அவள் மணமகள்: Difference between revisions
(Corrected typo errors;) |
(Corrected typo errors;) |
||
| Line 6: | Line 6: | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
அவள் மணமகள் இதழின் முகப்பு அட்டையில் | அவள் மணமகள் இதழின் முகப்பு அட்டையில் 'கல்யாணமே வைபோகமே' என்ற வாசகம் இடம்பெற்றது. திருமணம் குறித்த செய்திகள், திருமண மண்டபங்கள் குறித்த செய்திகள், திருமண வரம் அருளும் ஆலயம் குறித்த தகவல்கள், கிராமத்துத் திருமணங்கள், புது விதமான ஒப்பனைகள், நகைகள், விதம் விதமான ஆடைகள், முக, உடல் அலங்காரப் பொருட்கள் பற்றிய செய்திகள், அழைப்பிதழ்கள், வெட்டிங் போட்டோகிராபி, கேண்டிட் போட்டோஷூட்ஸ் பற்றிய தகவல்கள், விவாகத் தடை நீக்கும் விரதங்கள் என்று திருமணம் தொடர்பான பல செய்திகளை அவள் மணமகள் இதழ் வெளியிட்டது. | ||
== இதழ் நிறுத்தம் == | == இதழ் நிறுத்தம் == | ||
Latest revision as of 17:28, 22 November 2025
அவள் மணமகள் (2013), விகடன் குழுமத்தின் சார்பாக வெளிவந்த இதழ். மூன்று மாதங்களுக்கொருமுறை காலாண்டிதழாக வெளிவந்தது. பெண்களின் திருமணத்தையும் அது குறித்த நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டு வெளியானது. செப்டம்பர் 2019-ல் நின்று போனது.
வெளியீடு
அவள் மணமகள் என்னும் அவள் விகடன் மணமகள் இதழ், விகடன் குழுமத்தின் சார்பாக ஜனவரி 2013 முதல் வெளிவந்த காலாண்டு இதழ். பெண்களின் திருமணத்தையும், ஆடை, அலங்கார முறைகளையும், திருமணம் குறித்த பிற செய்திகளையும், தகவல்களையும் கொண்ட இதழாக வெளிவந்தது. ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டு இதழின் விலை 125/- ரூபாய்.
உள்ளடக்கம்
அவள் மணமகள் இதழின் முகப்பு அட்டையில் 'கல்யாணமே வைபோகமே' என்ற வாசகம் இடம்பெற்றது. திருமணம் குறித்த செய்திகள், திருமண மண்டபங்கள் குறித்த செய்திகள், திருமண வரம் அருளும் ஆலயம் குறித்த தகவல்கள், கிராமத்துத் திருமணங்கள், புது விதமான ஒப்பனைகள், நகைகள், விதம் விதமான ஆடைகள், முக, உடல் அலங்காரப் பொருட்கள் பற்றிய செய்திகள், அழைப்பிதழ்கள், வெட்டிங் போட்டோகிராபி, கேண்டிட் போட்டோஷூட்ஸ் பற்றிய தகவல்கள், விவாகத் தடை நீக்கும் விரதங்கள் என்று திருமணம் தொடர்பான பல செய்திகளை அவள் மணமகள் இதழ் வெளியிட்டது.
இதழ் நிறுத்தம்
தவிர்க்க முடியாத காரணங்களால் அவள் மணமகள் இதழ், ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டு இதழோடு நின்று போனது.
மதிப்பீடு
திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளைக் குறித்துத் தமிழில் வெளியான முதல் இதழாக அவள் மணமகள் இதழ் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Mar-2024, 22:01:03 IST