கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் (ஆறகளூர்): Difference between revisions

From Tamil Wiki
Line 13: Line 13:
== கல்வெட்டுகள் ==
== கல்வெட்டுகள் ==
இந்த ஆலயத்தில் மொத்தம் 9 கல்வெட்டுகள் உள்ளன. பொன்பரப்பின வாணகோவரையன் மற்றும் புண்ணியவாட்டி நாச்சியார் பொயு 12 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தை கட்டிய செய்தியை அவை கூறுகின்றன.  

==== புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு ====

ஆறகழூரில் உள்ள கரி வரதராஜபெருமாள் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

====== சோழர்கால கல்வெட்டு ======
====== சோழர்கால கல்வெட்டு ======
கமலமங்கை கோயில்றகழூரில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் ஒரு சிவன்கோயில் இருந்து அழிந்து போனதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை உள்ளது. இங்கு இருந்த 6 சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டன.இங்கு இருந்த பைரவர் சிலை அருகே உள்ள மாரியம்மன் கோயிலிலும், சண்டிகேசுவரர் சிலை தேர்முட்டி அருகே உள்ள அகழ்பள்ளத்தின் தெற்குகரையிலும் இன்றும் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் சிதைந்திருந்த இக்கோயிலில் இருந்த கற்களை பயன்படுத்தி கரிவரதராஜ பெருமாள் கோயிலின் உள்ளே கமலமங்கை நாச்சியார் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு சான்றாக அந்த சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னர் தானம் அளித்த கல்வெட்டு கமலமங்கை நாச்சியார் கோயிலில் காணப்படுகிறது.

கமலமங்கை நாச்சியார் கோயிலின் அர்த்த மண்டபத்தின் தென்புற உபபீடத்தில் கல்வெட்டு 4 வரிகளில் உள்ளது. கி.பி 1269 ஆம் ஆண்டு முதலாம் சடையவர்மசுந்தரபாண்டியனின் 18 ஆம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ஆறகழூர் உடையார் வயி ராவண ஈஸ்வரமுடைய நாயனார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் மகதை மண்டலத்தில் உள்ள தொழுவூர் (இன்றைய தொழுதூர்) என்ற ஊரில் பெரிய ஏரிக்கு அருகே முதல் தரத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. இந்த நிலமானது சொக்கன் தடி என்ற அளவுகோலால் அளந்து தரப்பட்டது. நிலத்துக்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகளில் சூலக்கற்கள் நிறுவப்பட்டு எல்லைகள் உறுதி செய்யப்பட்டது. சந்திரன் உள்ள வரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வெட்டாகவும், செப்பேடாகவும் பொறிக்கப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. வாணாதிதேவன் என்பவர் இக்கல்வெட்டை பொறித்துள்ளார்.இக்கல்வெட்டின் மூலம் பல புதிய செய்திகள் நமக்கு தெரிய வந்துள்ளன. தற்போது கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் இருந்து அழிந்து போன சிவன் கோயிலின் பெயர் ராவண ஈஸ்வரமுடையநாயனார் கோயில்  

====== நாயக்கர்கால கல்வெட்டு ======
====== நாயக்கர்கால கல்வெட்டு ======
17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் கீழ் பாளையக்காரர்களாக  சேலம் நாயக்க மன்னர்கள் வாழப்பாடி அருகே உள்ள பேளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். சின்னம்மநாயக்கர் என்பவர் மன்னராக இருந்தார். இவருக்கு சின்னபூபாலர் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவருக்கு பெத்தநாயக்கன், திருமலைநாயக்கர், ராமன்,லட்சுமணன்,வேங்கடப்ப நாயக்கர், சின்னப்ப நாயக்கர் என ஆறு மகன்கள் இருந்ததாக செக்கடிப்பட்டி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் ராமனும், லட்சுமணனும் இரட்டை பிள்ளைகள். இவர்கள் அனைவரின் பெயரிலும் பேளூர் மற்றும் ஆத்தூரை சுற்றி ஊர் பெயர்கள்  இன்றும் அமைந்துள்ளன. பெத்தநாயக்கன் பெயரால் அமைந்த ஊர் பெத்தநாயக்கன் பாளையம், சின்னம்மநாயக்கன் பாளையம்,ராமநாயக்கன் பாளையம்,லட்சுமண சமுத்திரம் போன்றவை இவர்கள் பெயரில் அமைந்த ஊர்களாகும். சேலம்,வாலிகண்டாபுரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி வரை இவர்கள் ஆட்சி செய்தனர். ஆறகழூரும் இவர்கள் ஆட்சிப்பகுதியில் இருந்தது.

