நாட்டுப்புறவியல்: Difference between revisions

From Tamil Wiki
; Added info on Finalised date
Corrected typo errors;
Line 27: Line 27:
நாட்டுப்புறக் கலைகள், வழிபாடுகள், ஊர்ப்பெயராய்வு, மருத்துவம், சமயச் சடங்குகள், நிகழ்த்துக்கலைகள், விளையாட்டுக்கள் போன்றவையும் நாட்டுப்புறவியலில் அடங்கும்.  
நாட்டுப்புறக் கலைகள், வழிபாடுகள், ஊர்ப்பெயராய்வு, மருத்துவம், சமயச் சடங்குகள், நிகழ்த்துக்கலைகள், விளையாட்டுக்கள் போன்றவையும் நாட்டுப்புறவியலில் அடங்கும்.  


சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றியவை நாட்டுப்புற இலக்கியங்கள். பிற்கால இலக்கியங்கள் பலவும் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தவையாக ‘ஏட்டில் எழுதாக் கிளவி’ என்று நாட்டுப்புற இலக்கியங்கள் கருதப்படுகின்றன.  
சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றியவை நாட்டுப்புற இலக்கியங்கள். பிற்கால இலக்கியங்கள் பலவும் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தவையாக ‘ஏட்டில் எழுதாக் கிளவி' என்று நாட்டுப்புற இலக்கியங்கள் கருதப்படுகின்றன.  


== நாட்டுப்புறப் பாடல்கள் ==
== நாட்டுப்புறப் பாடல்கள் ==
Line 38: Line 38:


== நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் ==
== நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் ==
தனிமனிதனின் வரலாற்றையோ, இதிகாசக் கருத்துக்களையோ அல்லது ஏதாவதொரு நிகழ்ச்சியையோ மையமாக வைத்துக் கதைக் கோர்வையுடன் பாடப்படும் பாடல்கள் கதைப்பாடல்கள். இவை பல மணி நேரங்கள் பாடக்கூடியதாக அமைந்திருக்கும். ‘பவளக்கொடி’, ’அல்லி அரசாணிமாலை’, ’நல்லதங்காள்’ முதலான பெண் வரலாற்றுக் கதைப்பாடல்களும் ’கட்டபொம்மன்’, ‘தீரன்சின்னமலை’, ‘பொன்னர் சங்கர்’ முதலான வரலாற்று நாயகர்களைச் சித்திரிக்கும் கதைப்பாடல்களும் தமிழகத்தில் வழங்கி வருகின்றன. இந்தக் கதைப்பாடல்களை விழாக் காலங்களில் வில்லுப்பாட்டாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தப்படுகின்றன.
தனிமனிதனின் வரலாற்றையோ, இதிகாசக் கருத்துக்களையோ அல்லது ஏதாவதொரு நிகழ்ச்சியையோ மையமாக வைத்துக் கதைக் கோர்வையுடன் பாடப்படும் பாடல்கள் கதைப்பாடல்கள். இவை பல மணி நேரங்கள் பாடக்கூடியதாக அமைந்திருக்கும். ‘பவளக்கொடி', 'அல்லி அரசாணிமாலை', 'நல்லதங்காள்' முதலான பெண் வரலாற்றுக் கதைப்பாடல்களும் 'கட்டபொம்மன்', ‘தீரன்சின்னமலை', ‘பொன்னர் சங்கர்' முதலான வரலாற்று நாயகர்களைச் சித்திரிக்கும் கதைப்பாடல்களும் தமிழகத்தில் வழங்கி வருகின்றன. இந்தக் கதைப்பாடல்களை விழாக் காலங்களில் வில்லுப்பாட்டாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தப்படுகின்றன.


