அழிசி பதிப்பகம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 24: | Line 24: | ||
* [https://www.azhisi.in/ அழிசி: வலைதளம்] | * [https://www.azhisi.in/ அழிசி: வலைதளம்] | ||
* [https://www.vikatan.com/arts/literature/month-long-free-book-announcement-from-azhisi-e-books தினமும் ஒரு புத்தகம் இலவசம்... வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் அழிசி மின்னூல் பதிப்பகம்:vikatan] | * [https://www.vikatan.com/arts/literature/month-long-free-book-announcement-from-azhisi-e-books தினமும் ஒரு புத்தகம் இலவசம்... வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் அழிசி மின்னூல் பதிப்பகம்:vikatan] | ||
* முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு | |||
[[Category:Being Created]] | [[Category:Being Created]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 22:04, 10 September 2022
அழிசி பதிப்பகம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பதிப்பகம். ஸ்ரீநிவாச கோபலன் இதன் உரிமையாளர்.
பதிப்பகம் பற்றி
அழிசி பதிப்பகத்தை ஸ்ரீநிவாச கோபலன் மின்னூல் வெளியீடாக மார்ச் 2017இல் தொடங்கினார். மின்னூலாக எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் 'அங்கே இப்ப என்ன நேரம்?' முதல் வெளியீடாக வந்தது. 2021 முதல் அச்சு நூல்கள் வெளிவருகின்றன. அச்சு நூலில் முதல் வெளியீடாக மதாரின் 'வெயில் பறந்தது' கவிதைத் தொகுப்பு வந்தது. செப்டம்பர் 29, 2021இல் சி.சு. செல்லப்பாவின் பிறந்தநாளில் 112 எழுத்து இதழ்களை மின்னூலாக்க ஆரம்பித்தார்.
நோக்கம்
- நெடுங்காலமாக மறுபதிப்பு காணாத அரிய நூல்களை மீண்டும் பதிப்பிப்பது. நான் கண்ட மகாத்மா 1951க்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. திருச்சி ஜெயில், நாரத ராமாயணம் இரண்டும் ஏற்கெனவே மறுபதிப்பு கண்டவை என்றாலும் அந்த மறுபதிப்புகளில் முன்னுரை, பதிப்புரை, இணைப்புகள் முதலியவை விடுபட்டிருந்தன. இந்த இரு நூல்களுக்கும் முதல் பதிப்பை அடியொற்றி அமைந்த முழுமையான மறுபதிப்பு அழிசி வெளியிட்டிருக்கிறது.
- இலக்கிய முன்னோடிகளின் நூல் வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவது. அந்த வகையில் ராணிதிலக் தொகுத்த க.நா.சு.வின் இதுவரை நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் 'விசிறி' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. எழுபதுகளில் சிற்றிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிய நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் முதல் முறையாக 'வாசிகள்' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாரத ராமாயணம் (முதல் பதிப்பு 1955), நான் கண்ட மகாத்மா (முதல் பதிப்பு 1951), திருச்சி ஜெயில் (முதல் பதிப்பு 1941), அங்கே இப்ப என்ன நேரம்? (முதல் பதிப்பு 2004), விமரிசனக்கலை (முதல் பதிப்பு 1959), காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (முதல் பதிப்பு 2020) ஆகியவை மறுபதிப்பு. வாசிகள், விசிறி இரண்டும் இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டு முதல் முறையாக நூல் வடிவம் பெற்றவை.
வெளியீடுகள்
- வெயில் பறந்தது (2021, கவிதைகள், மதார்) (குமரகுருபரன் - விஷ்ணுபுரம் கவிதை விருது 2021)
- நாரத ராமாயணம் (2021, நெடுங்கதை, புதுமைப்பித்தன்)
- வாசிகள் (2021, சிறுகதைகள், நாரணோ ஜெயராமன்)
- நான் கண்ட மகாத்மா (2021, கட்டுரைகள், தி. சு. அவினாசிலிங்கம்)
- திருச்சி ஜெயில் (2021, கட்டுரைகள், எல்.எஸ். கரையாளர்)
- அங்கே இப்ப என்ன நேரம்? (2022, கட்டுரைகள், அ. முத்துலிங்கம்)
- விசிறி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) (2021, க. நா. சுப்ரமண்யம், ராணிதிலக் (தொடர்)
- பொன்னுலகம் (2021, சிறுகதைகள், சுரேஷ் பிரதீப்) (2022 கோவை கொடிசியா புத்தகத் திருவிழாவில் இளம் படைப்பாளர் விருது)
- காற்றோவியம் (2022, இசைக் கட்டுரைகள், ரா. கிரிதரன்)
- காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (2022, சிறுகதைகள், ரா. கிரிதரன்)
- விமரிசனக்கலை (2021, க. நா. சுப்ரமண்யம், கட்டுரைகள்)
- சியமந்தகம்: ஜெயமோகன் 60 (2022) (கட்டுரைகள்: ஜெயமோகன் மணிவிழா வெளியீடு)
இணைப்புகள்
- அழிசி: வலைதளம்
- தினமும் ஒரு புத்தகம் இலவசம்... வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் அழிசி மின்னூல் பதிப்பகம்:vikatan
- முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு