under review

குறும்பனை சி.பெர்லின்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 55: Line 55:
* [https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/vacant-seaside-schools!---author,-pseudonym-c.-berlin காலியாகும் கடலோர பள்ளிகள்! -எழுத்தாளர், குறும்பனை சி.பெர்லின்: தீக்கதிர்]
* [https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/vacant-seaside-schools!---author,-pseudonym-c.-berlin காலியாகும் கடலோர பள்ளிகள்! -எழுத்தாளர், குறும்பனை சி.பெர்லின்: தீக்கதிர்]
* [https://www.youtube.com/watch?v=2AxrQi5Bmg0&ab_channel=ShrutiTVLiterature குறும்பனை சி. பெர்லின் - தலைச்சுமடுகாரி | வாசகசாலை: அருள் ஸ்காட்]
* [https://www.youtube.com/watch?v=2AxrQi5Bmg0&ab_channel=ShrutiTVLiterature குறும்பனை சி. பெர்லின் - தலைச்சுமடுகாரி | வாசகசாலை: அருள் ஸ்காட்]
[[Category:Being Created]]
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:14, 22 September 2022

குறும்பனை சி.பெர்லின்

குறும்பனை சி.பெர்லின் (பிறப்பு: மே 30, 1966) தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர், களச்செயற்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

குறும்பனை சி.பெர்லின் கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை கிராமத்தில் கிறாசையன், அமிர்தம்மாள் இணையருக்கு மே 30, 1966-ல் பிறந்தார். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியம் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

குறும்பனை சி.பெர்லின் எல்.ஐ.சி. முகவராகப் பணியாற்றுகிறார். ஜனவரி 19, 1995-ல் மேரி இதழ் பிராட் என்பவரை மணந்தார். மகள் பெனிற்றா லின்ஜோ பொழில்.

இலக்கிய வாழ்க்கை

குறும்பனை சி.பெர்லினின் முதல்படைப்பு "கடலுக்குள்ளே... கடலுக்குள்ளே..." சிறுகதை. தொ. சூசை மிக்கேல், வறீதையா கான்ஸ்தந்தீன், தோப்பில் முகமது மீரான், பொன்னீலன், ஜோ டி குருஸ், இரையுமன் சாகர் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நெய்தல் சொல்லகராதி வெளியிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

”நெய்தல் இலக்கிய படைப்புகள் சார்ந்து, தென் மேற்க்கு கடற்கரையின் துருவ நட்சத்திரம் குறும்பனை சி. பெர்லின். சேலுகேடு என்றால் கடல்கொந்தளிப்பு. கடல்கொந்தளிப்பில் அகப்படாத மீனவர்கள் இருப்பது அரிது. ஒவ்வொரு மீனவனிடமும் ஆயிரம் கதைகளிருக்கும். ஒரே கதை பல ஊர்களிலும் ஒரே மாதிரியாகவே நடந்திருக்கும். சேலுகேடும் ஒவ்வொரு ஊரிலும் நடந்த, இப்போது நடக்கும், இன்னும் நடக்கவிருக்கும் கதைகள்.” என கிறிஸ்டோபர் ஆன்றணி சேலுகேடு நாவலின் அணிந்துரையில் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் NCBH தனுஷ்கோடி ராமசாமி விருது வழங்கியது.
  • சென்னையில் நெய்தல் இலக்கிய விழாவில், லெமூரியா தற்காப்பு கலை பள்ளி குறும்பனை சி.பெர்லினின் களப்பணி, இலக்கிய பணியை பாராட்டி கோமகன் பட்டம் வழங்கியது.
  • நெய்தல் இலக்கிய சாதனையாளர் விருது
  • SIGNIS வாழ்நாள் சாதனையாளர் விருது
  • அன்னை ஆதா விருது

நூல் பட்டியல்

நாவல்
  • கடலடி
  • சேலுகேடு
  • நீவாடு
  • தலைச்சுமடுகாரி
  • மானத்துக்கு அஞ்சி
  • குளியாளி
சிறுகதைகள்
  • கடலுக்குள்ளே... கடலுக்குள்ளே...
  • கடலின் கருவறையில்
  • நீந்திக்களித்த கடல்
  • கடல் தண்ணி கரிக்குது
  • கண்ணீர்ச் சமுத்திரம்
  • நெஞ்சை நெகிழச் செய்யும் நெய்தல் கதைகள்
கட்டுரை
  • கடலோரக் கதைகள்
  • கடலில் கரையும் குமரிக் கடற்கரை
  • இனையம் காக்க இணைவோம்
  • ஒக்கி புயலும் நோக்கா செயலும்
  • மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் குப்பையில் போன
  • கடல் தண்ணிய குடிக்க...
  • கஜா புயல்; மறைக்கப்பட்ட சுனாமி
  • உரிமம் கேட்டு உரிமைக்குரல்
  • கன்னியாக்குமரி காக்க களம் காண்போம்
  • கதிகலக்கும் கதிரியக்கம்
  • நெய்தல் சொல்லகராதி
  • நிறைவேறுமா மீனவர் கோரிக்கைகள்
  • காத்திருக்கும் கடலோடிகள்
  • சரக்குப் பெட்டகத் துறைமுகம்... தாங்குமா மாவட்டம்?!
  • தேவை தூண்டில் வளைவல்ல... மீன்பிடித்துறைமுகம்
  • மீன்வள தினமல்ல... மீனவர்தினம்
ஆங்கிலம்
  • The Trashed Documents

இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.