ. இராசநாயகத்தின் முன்னுரையுடன் சென்னை செ.வெ. ஜம்புலிங்கம் பிள்ளையால் வெளியிடப்பட்டது. "யாழ்ப்பாண வைபவமாலை" யானது பல குறிப்புகளுடன் இலங்கைக் கல்வித் திணைக்களத்தினர் வெளியிட்டு வந்த "வித்தியா சமாச்சாரப் பத்திரிகை"யில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதனை விரிவான ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் குல. சபாநாதன் அவர்கள் 1949-ல் வெளியிட்டார். செ. இராசநாயகம் "யாழ்ப்பாண வைபவமாலை" நூலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார். இந்நூல் இன்னும் வெளியாகவில்லை. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று சி.பிறிட்டோ (C. Britto) அவர்களால் 1899-ல் வெளியிடப்பட்டது. ஆவணக் காப்பகத்தில் இருந்த தமிழ் ஆவணங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக 1937ல் வெளியிட்டுள்ளார்.

Line 27: Line 27:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர் தமிழ் எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் ஐயா செ.ராசநாயகம் பிள்ளை: velaler
* வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர் தமிழ் எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் ஐயா செ.ராசநாயகம் பிள்ளை: வேளாளர் மையம்
 
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://noolaham.net/project/15/1496/1496.pdf யாழ்ப்பாண சரித்திரம்: செ. இராசநாயகம்]
* [https://noolaham.net/project/15/1496/1496.pdf யாழ்ப்பாண சரித்திரம்: செ. இராசநாயகம்]
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:30, 5 October 2022

செ. இராசநாயகம்

செ. இராசநாயகம் (அக்டோபர் 22, 1870 - ஜனவரி 17, 1940) தமிழறிஞர், வரலாற்றாய்வாளர்.

பிறப்பு, கல்வி

செ. இராசநாயகம் அக்டோபர் 22, 1870-ல் யாழ்ப்பாணம், நவாலியூரில் அம்பலவாண இறைசுவார் வீரசிங்க உடையாரின் வழித்தோன்றலான செல்லப்பா பிள்ளையின் மகனாகப் பிறந்தார். கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

செ. இராசநாயகம் 1889-ல் வயதில் அரசாங்க சேவையில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். 1920ல் உயர்நீதிமன்றத்தில் மூன்றம் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். 1923-ல் மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை குடிமைப்பணியில் அனுமதிக்கப்பட்டார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார். செ. இராசநாயகம் 1929-ல் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திலிருந்தபொழுது நாடகக் கலையினை வளர்ப்பதில் ஊக்கங் காட்டினர்.

ஆய்வுப்பணிகள்

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஏற்கனவே யாழ்ப்பாண வரலாறு பற்றி இருந்த நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு முரணாகப் பல புதிய தகவல்கள் இருப்பதாக அவர் உணர்ந்தார். பழைய தமிழ் இலக்கியங்களையும், பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்து அவ்வாய்வு முடிவுகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டார். Ancient Jaffna (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் தலைப்பில் 1926 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தனது ஆய்வு முடிவுகளைச் சுருக்கமாகத் தமிழில் எழுதி 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலாக வெளியிட்டார். தென்னிந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் ”Ancient Jaffna” நூலுக்கு அணிந்துரை எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

