அழிசி பதிப்பகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 7: Line 7:

மற்றொரு முக்கிய நோக்கம் இலக்கிய முன்னோடிகளின் நூல் வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவது. அந்த வகையில் ராணிதிலக் தொகுத்த க.நா.சு.வின் இதுவரை நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் 'விசிறி' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. இதேபோல க.நா.சு.வின் மற்றொரு தொகுப்பும் ('எமன்'), ந. பிச்சமூர்த்தியின் ஒரு தொகுப்பும் ('கஞ்சா மடம்') வெளியாகவுள்ளது.

எழுபதுகளில் சிற்றிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிய நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் முதல் முறையாக  'வாசிகள்' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

நாரத ராமாயணம் (முதல் பதிப்பு 1955), நான் கண்ட மகாத்மா (முதல் பதிப்பு 1951), திருச்சி ஜெயில் (முதல் பதிப்பு 1941), அங்கே இப்ப என்ன நேரம்? (முதல் பதிப்பு 2004), விமரிசனக்கலை (முதல் பதிப்பு 1959), காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (முதல் பதிப்பு 2020) ஆகியவை மறுபதிப்பு. வாசிகள், விசிறி இரண்டும் இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டு முதல் முறையாக நூல் வடிவம் பெற்றவை.

Revision as of 21:22, 10 September 2022

அழிசி பதிப்பகம்

அழிசி பதிப்பகம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பதிப்பகம்.

பதிப்பகம் பற்றி

ஸ்ரீநிவாச கோபலனால் மின்னூல் வெளியீடு 2017 மார்ச் மாதம் முதல். மின்னூலாக முதல் வெளியீடு அ. முத்துலிங்கம் அவர்களின் 'அங்கே இப்ப என்ன நேரம்?'. 2021 முதல் அச்சு நூல்கள். முதல் வெளியீடு மதாரின் 'வெயில் பறந்தது' கவிதைத் தொகுப்பு.

பதிப்பகத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்று, நெடுங்காலமாக மறுபதிப்பு காணாத அரிய நூல்களை மீண்டும் பதிப்பிப்பது. நான் கண்ட மகாத்மா 1951க்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. திருச்சி ஜெயில், நாரத ராமாயணம் இரண்டும் ஏற்கெனவே மறுபதிப்பு கண்டவை என்றாலும் அந்த மறுபதிப்புகளில் முன்னுரை, பதிப்புரை, இணைப்புகள் முதலியவை விடுபட்டிருந்தன. இந்த இரு நூல்களுக்கும் முதல் பதிப்பை அடியொற்றி அமைந்த முழுமையான மறுபதிப்பு அழிசி வெளியிட்டிருக்கிறது.

மற்றொரு முக்கிய நோக்கம் இலக்கிய முன்னோடிகளின் நூல் வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவது. அந்த வகையில் ராணிதிலக் தொகுத்த க.நா.சு.வின் இதுவரை நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் 'விசிறி' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. இதேபோல க.நா.சு.வின் மற்றொரு தொகுப்பும் ('எமன்'), ந. பிச்சமூர்த்தியின் ஒரு தொகுப்பும் ('கஞ்சா மடம்') வெளியாகவுள்ளது.

எழுபதுகளில் சிற்றிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிய நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் முதல் முறையாக 'வாசிகள்' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

நாரத ராமாயணம் (முதல் பதிப்பு 1955), நான் கண்ட மகாத்மா (முதல் பதிப்பு 1951), திருச்சி ஜெயில் (முதல் பதிப்பு 1941), அங்கே இப்ப என்ன நேரம்? (முதல் பதிப்பு 2004), விமரிசனக்கலை (முதல் பதிப்பு 1959), காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (முதல் பதிப்பு 2020) ஆகியவை மறுபதிப்பு. வாசிகள், விசிறி இரண்டும் இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டு முதல் முறையாக நூல் வடிவம் பெற்றவை.

வெளியீடுகள்

1. வெயில் பறந்தது - பிப்ரவரி 2021 - கவிதைகள் - மதார் - 80 பக்கம் - ₹90 ரூபாய் (குமரகுருபரன் - விஷ்ணுபுரம் கவிதை விருது 2021)

2. நாரத ராமாயணம்* - அக்டோபர் 2021 - நெடுங்கதை - புதுமைப்பித்தன் - 72 பக்கம் - ₹60

3. வாசிகள் - அக்டோபர் 2021 - சிறுகதைகள் - நாரணோ ஜெயராமன் - 120 பக்கம் - ₹110

4. நான் கண்ட மகாத்மா* - அக்டோபர் 2021 - கட்டுரைகள் - தி. சு. அவினாசிலிங்கம் - 192 பக்கம் - ₹170

5. திருச்சி ஜெயில்* - அக்டோபர் 2021 - கட்டுரைகள் - எல். எஸ். கரையாளர் - 192 பக்கம் - ₹170

6. அங்கே இப்ப என்ன நேரம்?* - அக்டோபர் 2022 - கட்டுரைகள் - அ. முத்துலிங்கம் - 344 பக்கம் - ₹350

7. விசிறி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) - டிசம்பர் 2021 - க. நா. சுப்ரமண்யம் - ராணிதிலக் (தொ-ர்) - 120 பக்கம் - ₹125

8. பொன்னுலகம் - டிசம்பர் 2021 - சிறுகதைகள் - சுரேஷ் பிரதீப் - 172 பக்கம் - ₹180 (2022 கோவை கொடிசியா புத்தகத் திருவிழாவில் இளம் படைப்பாளர் விருது)

9. காற்றோவியம் - ஜனவரி 2022 - இசைக் கட்டுரைகள் - ரா. கிரிதரன் - 242 பக்கம் - ₹250

10. காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை* - பிப்ரவரி 2022 - சிறுகதைகள் - ரா. கிரிதரன் - 212 பக்கம் - ₹200

11. விமரிசனக்கலை* - ஜனவரி 2021 - க. நா. சுப்ரமண்யம் - கட்டுரைகள் - 156 பக்கம் - ₹150

12. சியமந்தகம்: ஜெயமோகன் 60 - செப்டம்பர் 2022 - கட்டுரைகள் - ஜெயமோகன் மணிவிழா வெளியீடு - 860 பக்கம்

இணைப்புகள்