பெரோஸா ஹுசைன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 23: | Line 23: | ||
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%BE,_%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:பெரோஸா, ஹுசைன் - நூலகம்] | *[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%BE,_%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:பெரோஸா, ஹுசைன் - நூலகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|31-Jan-2026, 08:54:19 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 1 February 2026
பெரோஸா ஹுசைன் (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் கவிஞர், எழுத்தாளர். கவிதைகள், நாவல்கள் எழுதினார்.
பிறப்பு, கல்வி
பெரோஸா ஹுசைன் இலங்கை நாட்டின் அம்பாறை கல்முனையில் பிறந்தார். இலங்கையின் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் இவரின் சகோதரர். பெரோஸா கல்முனை ஸாஹிரா கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றார். களனி பல்கலைக்கழகத்தின் எல்.எல்.பீ.சட்டத்துறை பட்டதாரி. இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்துறை கல்வியைத் தொடர்ந்து சட்டத்தரணியானார்.
தனிவாழ்க்கை
பெரோஸா ஹுசைனின் கணவர் அப்துல் ஸலாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
இலக்கிய வாழ்க்கை
பெரோஸா ஹுசைன் 1977 முதல் கவிதைகள் எழுதினார். கல்வி கற்கும் காலத்திலேயே சட்டக்கல்லூரியின் நீதி முரசு இதழுக்கு படைப்புகளை எழுதினார். தினகரன், வார மஞ்சரியில் தொடர் நாவல்களாக இவரின் நாவல்கள் வெளிவந்தன. 'இரண்டு மனம் வேண்டும்', 'தீ', 'ஒரு தாயின் போராட்டங்கள்' ஆகியவை இவர் எழுதிய நாவல்கள். சிந்தாமணி, வீரகேசரி, நவமணி, அல்ஹிக்மா போன்ற நாளிதழ்களிலும், கலைசுடர், தமிழ் ஒளி போன்ற மாத இதழ்களிலும் இவரின் சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன.
இலங்கை வானொலியில் வாலிபவட்டம், இளைஞர்வட்டம், சங்கநாதம், இசையும்கதையும் முஸ்லிம் நிகழ்ச்சியின் செவ்வாய்மலர், மருதமலர், சிறுகதை, கவியரங்கு போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபற்றினார். இந்தியாவில் தமிழருவி வானொலியிலும் இவரின் கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
விருது
- முஸ்லீம் பெண்கள் மாநாட்டில் 'உலக நாகரிகத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு' என்ற இவரின் ஆய்வுக்கட்டுரை முதலாமிடத்தை பெற்றது.
நூல் பட்டியல்
- இரண்டு மனம் வேண்டும்
- தீ
- ஒரு தாயின் போராட்டங்கள்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2026, 08:54:19 IST