under review

பெண் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 20: Line 20:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 01:05, 21 December 2025

பெண் (இதழ்)

பெண் (இதழ்) (1991) ஈழத்து பெண்கள் இதழ். இதழாசிரியர் விஜயலட்சுமி சேகர்.

வெளியீடு

கிழக்கிலங்கை மட்டக்களப்பு டயஸ்வீதியிலிருந்து சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் மூலமாக 'பெண்' இதழ் வெளிவருகிறது. 1991-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2007-ம் ஆண்டுவரை காலாண்டு இதழாக வெளிவந்தது. தற்போது அரையாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் விஜயலட்சுமி சேகர்.

நோக்கம்

பெண்களை எழுத்துத் தளத்திற்குக் கொண்டு வருவதும் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும் பெண் எழுத்தாளர்களுக்கான பாரம்பரியத்தை உருவாக்குவதும் முக்கிய நோக்கமாகக் கொண்டு 'பெண்' இதழ் செயல்படுகிறது.

உள்ளடக்கம்

பெண் இதழ் பெண்ணியம் பற்றி பேசுகின்ற தனித்துவமான இதழாகவும் பெண் எழுத்தாளர்களை மையப்படுத்திய களமாகவும் அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கத்தில் கவிதைகள், உளவியல் கட்டுரைகள், சமூகவியல் கட்டுரைகள், அரசியல் கல்வி சமூக பொருளாதாரத்தில் பெண்களின் நிலை பற்றிய ஆய்வுகள், சமகாலத்தில் பெண்சமுதாயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றிப் பேசப்படுகிறது.

ஆவணம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Oct-2023, 00:58:49 IST