செல்வகுமார் பேச்சிமுத்து: Difference between revisions
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 24: | Line 24: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|12-Oct-2025, 00:30:12 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 03:44, 12 October 2025
செல்வகுமார் பேச்சிமுத்து (பிறப்பு: மார்ச் 03, 1996) தமிழ் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறார். சினிமா துறையில் நடிகராக முயற்சித்து வருகிறார்.
பிறப்பு, கல்வி
செல்வகுமார் பேச்சிமுத்து மார்ச் 03, 1996 அன்று தென்காசி மாவட்டம் அக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டம்) புளியரை அருகே உள்ள தெற்குமேடு கிராமத்தில் பேச்சிமுத்து, மாரியம்மாள் இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி சரவணசுந்தரி. ஆரம்பக் கல்வியை தெற்குமேடு அரசு தொடக்கப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை புளியரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். மேல்நிலைக் கல்வி செங்கோட்டையிலுள்ள எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கற்றார். தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பு திண்டிவனம் பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில் பயின்றார். பாரதிராஜா பன்னாட்டு பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு பிரிவில் ஒரு வருட டிப்ளமோ பயின்றுள்ளார்.
தனி வாழ்க்கை
செல்வகுமார் பேச்சிமுத்து தற்போது சென்னையில் வசித்து வருகிறார். திரைத்துறையில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
செல்வகுமார் கல்லூரி நாட்களிலேயே பேச்சுப்போட்டியிலும், பட்டிமன்றங்களில் பேசுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது முதல் சிறுகதை, “வேலம்மா”, ஜீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய இலக்கிய போட்டியில் பத்து கதைகளில் ஒன்றாக தேர்வாகியது. "Until then there's coffee" என்ற ஆங்கிலத் தொகுப்பிலும் இடம்பெற்றது. செல்வகுமார் எழுதிய முதல் நாவல் 'கெளிமதம்' டிசம்பர் 2024-ல் வெளிவந்தது.
நூல்கள்
நாவல்
- கெளிமதம் (டிசம்பர் - 2024, யாவரும் பதிப்பகம்)
வெளி இணைப்புகள்
- Jayan Gopalakrishnan speech | செல்வக்குமார் பேச்சிமுத்து - 'கெளிமதம்' | நூல் வெளியீட்டு விழா
- Selvakumar Petchimuthu speech | செல்வக்குமார் பேச்சிமுத்து - 'கெளிமதம்' | நூல் வெளியீட்டு விழா
- கெளிமதம் -செல்வக்குமார் பேச்சிமுத்து: ஆசிரியர் குறிப்பு, சரவணன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Oct-2025, 00:30:12 IST