Line 30: Line 27:

இக்கோயிலை கட்டிய பெத்தநாயக்கன், அவர் தந்தை திருமலை நாயக்கர் ஆகியோரின் உருவங்கள் கோயிலில் உள்ள தூண்களில் காணப்படுகிறது. இவர்களின் உருவங்களுக்கு மேலே இவர்களின் அரசு சின்னமான சூரியன், பிறை நிலா நடுவே குறுவாள் கொண்ட முத்திரை காணப்படுகிறது.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://tamilnadu-favtourism.blogspot.com/2016/05/karivaradharaja-perumal-temple-aragalur.html ஆறகளூர் கரிவரதராஜ பெருமாள் ஆலயம்]  

Line 37: Line 33:
* [https://youtu.be/VrRkBWCAUBs ஆறகளூர் கரிவரதராஜர் கோயில் காணொளி]

*[https://veludharan.blogspot.com/2016/10/sri-kari-varadharaja-perumal-aragalur.html வேலுதரன் ஆறகளூர் கரிவரதராஜர் ஆலயம்]

*[http://ponvenkata.blogspot.com/2020/11/blog-post.html ஆறகளூர் கல்வெட்டுகள். பொன்.வெங்கடேசன்]

Revision as of 22:42, 13 September 2022

கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்
கரிவரதராஜப் பெருமாள்
கரிவரதராஜப் பெருமாள் தாயார் சன்னதி

கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் (ஆறகளூர்) (பொயு 12 ஆம் நூற்றாண்டு)

இடம்

சேலம் மாவட்டத்திலுள்ள ஆறகளூர்ரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆறகளூர் சோழர் ஆட்சிக்காலத்தில் மகதை மண்டலம் என்னும் சிற்றரசின் தலைநகர். இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி,கள்ளக்குறிச்சி மாவட்டம்,பெரம்பலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதிகள் மகதை நாட்டில் அடங்கி இருந்தது.

வரலாறு

பொயு 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகழூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரி வரதராஜ பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன. வாணகோவரையனின் மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் என்பவர் கரி வரதராஜபெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் போன்றவற்றை கட்டி விமானமும் அமைத்தார் என இக்கோயிலின் கருவறையின் வடக்கே உள்ள வெளிப்புற கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு

கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் மேற்குரோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன் திருக்குளம் உள்ளது. ராஜகோபுரம் மூன்றடுக்கு கொண்டது. சாலையின் ஓரமாக முகப்பில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. நீள்சதுர வடிவமானது கருவறை. ஆண்டாளுக்கும், தாயாருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. இங்கே முகமண்டபத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களுடன் பத்தாவது அவதாரமாக புத்தரும் செய்துக்கப்பட்டுள்ளார். முகமண்டபம் நாயக்கர் காலத்தையது என்று அதிலுள்ள நாயக்கர்கால முத்திரையை கொண்டு ஊகிக்கிறார்கள்.

மூலவர்

கருவறையில் வரதராஜப் பெருமாள் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி இருவரும் இருபக்கமும் நிற்க நின்ற கோலத்தில் உள்ளார். தனி சன்னிதியாக தாயார் கமலவல்லி கோயில் கொண்டிருக்கிறார். கமலவல்லி சன்னிதியின் நேர்முன்னால் நாகதேவியின் சன்னிதி உள்ளது.

கல்வெட்டுகள்

இந்த ஆலயத்தில் மொத்தம் 9 கல்வெட்டுகள் உள்ளன. பொன்பரப்பின வாணகோவரையன் மற்றும் புண்ணியவாட்டி நாச்சியார் பொயு 12 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தை கட்டிய செய்தியை அவை கூறுகின்றன.

புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

ஆறகழூரில் உள்ள கரி வரதராஜபெருமாள் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

சோழர்கால கல்வெட்டு

கமலமங்கை கோயில்றகழூரில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் ஒரு சிவன்கோயில் இருந்து அழிந்து போனதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை உள்ளது. இங்கு இருந்த 6 சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டன.இங்கு இருந்த பைரவர் சிலை அருகே உள்ள மாரியம்மன் கோயிலிலும், சண்டிகேசுவரர் சிலை தேர்முட்டி அருகே உள்ள அகழ்பள்ளத்தின் தெற்குகரையிலும் இன்றும் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் சிதைந்திருந்த இக்கோயிலில் இருந்த கற்களை பயன்படுத்தி கரிவரதராஜ பெருமாள் கோயிலின் உள்ளே கமலமங்கை நாச்சியார் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு சான்றாக அந்த சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னர் தானம் அளித்த கல்வெட்டு கமலமங்கை நாச்சியார் கோயிலில் காணப்படுகிறது.

