standardised

ஆனந்தபோதினி: Difference between revisions

From Tamil Wiki
(Standardised)
(Moved to Standardised)
Line 1: Line 1:
{{ready for review}}
{{Standardised}}
[[File:AB-2.jpg|thumb|ஆனந்தபோதினி இலச்சினை]]
[[File:AB-2.jpg|thumb|ஆனந்தபோதினி இலச்சினை]]
ஆனந்தபோதினி (1915-1960) தமிழில் வெளிவந்த ஒரு பல்சுவை இதழ். என்.முனிசாமி முதலியாரால் ஆனந்தபோதினி அச்சகத்தில் இருந்து நடத்தப்பட்டது. முதலாண்டு முடிவில் ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இருபத்தைந்தாண்டுக்காலம் வாசக வரவேற்புடன் நிகழ்ந்தது. 1960 வரை வெவ்வேறு வடிவங்களில் வெளியாகி பின்னர் நின்றது.

Revision as of 11:45, 5 February 2022

⨮ Standardised

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

ஆனந்தபோதினி இலச்சினை

ஆனந்தபோதினி (1915-1960) தமிழில் வெளிவந்த ஒரு பல்சுவை இதழ். என்.முனிசாமி முதலியாரால் ஆனந்தபோதினி அச்சகத்தில் இருந்து நடத்தப்பட்டது. முதலாண்டு முடிவில் ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இருபத்தைந்தாண்டுக்காலம் வாசக வரவேற்புடன் நிகழ்ந்தது. 1960 வரை வெவ்வேறு வடிவங்களில் வெளியாகி பின்னர் நின்றது.

வரலாறு

ஆனந்தபோதினி பக்கம்

1915ல் நாகவேடு முனிசாமி முதலியார் ஆனந்தபோதினி இதழை தொடங்கினார். பல்லாயிரம் சந்தாதாரர்களை பெற்று சிறப்பாக இவ்விதழ் நடைபெற்றது. ஆனந்தபோதினியின் வெற்றியால் கவரப்பட்டு இரு இதழ்கள் தொடங்கப்பட்டன. 1925ல் ஆனந்த விகடனும் 1926ல் ஆனந்தகுணபோதினியும் தொடங்கப்பட்டன. அவை இரண்டும் ஆனந்தபோதினியின் அதே வடிவில் இருந்தன. ஆகவே நாகவேடு முனிசாமி முதலியார் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனந்தவிகடன் தன் அமைப்பை மாற்றிக்கொண்டது. ஆனந்தகுணபோதினி அமிர்தகுணபோதினி என்று பெயரை மாற்றிக்கொண்டது. கல்கி ஆசிரியராக வந்தபின் ஆனந்தவிகடன் தொடர்ந்து வெற்றிபெற்று பெரிய இதழாக வளர்ந்தது. ஆனந்தகுணபோதினி படிப்படியாகச் செல்வாக்கிழந்து அவ்வப்போது வெளியாகி 1960ல் மறைந்தது.

உள்ளடக்கம்

ஆனந்தகுணபோதினி முதன்மையாக ஆரணி குப்புசாமி முதலியாரின் நீள்கதைகளை வெளியிட்டது. அதற்காகவே அதை வாசகர்கள் விரும்பி வாங்கினர். இது புத்தகத்தின் வடிவமைப்பு கொண்டது. ரா.பி.சேதுப்பிள்ளை, தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்,எம்.மாணிக்க நாயகர், கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை என அக்காலத்தைய தமிழறிஞர்கள் பெரும்பாலானவர்கள் அதில் எழுதினர்.

ஆனந்தபோதினியின் ஜூலை 1920 முதல் டிசம்பர் 1944 வரை உள்ள மாத இதழ்களின் கட்டுரை தொகுப்பு ஓர் இணையப்பக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது (ஆனந்தபோதினி). ஆனந்த போதினியின் இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை