under review

பொருளொடு புகறல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 21: Line 21:
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:26, 24 July 2025

பொருளொடு புகறல் வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. இவ்வுலகப் பொருள்கள் மீதுள்ள பற்றை நீக்கி மெய்ப்பொருளை விரும்புவதே உண்மையான வெற்றி எனக் கூறும் துறை. உண்மையான தத்துவப் பொருளை ஆய்ந்து வாழ்வதே வெற்றி என உணர்த்துகிறது.

விளக்கம்

தொல்காப்பியம் ‘பொருளொடு புணர்ந்த பக்கம்’ என்று இதைக் குறிப்பிடுகிறது.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உலகப் பொருள்களின் மீதுள்ள பற்றினை நீக்கி, மெய்ப்பொருளை விரும்புதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வையகத்து விழைவு அறுத்து
மெய்ஆய பொருள் நயந்தன்று(கொளு 8.33)

வெண்பா

ஆம்இனி மூப்பும் அகன்றது இளமையும்
தாம்இனி நோயும் தலைவரும் - யாம் இனி
மெய் ஐந்தும் மீது ஊர வேகாது மேல்வந்த
ஐஐந்தும் ஆய்வது அறிவு (187)

பொருள்: நமது இளமைப் பருவம் சென்றது, முதுமை வருதல் தவிர்க்க முடியாதது . இனி நோய்களும் வரும் .ஆதலால் உடல் முதலான ஐந்து பொறிகளும் நம்மை வெற்றி கொள்ள விடாமல், இருபத்தைந்து தத்துவங்களையும் ஆய்ந்து உணர்வதே நல்லறிவு,

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page