under review

சிறில் அலெக்ஸ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
சிறில் அலெக்ஸ் (சிறில் விஸ்வாஸ் அலெக்ஸ்) (பிறப்பு: ஜூலை 7, 1974) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர்.  
சிறில் அலெக்ஸ் (சிறில் விஸ்வாஸ் அலெக்ஸ்) (பிறப்பு: ஜூலை 7, 1974) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர்.  
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
[[File:சிறில் அலெக்ஸ்2.jpg|thumb|261x261px|சிறில் அலெக்ஸ்]]
[[File:சிறில் அலெக்ஸ்2.jpg|thumb|233x233px|சிறில் அலெக்ஸ்]]
சிறில் அலெக்ஸ் கன்னியாக்குமரி மாவட்டம் முட்டம் கிராமத்தின் கிளைப்பங்கான ஜேம்ஸ் நகரில்(சிவந்தமண்) கு. அலெக்ஸ், மரிய லீமா ரோஸ் இணையருக்கு ஜூலை 7, 1974-ல் பிறந்தார். அப்பா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். அம்மா கடியப் பட்டினம், சேக்ரட் ஹார்ட் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர், நாடகங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.  

சிறில் அலெக்ஸ் முட்டம், கடியப் பட்டினம், மணவாளக்குறிச்சி கிராமங்களில் ஆரம்பக் கல்வி கற்றார்.
சிறில் அலெக்ஸ் முட்டம், கடியப் பட்டினம், மணவாளக்குறிச்சி கிராமங்களில் ஆரம்பக் கல்வி கற்றார்.
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். வட ஆர்க்காடு திருப்பத்தூர் டான் போஸ்கோ செமினெரியில் மேல்நிலைக்கல்வி பயின்றார். ஒன்றரை வருடம் குருத்துவ தயாரிப்பில் இருந்தார். செமினரியிலிருந்து வெளியேறி சென்னை லயோலாவில் பி.காம். பட்டம் பெற்றார். லிபாவில் மேலாண்மை முதுகலைப் பட்டம் பெற்றார்.

Revision as of 06:03, 22 September 2022

சிறில் அலெக்ஸ்

சிறில் அலெக்ஸ் (சிறில் விஸ்வாஸ் அலெக்ஸ்) (பிறப்பு: ஜூலை 7, 1974) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர்.

பிறப்பு, கல்வி

சிறில் அலெக்ஸ்

சிறில் அலெக்ஸ் கன்னியாக்குமரி மாவட்டம் முட்டம் கிராமத்தின் கிளைப்பங்கான ஜேம்ஸ் நகரில்(சிவந்தமண்) கு. அலெக்ஸ், மரிய லீமா ரோஸ் இணையருக்கு ஜூலை 7, 1974-ல் பிறந்தார். அப்பா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். அம்மா கடியப் பட்டினம், சேக்ரட் ஹார்ட் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர், நாடகங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறில் அலெக்ஸ் முட்டம், கடியப் பட்டினம், மணவாளக்குறிச்சி கிராமங்களில் ஆரம்பக் கல்வி கற்றார். நாகர்கோவில் கார்மல் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். வட ஆர்க்காடு திருப்பத்தூர் டான் போஸ்கோ செமினெரியில் மேல்நிலைக்கல்வி பயின்றார். ஒன்றரை வருடம் குருத்துவ தயாரிப்பில் இருந்தார். செமினரியிலிருந்து வெளியேறி சென்னை லயோலாவில் பி.காம். பட்டம் பெற்றார். லிபாவில் மேலாண்மை முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சிறில் அலெக்ஸ் தகவல் தொழில்நுட்ப மேலாண்மையில் பணியாற்றி வருகிறார். மனைவி ஷோபனா. மகன் ரூபஸ் ஆன்டன் அலெக்ஸ், மகள் ரேச்சல் மரியன் ரோஸ்.

இலக்கிய வாழ்க்கை

சிறில் அலெக்ஸ் பள்ளி நாட்களில் எழுதத் துவங்கினார். 2005-ல் 'தேன்' வலைதளம் வழியாக கதைகள் கட்டுரைகள் எழுதினார். சிறில் அலெக்ஸின் முதல் நூல் தனது ஊரின் நினைவுகளை தொகுத்து eழுதிய 'முட்டம். அலைகள் பாறைகள் மண்மேடுகள்'. தென்தமிழக மீனவ கிராமத்து வாழ்க்கையின் அழகியலை கலாச்சாரத்தை முன்வைத்த முதல் அபுனைவு புத்தகம்‌. ஆதர்ச எழுத்தாளராக ஜெயமோகனைக் குறிப்பிடுகிறார். ராய்மாக்ஸத்தின் உப்புவேலி நூலை தமிழில் மொழிபெயர்த்தார். கொந்தளிக்கும் கடல், 1000 கடல் மைல் என்ற கட்டுரைத்தொகுப்புகளில் எழுதினார். 'சிலுவையின் பெயரால்' என்ற ஜெயமோகனின் நூலில் உரையாடும் இருவரில் ஒருவராக உள்ளார். பல இணைய இதழ்களிலும், அச்சு இதழ்களிலும் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நூல் பட்டியல்

கட்டுரை
  • முட்டம். அலைகள் பாறைகள் மண்மேடுகள் (ஆழி வெளியீடு, நெய்தல் வெளி)
  • கொந்தளிக்கும் கடல் (ஜோ டி குரூசின் படைப்புலகம்) (ஆழி, நெய்தல்வெளி, 2011).
  • 1000 கடல் மைல் (தடாகம்- கடல்வெளி, 2018)
மொழிபெயர்ப்பு
  • உப்பு வேலி (ராய்மாக்ஸம்)
  • தே ஒரு இலையின் வரலாறு
  • நிலம் மீது படகுகள் ஜேனிஸ் பரியத் (மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்)
  • வேங்கைச்சவாரி - விவேக் ஷானபக் (மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்)

உரைகள்

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.