ஆறுமுக சீதாராமன்: Difference between revisions
No edit summary |
|||
| Line 24: | Line 24: | ||
* காசு இயல் அறிஞர் சோழ மண்டல நாணயியல் கழகம் | * காசு இயல் அறிஞர் சோழ மண்டல நாணயியல் கழகம் | ||
== நூல்கள் == | |||
* வரலாறு கூறும் தமிழ்க்காசுகள் .இரண்டு பாகங்கள் ( தங்கம் தென்னரசுவுடன் இணைந்து) | |||
* தமிழகக்காசுகள் | |||
* தஞ்சாவூர் மராட்டியர் காசுகள் | |||
* மதுரை நாயக்கர் காசுகள் | |||
* சங்ககால மோதிரங்கள் | |||
== உசாத்துணை == | |||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1l0U2#book1/ ஆறுமுக சீதாராமன் தமிழகக் காசுகள். இணையநூலகம்] | |||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9lZQ0#book1/ தஞ்சாவூர் மராட்டியர் காசுகள் ஆறுமுக சீதாராமன் தமிழ் இணையநூலகம்] | |||
* மதுரை நாயக்கர் காசுகள் ஆறுமுக சீதாராமன் | |||
* [https://youtu.be/_W-g4QdHogc ஆறுமுக சீதாராமன் உரை காணொளி] | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 10:48, 29 July 2025
ஆறுமுக சீதாராமன் (ஜனவரி 20, 1968) ஆய்வாளர், நாணயவியலாளர். பொ.யு.மு. ஒன்றாம் நூற்றாண்டு சங்ககால காசை ஆய்விற்குக் கொண்டு வந்தவர் என அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ஆறுமுக சீதாராமன் ஜனவரி 20, 1968 அன்று மயிலாடுதுறையில் சோம. ஆறுமுகம், தனலட்சுமி இணையருக்குப் பிறந்தார். ஆறுமுக சீதாராமனின் சொந்த ஊர் சிதம்பரம் அருகிலுள்ள அலக்குடி. தந்தை சோம. ஆறுமுகம் முதுநிலை பூச்சியியல் வல்லுநராகப் பணியாற்றியதால் சீதாராமன் தமிழகத்தின் பல பகுதிகளில் கல்வி பயின்றார். ஊட்டி செயிண்ட் ஜோசப் பள்ளியில் பத்தாம் வகுப்பும், கோயம்புத்தூர் சித்தாப்புத்தூர் கார்பரேஷன் உயர்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் தேர்ச்சிப் பெற்றார். இளங்கலை பி.ஏ. வரலாறு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் பயின்றார். முதுகலை எம்.ஏ. வரலாறு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
சீதாராமன் கயல்விழியை மே 25, 1997 அன்று திருமணம் செய்துக் கொண்டார். சீதாராமன் - கயல்விழி தம்பதியருக்கு ஒரு மகன் ஆதவ்ராம். சீதாராமன் முழு நேர நாணயவியல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஆய்வுகள்
ஆறுமுக சீதாராமனின் தாத்தா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
ஐராவதம் மகாதேவன் உடன் 25 ஆண்டுகள் தமிழ் பிராமி கல்வெட்டு சார்ந்து பணியாற்றினார்.ஸ்டேம்ப்ஸ் காயின்ஸ் 12 வயது முதல் கல்லூரியிலிருந்து தமிழக காசுகள்
1994 உலக தமிழ் மாநாட்டுக்காக - தமிழக தொல்லியல் சான்று தொகுதி - 1.
விருதுகள்
- 2017 - தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு (தமிழக காசுகள்)
- பம்பாயில் - முற்றா ரத்னா புரஷ்கார் (2021)
- தமிழ் செம்மல் விருது (2022)
- காசியில் செம்மல் விருது (2009)
- தொண்டை மண்டலம் நாணய மாமணி விருது (ஸ்டாலின் குணசேகரன் மக்கள் சிந்தனை மையம் )
- காசு இயல் அறிஞர் சோழ மண்டல நாணயியல் கழகம்
நூல்கள்
- வரலாறு கூறும் தமிழ்க்காசுகள் .இரண்டு பாகங்கள் ( தங்கம் தென்னரசுவுடன் இணைந்து)
- தமிழகக்காசுகள்
- தஞ்சாவூர் மராட்டியர் காசுகள்
- மதுரை நாயக்கர் காசுகள்
- சங்ககால மோதிரங்கள்
உசாத்துணை
- ஆறுமுக சீதாராமன் தமிழகக் காசுகள். இணையநூலகம்
- தஞ்சாவூர் மராட்டியர் காசுகள் ஆறுமுக சீதாராமன் தமிழ் இணையநூலகம்
- மதுரை நாயக்கர் காசுகள் ஆறுமுக சீதாராமன்
- ஆறுமுக சீதாராமன் உரை காணொளி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.