கமலமங்கை நாச்சியார் கோயிலின் அர்த்த மண்டபத்தின் தென்புற உபபீடத்தில் கல்வெட்டு 4 வரிகளில் உள்ளது. கி.பி 1269 ஆம் ஆண்டு முதலாம் சடையவர்மசுந்தரபாண்டியனின் 18 ஆம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ஆறகழூர் உடையார் வயி ராவண ஈஸ்வரமுடைய நாயனார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் மகதை மண்டலத்தில் உள்ள தொழுவூர் (இன்றைய தொழுதூர்) என்ற ஊரில் பெரிய ஏரிக்கு அருகே முதல் தரத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. இந்த நிலமானது சொக்கன் தடி என்ற அளவுகோலால் அளந்து தரப்பட்டது. நிலத்துக்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகளில் சூலக்கற்கள் நிறுவப்பட்டு எல்லைகள் உறுதி செய்யப்பட்டது. சந்திரன் உள்ள வரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வெட்டாகவும், செப்பேடாகவும் பொறிக்கப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. வாணாதிதேவன் என்பவர் இக்கல்வெட்டை பொறித்துள்ளார்.இக்கல்வெட்டின் மூலம் பல புதிய செய்திகள் நமக்கு தெரிய வந்துள்ளன. தற்போது கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் இருந்து அழிந்து போன சிவன் கோயிலின் பெயர் ராவண ஈஸ்வரமுடையநாயனார் கோயில்

நாயக்கர்கால கல்வெட்டு

17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் கீழ் பாளையக்காரர்களாக  சேலம் நாயக்க மன்னர்கள் வாழப்பாடி அருகே உள்ள பேளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். சின்னம்மநாயக்கர் என்பவர் மன்னராக இருந்தார். இவருக்கு சின்னபூபாலர் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவருக்கு பெத்தநாயக்கன், திருமலைநாயக்கர், ராமன்,லட்சுமணன்,வேங்கடப்ப நாயக்கர், சின்னப்ப நாயக்கர் என ஆறு மகன்கள் இருந்ததாக செக்கடிப்பட்டி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் ராமனும், லட்சுமணனும் இரட்டை பிள்ளைகள். இவர்கள் அனைவரின் பெயரிலும் பேளூர் மற்றும் ஆத்தூரை சுற்றி ஊர் பெயர்கள்  இன்றும் அமைந்துள்ளன. பெத்தநாயக்கன் பெயரால் அமைந்த ஊர் பெத்தநாயக்கன் பாளையம், சின்னம்மநாயக்கன் பாளையம்,ராமநாயக்கன் பாளையம்,லட்சுமண சமுத்திரம் போன்றவை இவர்கள் பெயரில் அமைந்த ஊர்களாகும். சேலம்,வாலிகண்டாபுரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி வரை இவர்கள் ஆட்சி செய்தனர். ஆறகழூரும் இவர்கள் ஆட்சிப்பகுதியில் இருந்தது.

சின்னம்மநாயக்கரின் மகன் திருமலை நாயக்கர்.அவருக்கு பெத்தநாயக்கன் என்ற ஒரு மகன் இருந்தது ஆறகழூர் கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. கரியபெருமாள் கோயிலில் உள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் வடக்குப்பக்கம் அர்த்தமண்டபம் முதல் கருவறை வரை செல்லும் குமுதப்படையில் மூன்று வரிகளில் கல்வெட்டு அமைந்துள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேஸ்வரர் என கல்வெட்டு துவங்குகிறது.இக்கோயிலை கரிய பெருமாள் கோயில் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் வீரராமதேவ மகராயரின் மெய்கீர்த்திகள் சொல்லப்பட்டுள்ளன.சேர,சோழ,பாண்டியரை வென்றவர் எனவும் குறிப்பிடப்பட்டு நட்சத்திர குறிப்புகளும் வருகின்றன.கி.பி. 1618 ஆம் ஆண்டு இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.சேலம் நாயக்க மன்னர்களுக்கு நரலோககண்டன் என்ற பட்டம் இருப்பதை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

மகதை மண்டலம் ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகழூர் கரிய பெருமாள் கோயிலில் புதிதாக கமலமங்கை நாச்சியாருக்கு என தனி கோயில் அமைக்கப்பட்டு கருவறை, அர்த்தமண்டபம்,மகாமண்டம், கட்டப்பட்டு இறை உருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மதனகோபாலசாமிக்கு என ஒரு தனி கோயில் கட்டப்பட்டு இறை உருவங்கள் நிறுவப்பட்டன. ஆண்டாளுக்கு என ஒரு தனி கோயிலும் கட்டப்பட்டு ஆண்டாள் உருவம் செய்து வைக்கப்பட்டது. ஆண்டாளை கிருஷ்ண உபய நாச்சியார் என கல்வெட்டு கூறுகிறது. சேனைமுதலியார் உருவமும் நிறுவப்பட்டது என கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டில் வடமொழி அதிகம் கலந்துள்ளது. இந்த கல்வெட்டை சேலம் திருமலை நாயக்கரின் மகன் பெத்தநாயக்கன் என்பவர் பொறித்துள்ளார். இதன் மூலம் கமலமங்கை நாச்சியார்,மதனகோபாலசாமி,ஆண்டாள் கோயில்களை பெத்தநாயக்கன் கட்டிஉள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த தர்மம் காலம் முழுதும் நிற்கவேண்டும் என கல்வெட்டு குறிப்பிடுகிறது

உசாத்துணை