under review

பெருவழிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 21: Line 21:
சேலம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஆறகளூர் அருகில் மகதேசன் பெருவழி - காஞ்சிபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பெருவழி கொங்கு மணடலத்தை காஞ்சிபுரத்துடன் இணைக்கும் பெருவழியாக இருந்துள்ளது. வாணர் என்ற சிற்றரச மன்னர் குலத்தினர் கொங்கு நாட்டின் வடக்கு பகுதியில் ’மகதை மண்டலம்’ எனக் கூறப்படுகின்ற இடத்திற்கு மன்னராக இருந்துள்ளனர். இவர்களுள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கீழிருந்து மகதை நாடாழ்வான் ’காஞ்சியும், வஞ்சியும் கொண்ட’ என்ற பெயரையும் பெற்றிருந்தான். இவன் காஞ்சி கொண்டதன் நினைவாக காஞ்சிக்கு செல்லும் மகதேசன் பெருவழி எழுப்பியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

===== தஞ்சாவூர் பெருவழிகள் =====
===== தஞ்சாவூர் பெருவழிகள் =====
* தஞ்சாவூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறை மகாதேவர் கோவிலுக்கு திருவிளக்குகள் வைக்க குலோத்துங்க சோழனின் பதினான்காம் ஆட்சியாண்டில் அம்பர் நாட்டவர் நன்கொடையாக நிலம் வழங்கியதையும், அதன் நான்கு எல்லைகளைக் குறிப்பிடும் போதும் ''‘தஞ்சாவூர்ப் பெருவழிக்கு வடக்கு’'' என்ற குறிப்பு வருகிறது. இதே கோவிலில் உள்ள மற்றொரு துண்டுக்கல்லிலும் இக்குறிப்பு காணக்கிடைக்கிறது.
* தஞ்சாவூர் மாவட்டம் அவளிவணல்லூர் அருகில் உள்ள முனியூர் சிவன் கோவிலில் மூன்றாம் இராஜராஜசோழனின் நான்காம் ஆண்டு கல்லெழுத்து சாசனத்தில் ''‘தஞ்சாவூர்ப் பெருவழிக்கு வடக்கும், மேல்பாற்கெல்லை''’ என்ற மற்றொரு பெருவழி பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. முனியூர் வெண்ணாற்றின் வடகரையில் உள்ள ஊர், இதனை ஒட்டி அவளிவணல்லூர், அரதைப் பெரும்பாழி என தேவாரம் பாடப்பெற்ற தளங்கள் இரண்டு உள்ளன. எனவே திருஇரும்பூளை என்றழைக்கப்படும் ஆலங்குடியிலிருந்து, அரதைப் பெரும்பாழி, முனியூர், இரும்புதலை, கோவத்தக்குடி, உதாரமங்கலம், குலமங்கலம் வழியாக வெண்ணாற்றின் வடகரை தொடர்ந்து தஞ்சைக்கு வடக்காக செல்லும் கோடிவனமுடையாள் பெருவழியோடு இப்பெருவழி இணைந்திருக்க வேண்டுமென ஆய்வாளர் [[குடவாயில் பாலசுப்ரமணியன்]] கருதுகிறார்.
====== கோடிவனமுடையாள் பெருவழி ======
====== கோடிவனமுடையாள் பெருவழி ======
{{Being created}}
பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபனின் முப்பத்தைந்தாம் ஆண்டு சாசனம் ’திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான்’ எனத் தொடங்கும் கல்வெட்டொன்று தஞ்சாவூரில் உள்ளது. சாமந்த நாராயண விண்ணகரத்து எம்பெருமானுக்கும், சதுர்வேதி 106 பட்டர்களுக்கு தொண்டைமானார் என்பவர் அளித்த நிலக் கொடை பற்றிய குறிப்பில் ‘கோடிவனமுடையாள் பெருவழி’ பற்றிய விவரணை வருகிறது. தற்போதுள்ள கருந்திட்டைக்குடி என்ற ஊரின் நடுவே செல்லும் பெருவழியாக அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. தஞ்சை கோவிலின் வடக்கு வாசலிலிருந்து தொடங்கி வடவாற்றைத் தாண்டி, கண்டியூர், திருவையாறு வழியாக செல்லும் நெடுவழி தான் கோடிவனமுடையாள் பெருவழி. தற்போது வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ள கோடிவனமுடையாள் திருக்கோவிலை ஒட்டிச் சென்றதால் இப்பெயர் பெற்றது.
 
== உசாத்துணைகள் ==
 
* தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம் பதிப்பகம்
* கல்வெட்டுக் கலை, பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், என்.சி.பி.ஹெச்.
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}

Revision as of 23:43, 11 September 2022

பெருவழி பழைய கால நகரங்களையும், ஊர்களையும் இணைக்கும் பெருஞ்சாலைகள். பெருவழி அருகே ஊர்களின் தூரங்களைக் குறிப்பிடும் நெடுவழிக் கற்களைப் பதித்திருப்பர். பெருவழிகள் வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களைக் கொண்டு செல்லவும், மக்களின் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டு பெருவழிகள்

தமிழகத்தில் சங்க காலம் முதல் பெருவழிகள் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. பெரும்பாணாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு ஆகிய சங்க இலக்கியப் பாடல்களில் பெருவழி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் சோழநாட்டிலுள்ள பூம்புகார் மற்றும் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் பெருவழியைப் பற்றிய குறிப்பு வருகிறது.

