பொழுதுகண்டு இரங்கல்(பெருந்திணை): Difference between revisions
(; Added info on Finalised date) |
(Corrected typo errors;) |
||
| Line 2: | Line 2: | ||
==விளக்கம்== | ==விளக்கம்== | ||
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ||
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் கழலும் பொன்வளையல் அணிந்த தலைவி மாலைப் பொழுதைக் கண்டு உயிர் போகுமாறு | புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் கழலும் பொன்வளையல் அணிந்த தலைவி மாலைப் பொழுதைக் கண்டு உயிர் போகுமாறு ‘பெருமூச்செறிதல்', வருந்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. | ||
<poem> | <poem> | ||
நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும் | நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும் | ||
Revision as of 16:06, 22 November 2025
பொழுதுகண்டு இரங்கல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கழலும் பொன்வளையல் அணிந்த தலைவி மாலைப் பொழுதைக் கண்டு உயிர் போகுமாறு ‘பெருமூச்செறிதல்', வருந்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும்
பொன்தொடி அரிவை பொழுதுகண்டு இரங்கின்று(கொளு 16.9)
வெண்பா
இறையே இறந்தன எல்வளை உண்கண்
உறையே பொழிதலும் ஓவா - நிறையைப்
பருகாப் பகல் கரந்த பையுள் கூர் மாலை
உருகா உயங்கும் உயிர் (314)
பொருள்: கைகளிலிருந்து வளையல்கள் கழலுகின்றன; மைபூசிய கண்கள் கண்ணீரைச் சொரிதலையும் நிறுத்தவில்லை ; கதிரவன் மறைந்த இம்மாலைப் பொழுதில் காதல்நோய் மிகுந்து என் உயிர் கரைந்து வருந்தும்.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jul-2025, 21:27:27 IST