== பழமொழிகள் ==
== பழமொழிகள் ==
நாட்டுப்புற மக்களின் பேச்சுக்களிடையே கிடைக்கும் அனுபவத் தெறிப்புகளே பழமொழிகள். மூத்தோர்கள் உரையாடல்களில் பழமொழிகள் மிகுதியாக இடம்பெறும். பழமொழிகள் இடம், காலம், சூழ்நிலைகளைப் பொருத்து கிராமப்புற மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. ‘பழமையான மொழிகளே பழமொழிகள்’ என்றும், ’பழம் போன்ற மொழிகளே பழமொழிகள்’ என்றும், ’அறிவாலும் அனுபவத்தாலும் பழுத்த மொழிகளே பழமொழிகள்’ என்றும் பழமொழிக்குப் பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. மக்களது பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நாகரிக நிலைகளை அறிந்து கொள்ளப் பழமொழிகள் துணைபுரிகின்றன.  
நாட்டுப்புற மக்களின் பேச்சுக்களிடையே கிடைக்கும் அனுபவத் தெறிப்புகளே பழமொழிகள். மூத்தோர்கள் உரையாடல்களில் பழமொழிகள் மிகுதியாக இடம்பெறும். பழமொழிகள் இடம், காலம், சூழ்நிலைகளைப் பொருத்து கிராமப்புற மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. ‘பழமையான மொழிகளே பழமொழிகள்' என்றும், 'பழம் போன்ற மொழிகளே பழமொழிகள்' என்றும், 'அறிவாலும் அனுபவத்தாலும் பழுத்த மொழிகளே பழமொழிகள்' என்றும் பழமொழிக்குப் பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. மக்களது பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நாகரிக நிலைகளை அறிந்து கொள்ளப் பழமொழிகள் துணைபுரிகின்றன.  


== விடுகதைகள் ==
== விடுகதைகள் ==

Revision as of 16:03, 22 November 2025

நாட்டுப்புற மக்களின் கலை, இலக்கியம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சமயச் சடங்குகள், மருத்துவம், விளையாட்டு முதலான வழக்காறுகளை ஆராயும் துறையே நாட்டுப்புறவியல் அல்லது நாட்டாரியல்.

நாட்டுப்புறவியல் விளக்கம்

நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், கலாசாரத்தையும், நாகரிகத்தையும் பற்றி கலைகள், கதைப்பாடல்கள், வாய் மொழி வரலாறுகள், வாய்மொழிப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், கதைகள், புராணங்கள் வழி ஆராய்வதே நாட்டுப்புறவியல் என்பதன் சுருக்கமான விளக்கம்.

நாட்டுப்புறவியல் பண்புகள்

நாட்டுப்புறவியல் கீழ்க்காணும் ஐந்து பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை,

  • வாய்மொழியாகப் பரவுவது
  • மரபு வழித் திகழ்வது
  • பல்வேறு வடிவங்களாகத் திகழ்வது
  • தனிப்பட்ட ஆசிரியர் இல்லாதது (யாரால் பாடப்பட்டது என்பதை அறிய முடியாமல் இருப்பது)
  • காலப்போக்கில் ஒருவித வாய்ப்பாட்டு முறைக்குள் அடங்குவது

நாட்டுப்புற வழக்காறுகள் வழிவழியாகப் பல்லாண்டுகளாக நிலவி வருபவை. தலை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருபவை.

நாட்டுப்புறவியல் வகைகள்

நாட்டுப்புறவியல் இலக்கியங்கள் கீழ்க்காணும் வகைகளைக் கொண்டது.

  • நாட்டுப்புறப் பாடல்கள்
  • நாட்டுப்புறக் கதைகள்
  • நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்
  • பழமொழிகள்
  • விடுகதைகள்
  • புராணங்கள்

நாட்டுப்புறக் கலைகள், வழிபாடுகள், ஊர்ப்பெயராய்வு, மருத்துவம், சமயச் சடங்குகள், நிகழ்த்துக்கலைகள், விளையாட்டுக்கள் போன்றவையும் நாட்டுப்புறவியலில் அடங்கும்.

சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றியவை நாட்டுப்புற இலக்கியங்கள். பிற்கால இலக்கியங்கள் பலவும் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தவையாக ‘ஏட்டில் எழுதாக் கிளவி' என்று நாட்டுப்புற இலக்கியங்கள் கருதப்படுகின்றன.

நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், நாடோடி இலக்கியம், கிராமப்புறப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், எழுதாக் கிளவி என பல்வேறு பெயர்களின் வழங்கப்படுகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறுகின்றன. மக்களிடையே வழி வழியாக வழங்கிவரும் இப்பாடல்களில் குழந்தைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், சமுதாயப் பாடல்கள், திருமணப்பாடல்கள், தொழில் பாடல்கள், காதல் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், தெம்மாங்கு, கும்மி என்று பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன. மக்களின் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துவதாக நாட்டுப்புறப் பாடல்கள் அமைந்துள்ளன.