ஆனைமலை, திருமூர்த்தி மலை, ஐவர் மலை ஆகிய மலைகளை ஒட்டிச் செல்லும் பெருவழிகள் இன்றும் உள்ளன. இப்பெருவழிகளுக்கு அருகில் வடபூதி நத்தம், ஆனைமலை, சி. கலையமுத்தூர் ஆகிய ஊர்களில் இரண்டாயிரம் ரோமானிய காசுகள் கண்டறியப்பட்டுள்ளன. இடைக்காலக் கல்வெட்டில் இதற்கு வீர நாராயணப் பெருவழி எனப் பெயர் காணப்படுகிறது.

கொங்ககுலவள்ளி வீதி, நாட்டுப் பெருவழி, இராஜமகேந்திர பெருவழி, காரித்துறைப் பெருவழி, மேலைப் பெருவழி, கொழுமத்திற்குப் போகிற வழி, சேரனை மென் கொண்ட சோழன் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, பாலைப் பெருவழி எனப் பல சாலைகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டு வாயிலாகக் கிடைத்துள்ளன.

இராஜசேகரப் பெருவழி

பழனி, மதுரை வழியாக இராமேஸ்வரம் செல்லும் பெருவழிக்குச் சோழர் காலத்தில் அசுரர்மலைப் பெருவழி எனப் பெயர் இருந்துள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள தில்லை கோவிலின் ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று கொங்குப் பெருவழி என்ற பெருவழியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. முதலாம் ஆதித்தசோழன் (பொ.யு. 870 - 907) கொங்கு நாட்டைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததிலிருந்து கொங்குப் பெருவழிக்கு ‘இராஜகேசரிப் பெருவழி’ எனப் பெயர் மாற்றினான் என்ற கருத்தும் உள்ளது.

இப்பெருவழி முதலில் மேற்குக் கடற்கரையில் சேர நாட்டு முசுறியும் கிழக்கில் பூம்புகாரையும் இணைக்கும் பெருவழியாக இருந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் சோழர்களின் துறைமுகமான நாகப்பட்டினம் மேற்கு கடற்கரையில் கள்ளிக் கோட்டையுடன் இணையும் பெருவழியாக இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள சுண்டைக்காய் முத்தூரில் உள்ள அய்யாசாமி மலையில் இராஜசேகரிப் பெருவழியும் அதனைக் குறிக்கும் கல்வெட்டும் உள்ளது. இக்கல்வெட்டு தமிழிலும் வட்டெழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதியில் ‘ஸ்வஸ்திஸ்ரீ கோ இராஜசேகரிப் பெருவழி’ என்ற குறிப்பு மட்டும் உள்ளது வட்டெழுத்துக் கல்வெட்டு பகுதியில் ‘ஸ்வஸ்திஸ்ரீகோ இராஜகேசரிப் பெருவழி’ என்ற வாசகத்துடன் ஒரு வெண்பாவும் இடம்பெற்றுள்ளது. அதில் சோழ மன்னனின் பெயர் நேரடியாகக் குறிப்பிடாமல் ‘கோச்சோழன் வளங்காவிரிநாடன், கோழியர் கோக்கண்டன்’ என்ற குறிப்பு மட்டும் உள்ளது.

திருநெய்த்தானத்தில் உள்ள முதலாம் ஆதித்த சோழனின் கல்வெட்டில் ‘பல்யானை கோக்கண்டன் தொண்டை நாடு பாவின கோ இராஜகேசரி’ என்ற குறிப்பு ஆதித்த சோழனைச் சுட்டுகிறது. இதன் மூலம் பெருவழி கல்வெட்டில் உள்ள கோக்கண்டனும், இராஜகேசரியும் ஆதித்த கரிகாலனைச் சுட்டுகிறது என ஆய்வாளர்கள் பொ. இராஜேந்திரன், சொ. சாந்தலிங்கம் குறிப்பிடுகின்றனர். மேலும் கொங்கு நாட்டை ஆதித்த கரிகாலன் வென்றதற்கு கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த பொன்னை சிற்றம்பலத்திற்கு வேய்ந்த செய்தியை நம்பியாண்டார் நம்பி பாடல் வரி மூலம் அறிய முடிகிறது. (’சிற்றம் பல முகடு கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்’).

இந்த பெருவழி மலை இடுக்குகளின் நடுவே கற்களைப் பாவி அமைக்கப்பட்டுள்ளதால் இன்றும் சிதையாமல் உள்ளது.

அதியமான் பெருவழி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பதிகால் பள்ளம் என்ற ஊரில் “அதியமான் பெருவழி” என்ற கல்வெட்டுடன் கூடிய பெருவழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு உட்பட்ட மியூசியத்தில் பாதுகாக்கப்படுகிறது.

