ஜெயந்த் காய்கினி: Difference between revisions
| Line 12: | Line 12: | ||
== ஊடக வாழ்க்கை == | == ஊடக வாழ்க்கை == | ||
ஜெயந்த் காய்கினி கன்னடத் தொலைக்காட்சி சேனல்களான Etv கன்னடம், ஜீ கன்னடம் ஆகியவற்றின் நிறுவனர். கன்னடத்தின் புகழ்பெற்ற விவாதமேடையான நமஸ்காராவை தொகுத்து வழங்கினார் | ஜெயந்த் காய்கினி கன்னடத் தொலைக்காட்சி சேனல்களான Etv கன்னடம், ஜீ கன்னடம் ஆகியவற்றின் நிறுவனர். கன்னடத்தின் புகழ்பெற்ற விவாதமேடையான நமஸ்காராவை தொகுத்து வழங்கினார். இது குவெம்பு, பேந்த்ரே,சிவராம காரந்த் உள்ளிட்ட படைப்பாளிகளைப் பற்றிய விவாதமேடை. கன்னட இலக்கியச் சூழலில் மிகப்புகழ்பெற்ற ஒன்று. | ||
== இதழியல் == | == இதழியல் == | ||
| Line 21: | Line 21: | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
ஜெயந்த் காய்கினி மிக இளம்வயதிலேயே கவிஞராக அறிமுகமானவர். தன் 19 வயதில் அவர் வெளியிட்ட ரங்கடிந்தோஷிது தூரா (1974) அவருடைய முதல் கவிதைத்தொகுதி. அதற்கு கன்னட சாகித்ய அகாதமி விருதைப் பெற்று புகழ்பெற்றார். | |||
* | |||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
Revision as of 13:58, 29 November 2025
ஜெயந்த் காய்கினி ( பிறப்பு 24 ஜனவரி 1955) கன்னட எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்.
பிறப்பு, கல்வி
ஜெயந்த் காய்கினி கர்நாடக மாநிலத்தில் கோகர்ணம் (தெற்கு கனரா மாவட்டம்) பகுதியில் எழுத்தாளரான கௌரீஷ் காய்கினிக்கும் சமூகப்பணியாளரான சாந்தா வுக்கும் 24 ஜனவரி 1955ல் பிறந்தார்.
ஜெயந்த் காய்கினி தார்வாட் நகரில் கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஜெயந்த் காய்கினி மும்பையில் பல்வேறு மருந்து நிறுவனங்களில் வேதியியலாளராக பணியாற்றினார். பின்னர் மும்பை விளம்பர நிறுவனங்களின் எழுத்தாளராக இருபத்துமூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார். அங்கே ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.
ஜெயந்த் காய்கினியின் மனைவி ஸ்மிதா. மகள் ஸ்ரஜனா கைகினி தத்துவப்பேராசிரியர், மகன் ரித்விக் கைகினி ஓவியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர். ஜெயந்த் காய்கினியின் தாய்மொழி கொங்கணி. மராத்தி, இந்தி ஆகியமொழிகளையும் அறிந்தவர் ஜெயந்த் காய்கினி.
ஊடக வாழ்க்கை
ஜெயந்த் காய்கினி கன்னடத் தொலைக்காட்சி சேனல்களான Etv கன்னடம், ஜீ கன்னடம் ஆகியவற்றின் நிறுவனர். கன்னடத்தின் புகழ்பெற்ற விவாதமேடையான நமஸ்காராவை தொகுத்து வழங்கினார். இது குவெம்பு, பேந்த்ரே,சிவராம காரந்த் உள்ளிட்ட படைப்பாளிகளைப் பற்றிய விவாதமேடை. கன்னட இலக்கியச் சூழலில் மிகப்புகழ்பெற்ற ஒன்று.
இதழியல்
ஜெயந்த் காய்கினி பாவனா (கற்பனை) என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
திரைவாழ்க்கை
ஜெயந்த் காய்கினி கன்னடத்தின் திரையுலகுடன் பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் என்னும் நிலைகளில் இணைந்து பணியாற்றினார். கிரீஷ் காசரவள்ளியின் த்வீபா படத்திந் பாடலாசிரியராக 2002ல் அறிமுகமானார். 2003 ல் வெளிவந்த சிரிகுட கனசு என்னும் படத்திற்காக கன்னட நடிகர் ராஜ்குமார் பாடிய பந்துவே ஓ பந்துவே என்ற பாடல் அவருக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்தது.பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கன்னடப் பாடல்களையும் வசனங்களையும் எழுதியவர் அவர்தான்.
இலக்கியவாழ்க்கை
ஜெயந்த் காய்கினி மிக இளம்வயதிலேயே கவிஞராக அறிமுகமானவர். தன் 19 வயதில் அவர் வெளியிட்ட ரங்கடிந்தோஷிது தூரா (1974) அவருடைய முதல் கவிதைத்தொகுதி. அதற்கு கன்னட சாகித்ய அகாதமி விருதைப் பெற்று புகழ்பெற்றார்.