ஏறாண் முல்லை: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 14: | Line 14: | ||
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி | கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி | ||
எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு (176) | எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு (176) | ||
</poem> | </poem>பொருள்: என் தந்தை முன்நாள் போரிலே இறந்து நடுகல்லில் பொறிக்கப்பட்டான். என் கணவனும் போர்க்களத்தில் இறந்தான். என் தமையன்கள் பகைவர் முன் ஓயும்வரை போரிட்டு இறந்தனர். என் மகன் பின்வாங்கி ஓடும் படையைத் தாங்குபவன் போல நின்று, பகைவர் அம்புகள் தைக்க முள்ளம்பன்றிபோல் கிடந்தான். இவ்வாறு மறத்தாய் கூற்றாக வெண்பா, வீரக்குடியின் சிறப்பைக் கூறுகிறது. | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
Revision as of 07:05, 6 July 2025
ஏறாண் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், அந்தணர், வேளாளர், மகளிர் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாட்டைக் கூறுவது ஏறாண் முல்லை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகைவரைச் சந்திக்காத பொழுதிலும் சினம் மிகுந்து காணப்படுகின்ற மேன்மேல் உயர்கின்ற ஆண்மைத் தன்மையுள்ள குடியின் சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மாறு இன்றி மறம் கனலும்
ஏறாண்குடி எடுத்து உரைத்தன்று(கொளு 8.22)
வெண்பா
கல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்
முன் நின்று மொய் அவிந்தார் என்னையர் - பின்நின்று
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி
எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு (176)
பொருள்: என் தந்தை முன்நாள் போரிலே இறந்து நடுகல்லில் பொறிக்கப்பட்டான். என் கணவனும் போர்க்களத்தில் இறந்தான். என் தமையன்கள் பகைவர் முன் ஓயும்வரை போரிட்டு இறந்தனர். என் மகன் பின்வாங்கி ஓடும் படையைத் தாங்குபவன் போல நின்று, பகைவர் அம்புகள் தைக்க முள்ளம்பன்றிபோல் கிடந்தான். இவ்வாறு மறத்தாய் கூற்றாக வெண்பா, வீரக்குடியின் சிறப்பைக் கூறுகிறது.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.