பிற்காலச் சோழர் காலத்தில் அவர்களின் சிற்றரசர்களாக இருந்த அதியமான்களுள் ஒருவரால் இப்பெருவழி உருவாக்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் உருவ அமைதி பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் குறிப்பிட்டுள்ள காத அளவை ஆராய்ந்த ஆய்வாளர்கள் பொ. இராஜேந்திரன், சொ. சாந்தலிங்கம் தாவளம் என்று கல்வெட்டில் வரும் ஊர் 194 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது என்றும், எனவே அதியமான் பெருவழி தருமபுரி பகுதியில் பெரிய பெருவழியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.

மகதேசன் பெருவழி

சேலம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஆறகளூர் அருகில் மகதேசன் பெருவழி - காஞ்சிபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பெருவழி கொங்கு மணடலத்தை காஞ்சிபுரத்துடன் இணைக்கும் பெருவழியாக இருந்துள்ளது. வாணர் என்ற சிற்றரச மன்னர் குலத்தினர் கொங்கு நாட்டின் வடக்கு பகுதியில் ’மகதை மண்டலம்’ எனக் கூறப்படுகின்ற இடத்திற்கு மன்னராக இருந்துள்ளனர். இவர்களுள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கீழிருந்து மகதை நாடாழ்வான் ’காஞ்சியும், வஞ்சியும் கொண்ட’ என்ற பெயரையும் பெற்றிருந்தான். இவன் காஞ்சி கொண்டதன் நினைவாக காஞ்சிக்கு செல்லும் மகதேசன் பெருவழி எழுப்பியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தஞ்சாவூர் பெருவழிகள்
  • தஞ்சாவூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறை மகாதேவர் கோவிலுக்கு திருவிளக்குகள் வைக்க குலோத்துங்க சோழனின் பதினான்காம் ஆட்சியாண்டில் அம்பர் நாட்டவர் நன்கொடையாக நிலம் வழங்கியதையும், அதன் நான்கு எல்லைகளைக் குறிப்பிடும் போதும் ‘தஞ்சாவூர்ப் பெருவழிக்கு வடக்கு’ என்ற குறிப்பு வருகிறது. இதே கோவிலில் உள்ள மற்றொரு துண்டுக்கல்லிலும் இக்குறிப்பு காணக்கிடைக்கிறது.
  • தஞ்சாவூர் மாவட்டம் அவளிவணல்லூர் அருகில் உள்ள முனியூர் சிவன் கோவிலில் மூன்றாம் இராஜராஜசோழனின் நான்காம் ஆண்டு கல்லெழுத்து சாசனத்தில் ‘தஞ்சாவூர்ப் பெருவழிக்கு வடக்கும், மேல்பாற்கெல்லை’ என்ற மற்றொரு பெருவழி பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. முனியூர் வெண்ணாற்றின் வடகரையில் உள்ள ஊர், இதனை ஒட்டி அவளிவணல்லூர், அரதைப் பெரும்பாழி என தேவாரம் பாடப்பெற்ற தளங்கள் இரண்டு உள்ளன. எனவே திருஇரும்பூளை என்றழைக்கப்படும் ஆலங்குடியிலிருந்து, அரதைப் பெரும்பாழி, முனியூர், இரும்புதலை, கோவத்தக்குடி, உதாரமங்கலம், குலமங்கலம் வழியாக வெண்ணாற்றின் வடகரை தொடர்ந்து தஞ்சைக்கு வடக்காக செல்லும் கோடிவனமுடையாள் பெருவழியோடு இப்பெருவழி இணைந்திருக்க வேண்டுமென ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கருதுகிறார்.
கோடிவனமுடையாள் பெருவழி

பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபனின் முப்பத்தைந்தாம் ஆண்டு சாசனம் ’திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான்’ எனத் தொடங்கும் கல்வெட்டொன்று தஞ்சாவூரில் உள்ளது. சாமந்த நாராயண விண்ணகரத்து எம்பெருமானுக்கும், சதுர்வேதி 106 பட்டர்களுக்கு தொண்டைமானார் என்பவர் அளித்த நிலக் கொடை பற்றிய குறிப்பில் ‘கோடிவனமுடையாள் பெருவழி’ பற்றிய விவரணை வருகிறது. தற்போதுள்ள கருந்திட்டைக்குடி என்ற ஊரின் நடுவே செல்லும் பெருவழியாக அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. தஞ்சை கோவிலின் வடக்கு வாசலிலிருந்து தொடங்கி வடவாற்றைத் தாண்டி, கண்டியூர், திருவையாறு வழியாக செல்லும் நெடுவழி தான் கோடிவனமுடையாள் பெருவழி. தற்போது வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ள கோடிவனமுடையாள் திருக்கோவிலை ஒட்டிச் சென்றதால் இப்பெயர் பெற்றது.

உசாத்துணைகள்

  • தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம் பதிப்பகம்
  • கல்வெட்டுக் கலை, பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், என்.சி.பி.ஹெச்.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.