பெண்பால் கிளவி(பெருந்திணை): Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
Corrected typo errors;
 
Line 2: Line 2:
==விளக்கம்==
==விளக்கம்==
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]======
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்  காதல் ஏக்கத்தால் வளையல் கழலவும், ‘என்னை நினைக்காமல் இருந்து என் வளையல்களைக் கவர்ந்தவனை இந்த ஊர் அறியவில்லை' எனத் தலைவி சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல்  காதல் ஏக்கத்தால் வளையல் கழலவும், 'என்னை நினைக்காமல் இருந்து என் வளையல்களைக் கவர்ந்தவனை இந்த ஊர் அறியவில்லை' எனத் தலைவி சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
<poem>
<poem>
வெள்வளை நெகிழவும் எம் உள்ளாத
வெள்வளை நெகிழவும் எம் உள்ளாத

Latest revision as of 17:41, 22 November 2025

பெண்பால் கிளவி புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி வேட்கை மிகுந்து கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் காதல் ஏக்கத்தால் வளையல் கழலவும், 'என்னை நினைக்காமல் இருந்து என் வளையல்களைக் கவர்ந்தவனை இந்த ஊர் அறியவில்லை' எனத் தலைவி சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெள்வளை நெகிழவும் எம் உள்ளாத
களவனைக் காணாது இவ்வூர் எனக் கிளந்தன்று (கொளு 17.8)

வெண்பா

வானத்து இயலும் மதிஅகத்து வைகலும்
கானத்து இயலும் முயல் காணும் - தானத்தின்
ஒள்வளை ஓடவும் உள்ளான் மறைந்து உறையும்
கள்வனைக் காணாது இவ்வூர் (333)

பொருள்: இந்த ஊர் வானகத்திலுள்ள நிலவில் கானகத்து முயலையே காணும்; ஆனால் என் வளையல்கள் கழலக் காரணமானவனைக் காணமாட்டாது.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:38:30 IST