under review

அழிசி பதிப்பகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 36: Line 36:
* [https://www.jeyamohan.in/149649/ ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி: ரம்யா, மதார்]
* [https://www.jeyamohan.in/149649/ ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி: ரம்யா, மதார்]
* [https://www.vikatan.com/news/literature/memories-of-writer-ss-chellappa எழுந்து வரும் எழுத்து!: ஆனந்தவிகடன்]
* [https://www.vikatan.com/news/literature/memories-of-writer-ss-chellappa எழுந்து வரும் எழுத்து!: ஆனந்தவிகடன்]
* அழிசியின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:41, 10 September 2022

அழிசி பதிப்பகம்

அழிசி பதிப்பகம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பதிப்பகம். ஸ்ரீநிவாச கோபலன் இதன் உரிமையாளர்.

பதிப்பகம் பற்றி

அழிசி பதிப்பகத்தை ஸ்ரீநிவாச கோபலன் மின்னூல் வெளியீடாக மார்ச் 2017இல் தொடங்கினார். மின்னூலாக எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் 'அங்கே இப்ப என்ன நேரம்?' முதல் வெளியீடாக வந்தது. 2021 முதல் அச்சு நூல்கள் வெளிவருகின்றன. அச்சு நூலில் முதல் வெளியீடாக மதாரின் 'வெயில் பறந்தது' கவிதைத் தொகுப்பு வந்தது. மெய்ப்பு நோக்குதல், அட்டை வடிவமைப்பு என பதிப்பு சார்ந்த அனைத்து வேலைகளையும் ஸ்ரீநிவாச கோபாலன் செய்கிறார். செப்டம்பர் 29, 2021இல் சி.சு. செல்லப்பாவின் பிறந்தநாளில் 112 எழுத்து இதழ்களை மின்னூலாக்கும் பணியை ஆரம்பித்து தொடர்ந்து செய்து வருகிறார்.

ஸ்ரீநிவாச கோபாலன்

நோக்கம்

  • நெடுங்காலமாக மறுபதிப்பு காணாத அரிய நூல்களை மீண்டும் பதிப்பிப்பது.

நான் கண்ட மகாத்மா 1951க்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. திருச்சி ஜெயில், நாரத ராமாயணம் இரண்டும் ஏற்கெனவே மறுபதிப்பு கண்டவை என்றாலும் அந்த மறுபதிப்புகளில் முன்னுரை, பதிப்புரை, இணைப்புகள் முதலியவை விடுபட்டிருந்தன. இந்த இரு நூல்களுக்கும் முதல் பதிப்பை அடியொற்றி அமைந்த முழுமையான மறுபதிப்பு அழிசி வெளியிட்டிருக்கிறது.

  • இலக்கிய முன்னோடிகளின் நூல் வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவது.

ராணிதிலக் தொகுத்த க.நா.சு.வின் இதுவரை நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் 'விசிறி' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. எழுபதுகளில் சிற்றிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிய நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் முதல் முறையாக 'வாசிகள்' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாரத ராமாயணம் (முதல் பதிப்பு 1955), நான் கண்ட மகாத்மா (முதல் பதிப்பு 1951), திருச்சி ஜெயில் (முதல் பதிப்பு 1941), அங்கே இப்ப என்ன நேரம்? (முதல் பதிப்பு 2004), விமரிசனக்கலை (முதல் பதிப்பு 1959), காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (முதல் பதிப்பு 2020) ஆகியவை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநிவாச கோபாலன்

விருது

  • வெயில் பறந்தது கவிதைத்தொகுப்பிற்காக குமரகுருபரன் - விஷ்ணுபுரம் கவிதை விருது 2021இல் கவிஞர் மதாருக்கு வழங்கப்பட்டது.
  • ’பொன்னுலகம்’ சிறுகதைகள் தொகுப்பிற்காக சுரேஷ் பிரதீப்பிற்கு 2022 கோவை கொடிசியா புத்தகத் திருவிழாவில் இளம் படைப்பாளர் விருது அளிக்கப்பட்டது.
  • 2021ஆம் ஆண்டிற்கான முகம் விருது ஸ்ரீநிவாச கோபாலனுக்கு கொடுக்கப்பட்டது.

வெளியீடுகள்

  • வெயில் பறந்தது (2021, கவிதைகள், மதார்)
  • நாரத ராமாயணம் (2021, நெடுங்கதை, புதுமைப்பித்தன்)
  • வாசிகள் (2021, சிறுகதைகள், நாரணோ ஜெயராமன்)
  • நான் கண்ட மகாத்மா (2021, கட்டுரைகள், தி. சு. அவினாசிலிங்கம்)
  • திருச்சி ஜெயில் (2021, கட்டுரைகள், எல்.எஸ். கரையாளர்)
  • அங்கே இப்ப என்ன நேரம்? (2022, கட்டுரைகள், அ. முத்துலிங்கம்)
  • விசிறி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) (2021, க. நா. சுப்ரமண்யம், ராணிதிலக் (தொடர்)
  • பொன்னுலகம் (2021, சிறுகதைகள், சுரேஷ் பிரதீப்)
  • காற்றோவியம் (2022, இசைக் கட்டுரைகள், ரா. கிரிதரன்)
  • காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (2022, சிறுகதைகள், ரா. கிரிதரன்)
  • விமரிசனக்கலை (2021, க. நா. சுப்ரமண்யம், கட்டுரைகள்)
  • சியமந்தகம்: ஜெயமோகன் 60 (2022) (கட்டுரைகள்: ஜெயமோகன் மணிவிழா வெளியீடு)

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.