under review

கடுவெளிச் சித்தர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Corrected typo errors;)
Line 1: Line 1:
[[File:Kaduveli.png|thumb|கடுவெளிச் சித்தர்|313x313px]]
[[File:Kaduveli.png|thumb|கடுவெளிச் சித்தர்|313x313px]]
கடுவெளிச் சித்தர் தமிழ்ச்சித்தர் மரபில் ஒருவர். “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடலின் வழியாகத் தமிழில் பரவலாக அறியப்படுபவர்.
கடுவெளிச் சித்தர் தமிழ்ச்சித்தர் மரபில் ஒருவர். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" பாடலின் வழியாகத் தமிழில் பரவலாக அறியப்படுபவர்.

==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
Line 10: Line 10:
</poem>
</poem>

இதிலுள்ள ‘திருக்காஞ்சிப்பதி’ என்ற ஊரைப் புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘திருக்காஞ்சி’ என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம் தான்  அவர்  ஜீவசமாதி  கொண்ட தலம் என்று ஆய்வாளர்கள் கருதினர். இவர் பாடல் வரிகளின் எளிமையைக் கண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
இதிலுள்ள ‘திருக்காஞ்சிப்பதி' என்ற ஊரைப் புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘திருக்காஞ்சி' என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம் தான்  அவர்  ஜீவசமாதி  கொண்ட தலம் என்று ஆய்வாளர்கள் கருதினர். இவர் பாடல் வரிகளின் எளிமையைக் கண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

==தொன்மம்==
==தொன்மம்==
”இவர் கடுவளி என்னும் ஊரில் உள்ள சிவன்கோவிலில் சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவ்வூருக்கு வந்த சோழன் இவரை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்த எண்ணினான். தாசி ஒருத்தி இவரை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்த முன்வந்தாள். அவள் இவருக்குச் சருகைப்போன்ற உணவைப் பக்குவம் செய்து கொடுத்துத் தண்ணீர்த் தாகம் ஏற்படச் செய்து, தன் வீட்டிற்கு அழைத்துவந்து நல்ல உணவுகளைச் சாப்பிடச் செய்து சிற்றின்பத்தில் ஈடுபடுமாறு செய்தாள். ஒருநாள் சோழன் அவ்வூருக்கு வந்தபோது ஓர் அவை கூட்டி அத்தாசியை நடனமாடச் செய்தான். நடனத்தின்போது கீழே விழுந்த சதங்கையைச் சித்தர் எடுத்து அவள் காலில் அணிவித்தார். அதுகண்டு அரசன் முதலானோர் சிரித்தனர். அப்பொழுது சித்தர் “அல்லும் பகலும் அறிவுடன் துஞ்சினால் கல்லும் பிளந்து கடுவளியாகுமே” எனப் பாடச் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்தது. சோழன் அஞ்சி அச்சித்தரை வேண்ட அவர் ”எட்டிரண்டும் அறிவாலறிந்த பின்  எட்டிரண்டும் சிவலிங்கமதாகுமே” என்று பாடப் பிளந்த லிங்கம் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது” என்ற தொன்மக்கதை கடுவெளிச்சித்தரைப் பற்றி உள்ளது.
"இவர் கடுவளி என்னும் ஊரில் உள்ள சிவன்கோவிலில் சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவ்வூருக்கு வந்த சோழன் இவரை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்த எண்ணினான். தாசி ஒருத்தி இவரை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்த முன்வந்தாள். அவள் இவருக்குச் சருகைப்போன்ற உணவைப் பக்குவம் செய்து கொடுத்துத் தண்ணீர்த் தாகம் ஏற்படச் செய்து, தன் வீட்டிற்கு அழைத்துவந்து நல்ல உணவுகளைச் சாப்பிடச் செய்து சிற்றின்பத்தில் ஈடுபடுமாறு செய்தாள். ஒருநாள் சோழன் அவ்வூருக்கு வந்தபோது ஓர் அவை கூட்டி அத்தாசியை நடனமாடச் செய்தான். நடனத்தின்போது கீழே விழுந்த சதங்கையைச் சித்தர் எடுத்து அவள் காலில் அணிவித்தார். அதுகண்டு அரசன் முதலானோர் சிரித்தனர். அப்பொழுது சித்தர் "அல்லும் பகலும் அறிவுடன் துஞ்சினால் கல்லும் பிளந்து கடுவளியாகுமே" எனப் பாடச் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்தது. சோழன் அஞ்சி அச்சித்தரை வேண்ட அவர் "எட்டிரண்டும் அறிவாலறிந்த பின்  எட்டிரண்டும் சிவலிங்கமதாகுமே" என்று பாடப் பிளந்த லிங்கம் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது" என்ற தொன்மக்கதை கடுவெளிச்சித்தரைப் பற்றி உள்ளது.

