under review

விக்னேஷ் ஹரிஹரன்: Difference between revisions

From Tamil Wiki
Line 21: Line 21:
* [https://neeli.co.in/author/vignesh/ விக்னேஷ் ஹரிஹரன் - நீலி மின்னிதழில் எழுதிய கட்டுரைகள்]
* [https://neeli.co.in/author/vignesh/ விக்னேஷ் ஹரிஹரன் - நீலி மின்னிதழில் எழுதிய கட்டுரைகள்]
* [https://neeli.co.in/471/ விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – விக்னேஷ் ஹரிஹரன்]
* [https://neeli.co.in/471/ விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – விக்னேஷ் ஹரிஹரன்]
* விலா எலும்புகளின் பிரகடனம் கட்டுரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்  
* [https://www.jeyamohan.in/175343/ விலா எலும்புகளின் பிரகடனம் கட்டுரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்]
* [https://www.kurugu.in/2024/01/yakshagana-shivaram-karanth.html கர்நாடகத்தின் யக்ஷகானம்- சிவராம் காரந்த் - குருகு]
* [https://www.kurugu.in/2024/01/yakshagana-shivaram-karanth.html கர்நாடகத்தின் யக்ஷகானம்- சிவராம் காரந்த் - குருகு]
* [https://solvanam.com/2025/05/11/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99/ நமக்குத் தேவை நவீன நாடகங்கள் - சொல்வனம்]

Revision as of 13:55, 29 July 2025

விக்னேஷ் ஹரிஹரன்

விக்னேஷ் ஹரிஹரன் (பிறப்பு: மே 22, 1999) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாளர். விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சிறுகதைகள், கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

விக்னேஷ் ஹரிஹரன் சென்னையில் ராஜகோபால், சீதா இணையருக்கு மூத்த மகனாக மே 22, 1999இல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீமதி சுந்தரவள்ளி மெமோரியல் பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா சட்டக்கல்லூரியில் B.A. LL.B. (Hons.) பட்டம் பெற்றார். அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார். சென்னையிலுள்ள School of Excellence in Law-இல் LLM பயின்று வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

விக்னேஷ் ஹரிஹரன் தமிழில் ரசனை, விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சு.வேணுகோபாலின் சிறுகதையை "Resurrection" என்ற பெயரில் 2022-இல் மொழிபெயர்த்தார். இது 2022ஆம் ஆண்டிற்கான மொழி விருதுப்பட்டியலில் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சிறுகதைகள், கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறார்.

இவருடைய படைப்புகள் நீலி, வல்லினம், கனலி, வாசகசாலை, ஆவநாழி, சொல்வனம், காலச்சுவடு, தமிழ்ஹிந்து ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. இலக்கிய கூட்டங்களில் உரை நிகழ்த்துகிறார். பாரதியார், தி. ஜானகிராமன், அசோகமித்ரன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

படைப்பு இடம்பெற்ற நூல்கள்
  • The Mozhi Anthology of Short Stories (South Side Books) (su. Venugopal's 'Resurrection')

உரைகள்

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.