யாழ்ப்பாணச் சரித்திரம்

செ. இராசநாயகம் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்ட காலம் தொடங்கி, ஒய்வு வேளைகளில் இலங்கையின் வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ‘பண்டைக்கால யாழ்ப்பாணம்’ (Ancient Jaffna) என்ற பெயருடன் யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். யாழ்ப்பாண வரலாறு குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரே ஆய்வு நூலாக இது விளங்கியது. இந்நூலை செ. இராசநாயகம் தமிழிலும் இரண்டு பகுதிகளாக எழுதினார். இலங்கையின் பழைய திருக்கோயில்களுள் ஒன்றாகிய கதிர்காமம் பற்றிய நூலினை ஆங்கிலத்தில் எழுதினார். அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின் இங்கிலாந்துக்குச் சென்று பிரிட்டன் அரும்பொருட்காட்சிச் சாலையில் கிடைத்த பழைய யாழ்ப்பாண வரவாறுகளாகிய கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை, ஆகிய இரு நூல்களையும் பார்த்துப் படியெடுத்தார். ‘கைலாய மாலை’யின் பதிப்பொன்று செ. இராசநாயகத்தின் முன்னுரையுடன் சென்னை செ.வெ. ஜம்புலிங்கம் பிள்ளையால் வெளியிடப்பட்டது. "யாழ்ப்பாண வைபவமாலை" யானது பல குறிப்புகளுடன் இலங்கைக் கல்வித் திணைக்களத்தினர் வெளியிட்டு வந்த "வித்தியா சமாச்சாரப் பத்திரிகை"யில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதனை விரிவான ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் குல. சபாநாதன் அவர்கள் 1949-ல் வெளியிட்டார். செ. இராசநாயகம் "யாழ்ப்பாண வைபவமாலை" நூலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார். இந்நூல் இன்னும் வெளியாகவில்லை. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று சி.பிறிட்டோ (C. Britto) அவர்களால் 1899-ல் வெளியிடப்பட்டது. ஆவணக் காப்பகத்தில் இருந்த தமிழ் ஆவணங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக 1937ல் வெளியிட்டுள்ளார்.

சரித்திர ஆராய்ச்சிக் கழகத்தின் உறுப்பினராயிருந்து பழைய இலங்கை மன்னர்களின் தமிழ்க் கடிதங்களைத் தொகுத்து அரசாங்கத்தாரைக் கொண்டு வெளியிட்டார். 1878ல் எஸ். ஜோன் என்பவர் எழுதி வெளியிட்ட ”யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் தமிழ் நூலை மீள்பதிப்புச் செய்யும்படி ஜோனின் மகனுக்கு ஊக்கம் கொடுத்தார். அத்துடன், யாழ்ப்பாண வைபவமாலையைக் குறிப்புக்களுடன் பதிப்பிக்குமாறு குல. சபாநாதனையும் இவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நூற் பெயரகராதி

செ. இராசநாயகம் "தமிழ்நூற் பெயரகராதி" என்ற அகராதியை தொகுத்து வெளியிட்டார். தமிழ் மொழியில் வெளிவந்த நூல்களின் பெயர்கள் நூலாசிரியர்களின் பெயர்கள் அந்நூல்களை வெளியிட்ட அச்சகங்களின் பெயர்கள், பதிப்பித்தவர்களின் பெயர்கள், பதிப்பித்த ஆண்டு விவரங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டன. ஏறக்குறைய 35,000 நூல்களைப்பற்றிய விவரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டன. அந்தாதி, வெண்பா, சரித்திரம், சமயம் எனப் பலவாறு வகைப்படுத்தித் தொகுத்தார். இந்த அகராதி, சென்னை நூல்நிலையக் கழகத்தாரிடம், அவர்களது வேண்டுகோளின்படி அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அகராதி வெளிவரவில்லை.

இலக்கிய இடம்

”இத்தகைய ஆய்வுகளில் பயிற்சியும் அனுபவமும் இல்லாத செ. இராசநாயகத்திடமிருந்து இத்தனை அதிகம் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த நூலில் பெருமளவு உழைப்பும், விரிவான ஆய்வும் உள்ளடங்கி உள்ளது. அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வெளியே தெரியாத பெருமளவு விடயங்களை நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் பதியப்படாமல் இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான தகவல்கள் அழிந்து போயிருக்கக்கூடியவை. இவை யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பில் இராசநாயகத்தின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இறுதியாக, யாழ்ப்பாண வரலாற்றுக்கு மட்டுமன்றி, இந்திய வரலாற்று ஆய்வில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இந்நூல் பயனுள்ளது” என கிருஷ்ணசாமி ஐயங்கார் இந்நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புகள்

  • உயர் நீதிமனறம் செ. இராசநாயகத்தின் திறனை கெளரவிக்கும் பொருட்டு “முதலியார்” பட்டம் அளித்தது.

மறைவு

செ. இராசநாயகம் ஜனவரி 17, 1940-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • யாழ்ப்பாணச் சரித்திரம்
  • கதிர்காமம்
  • யாழ்ப்பாணம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர் தமிழ் எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் ஐயா செ.ராசநாயகம் பிள்ளை: வேளாளர் மையம்

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.