==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
கடுவெளி என்பது ‘வெட்டவெளி’. அதாவது பிரம்மம். இந்தச் சித்தர் பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும் அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச்  சித்தர் பாடல்களாக உள்ளன. கடுவெளிச் சித்தர் பாடல்கள் [[ஆனந்தக் களிப்பு]] வகையைச் சார்ந்தவை. மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால் அவ்வாறு அழைக்கப்பட்டன.
கடுவெளி என்பது ‘வெட்டவெளி'. அதாவது பிரம்மம். இந்தச் சித்தர் பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும் அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச்  சித்தர் பாடல்களாக உள்ளன. கடுவெளிச் சித்தர் பாடல்கள் [[ஆனந்தக் களிப்பு]] வகையைச் சார்ந்தவை. மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால் அவ்வாறு அழைக்கப்பட்டன.

==பாடல் நடை==  
==பாடல் நடை==  
*புகழ்பெற்ற பாடல்
*புகழ்பெற்ற பாடல்
<poem>
<poem>
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி"
</poem>
</poem>

Line 37: Line 37:
*அனுபவ உபதேசங்கள்
*அனுபவ உபதேசங்கள்
<poem>
<poem>
“தூடணமாகச் சொல்லாதே”
"தூடணமாகச் சொல்லாதே"
“ஏடணை மூன்றும் பொல்லாதே”
"ஏடணை மூன்றும் பொல்லாதே"
“நல்லவர் தம்மைத் தள்ளாதே”
"நல்லவர் தம்மைத் தள்ளாதே"
“பொல்லாங்குச் சொல்லாதே”
"பொல்லாங்குச் சொல்லாதே"
“பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே”
"பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே"
“பெண்ணாசைக் கொண்டு அலையாதே”
"பெண்ணாசைக் கொண்டு அலையாதே"
“மனம் போன போக்கு போகாதே”
"மனம் போன போக்கு போகாதே"
“மைவிழியாரைச் சாராதே”
"மைவிழியாரைச் சாராதே"
“மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே”
"மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே"
“வைதோரைக் கூட வையாதே - இந்த
"வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே”
வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே"
“வைய வினைகள் செய்யாதே”
"வைய வினைகள் செய்யாதே"
“பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன்
"பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன்
பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே”
பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே"
“கஞ்சா புகையாதே”
"கஞ்சா புகையாதே"
“வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே”
"வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே"
“மூடனுக்கு அறிவுரைப் புகலாதே”
"மூடனுக்கு அறிவுரைப் புகலாதே"
</poem>
</poem>
==வழிபாடு==
==வழிபாடு==
Line 70: Line 70:
==இணைப்புகள்==
==இணைப்புகள்==
*[https://www.tamilvu.org/slet/l7100/l7100pd1.jsp?bookid=140&pno=280 சித்தர் பாடல்கள்- 7. கடுவெளிச் சித்தர் பாடல் - tamilvu]
*[https://www.tamilvu.org/slet/l7100/l7100pd1.jsp?bookid=140&pno=280 சித்தர் பாடல்கள்- 7. கடுவெளிச் சித்தர் பாடல் - tamilvu]
*[https://www.vikatan.com/spiritual/117106-kaduveli-siddhar-is-well-known-tamil-saints 'நந்தவனத்திலோர் ஆண்டி’ தத்துவம் சொன்ன கடுவெளிச் சித்தரின் கதை! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 14 - vikatan]
*[https://www.vikatan.com/spiritual/117106-kaduveli-siddhar-is-well-known-tamil-saints 'நந்தவனத்திலோர் ஆண்டி' தத்துவம் சொன்ன கடுவெளிச் சித்தரின் கதை! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 14 - vikatan]
*[https://www.hindutamil.in/news/spirituals/29324-.html தர்மங்கள் போதித்த கடுவெளிச் சித்தர் - இந்து தமிழ் திசை]
*[https://www.hindutamil.in/news/spirituals/29324-.html தர்மங்கள் போதித்த கடுவெளிச் சித்தர் - இந்து தமிழ் திசை]
*[https://www.scribd.com/document/704404685/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81 கடுவெளிச்சித்தர் தல வரலாறு - scribd]

Revision as of 16:05, 22 November 2025

கடுவெளிச் சித்தர்

கடுவெளிச் சித்தர் தமிழ்ச்சித்தர் மரபில் ஒருவர். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" பாடலின் வழியாகத் தமிழில் பரவலாக அறியப்படுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கடுவெளிச் சித்தர் என்பவர் சூனியத்தைத் தியானித்து சித்தி பெற்றதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயரோ வரலாறோ தெரியவில்லை. இவரது ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்ற செய்தியை போகர் பாடலின் வழி அறிய முடிகிறது.

வானென்ற கடுவெளிச் சித்தர்தானும்
வளமான திருக்காஞ்சிப் பதியிலாச்சு

இதிலுள்ள ‘திருக்காஞ்சிப்பதி' என்ற ஊரைப் புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘திருக்காஞ்சி' என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம் தான் அவர் ஜீவசமாதி கொண்ட தலம் என்று ஆய்வாளர்கள் கருதினர். இவர் பாடல் வரிகளின் எளிமையைக் கண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

தொன்மம்

"இவர் கடுவளி என்னும் ஊரில் உள்ள சிவன்கோவிலில் சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவ்வூருக்கு வந்த சோழன் இவரை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்த எண்ணினான். தாசி ஒருத்தி இவரை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்த முன்வந்தாள். அவள் இவருக்குச் சருகைப்போன்ற உணவைப் பக்குவம் செய்து கொடுத்துத் தண்ணீர்த் தாகம் ஏற்படச் செய்து, தன் வீட்டிற்கு அழைத்துவந்து நல்ல உணவுகளைச் சாப்பிடச் செய்து சிற்றின்பத்தில் ஈடுபடுமாறு செய்தாள். ஒருநாள் சோழன் அவ்வூருக்கு வந்தபோது ஓர் அவை கூட்டி அத்தாசியை நடனமாடச் செய்தான். நடனத்தின்போது கீழே விழுந்த சதங்கையைச் சித்தர் எடுத்து அவள் காலில் அணிவித்தார். அதுகண்டு அரசன் முதலானோர் சிரித்தனர். அப்பொழுது சித்தர் "அல்லும் பகலும் அறிவுடன் துஞ்சினால் கல்லும் பிளந்து கடுவளியாகுமே" எனப் பாடச் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்தது. சோழன் அஞ்சி அச்சித்தரை வேண்ட அவர் "எட்டிரண்டும் அறிவாலறிந்த பின் எட்டிரண்டும் சிவலிங்கமதாகுமே" என்று பாடப் பிளந்த லிங்கம் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது" என்ற தொன்மக்கதை கடுவெளிச்சித்தரைப் பற்றி உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

கடுவெளி என்பது ‘வெட்டவெளி'. அதாவது பிரம்மம். இந்தச் சித்தர் பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும் அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச் சித்தர் பாடல்களாக உள்ளன. கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக் களிப்பு வகையைச் சார்ந்தவை. மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால் அவ்வாறு அழைக்கப்பட்டன.

பாடல் நடை

  • புகழ்பெற்ற பாடல்

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி"

  • ஆனந்தக்களிப்பு

சாபங்கொடுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

  • அனுபவ உபதேசங்கள்

"தூடணமாகச் சொல்லாதே"
"ஏடணை மூன்றும் பொல்லாதே"
"நல்லவர் தம்மைத் தள்ளாதே"
"பொல்லாங்குச் சொல்லாதே"
"பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே"
"பெண்ணாசைக் கொண்டு அலையாதே"
"மனம் போன போக்கு போகாதே"
"மைவிழியாரைச் சாராதே"
"மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே"
"வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே"
"வைய வினைகள் செய்யாதே"
"பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன்
பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே"
"கஞ்சா புகையாதே"
"வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே"
"மூடனுக்கு அறிவுரைப் புகலாதே"

வழிபாடு

  • கடுவெளிச் சித்தருடைய ஜீவ சமாதி பரமானந்தர் ஆலயத்திற்குள் அமைந்துள்ளது என்ற நம்பிக்கையும் உள்ளது. கடுவெளியில் அவதரித்து அருகில் உள்ள ஆலத்தூரில் அடக்கமானதால் இரண்டு ஊர்களுக்குமே பொதுவான புனைபெயராக சித்தராலத்தூர் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் எடையூர் சங்கந்தி கடைத்தெருவில் இறங்கி மன்னார்குடி சாலையில் மூன்று கிலோமீட்டர் சென்றால் கடுவெளியை அடையலாம்.
  • ஸ்ரீபரமானந்தர் வாலாம்பிகை ஆலயத்துள் அமர்ந்திருக்கும் சித்தரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் அகலும் என்ற நம்பிக்கை உள்ளது. மோட்ச தீபத்தை இந்த ஆலயத்தைச் சுற்றி ஏற்ற பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் வாழ்வில் சோதனைகளும் துயரங்களும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. கடுவெளிச் சித்தரின் ஜீவ சமாதி இங்கே அமைந்துள்ளதால் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மனதில் எண்ணிய கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பெளர்ணமி தோறும் இத்தலத்தில் ஆண்களும் பெண்களும் விசேசமான சித்தர் போற்றி யாகம் மற்றும் அபிசேகம் ஆகியவற்றைச் செய்து அன்னப்படையலும் இடுவர். தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதான சேவையும் நடைபெறும்.

நூல் பட்டியல்

  • கடுவெளிச் சித்தர் பாடல்
  • ஆனந்தக் களிப்பு
  • வாத வைத்தியம்
  • பஞ்ச சாத்திரம்

உசாத்துணை

இணைப்புகள்

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:18:36 IST