நாட்டுப்புறக் கதைகள்

நாட்டுப்புற மக்களிடையே பொழுதுபோக்காக வழங்கிவரும் வாய்மொழிக் கதைகளே நாட்டுப்புறக் கதைகள். இவை சிறுசிறு கருத்துக்களோடு கூடியதாகவும், கேலியும், கிண்டலும் கொண்டதாகவும், நீதிக் கதைகளாகவும் அமைந்திருக்கும். நாட்டுப்புற மக்களின் கற்பனை, சிந்தனை, எண்ணப்போக்கு ஆகியவற்றைக் காட்டுவதாக இக்கதைகள் இருக்கும். மனிதக் கதைகள், சமூகக் கதைகள், நீதிக்கதைகள், புராணக்கதைகள், மந்திர தந்திரக்கதைகள், நகைச்சுவைக் கதைகள், பாலியல் கதைகள், சிறார் கதைகள் என நாட்டுப்புறக் கதைகளில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன.

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

தனிமனிதனின் வரலாற்றையோ, இதிகாசக் கருத்துக்களையோ அல்லது ஏதாவதொரு நிகழ்ச்சியையோ மையமாக வைத்துக் கதைக் கோர்வையுடன் பாடப்படும் பாடல்கள் கதைப்பாடல்கள். இவை பல மணி நேரங்கள் பாடக்கூடியதாக அமைந்திருக்கும். ‘பவளக்கொடி', 'அல்லி அரசாணிமாலை', 'நல்லதங்காள்' முதலான பெண் வரலாற்றுக் கதைப்பாடல்களும் 'கட்டபொம்மன்', ‘தீரன்சின்னமலை', ‘பொன்னர் சங்கர்' முதலான வரலாற்று நாயகர்களைச் சித்திரிக்கும் கதைப்பாடல்களும் தமிழகத்தில் வழங்கி வருகின்றன. இந்தக் கதைப்பாடல்களை விழாக் காலங்களில் வில்லுப்பாட்டாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தப்படுகின்றன.

பழமொழிகள்

நாட்டுப்புற மக்களின் பேச்சுக்களிடையே கிடைக்கும் அனுபவத் தெறிப்புகளே பழமொழிகள். மூத்தோர்கள் உரையாடல்களில் பழமொழிகள் மிகுதியாக இடம்பெறும். பழமொழிகள் இடம், காலம், சூழ்நிலைகளைப் பொருத்து கிராமப்புற மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. ‘பழமையான மொழிகளே பழமொழிகள்' என்றும், 'பழம் போன்ற மொழிகளே பழமொழிகள்' என்றும், 'அறிவாலும் அனுபவத்தாலும் பழுத்த மொழிகளே பழமொழிகள்' என்றும் பழமொழிக்குப் பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. மக்களது பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நாகரிக நிலைகளை அறிந்து கொள்ளப் பழமொழிகள் துணைபுரிகின்றன.

விடுகதைகள்

விடுவிக்கப்பட வேண்டியவை விடுகதைகள். அதாவது மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதையே விடுகதை என்று அழைக்கப்படுகிறது. அறிவூட்டுவதும் சிந்தனையைத் தூண்டுவதும் விடுகதையின் நோக்கம். விடுகதைகள் புதிர், வெடி, நொடிக்கதை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியர் தொல்காப்பியம் செய்யுளியலில் விடுகதையைப் 'பிசி' என்று குறிப்பிட்டுள்ளார்.

புராணங்கள்

நாட்டுப்புற மக்களிடையே வாழ்ந்து தெய்வமாக வழிபடப்படும் வீரர்களைப் பற்றியும், நாயகர்களையும், மாண்ட பெண்களைப் பற்றியும் கதையாகவோ, பாடலாகவோ, கதைப்பாடல்களாகவோ புராணங்கள் அமைந்துள்ளன. இவை தொனம் கூறுகளைத் தம்முள் உள்ளடக்கியுள்ளன.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:26:02 IST