second review completed

அறிவன் வாகை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 18: Line 18:


==உசாத்துணை==
==உசாத்துணை==
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]  
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]


 
{{Second review completed}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 02:32, 3 July 2025

அறிவன் வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகைத்திணையில் அரசனின் போர் வெற்றிச் சிறப்பைத் தவிரவும் பிற மக்களின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. முக்காலமும் உணர்ந்த சான்றோரின் வெற்றியையும் சிறப்பையும் கூறுவது.

இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறும் ஆற்றலுடையவரை அறிவன் என்பர்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உலகோர் புகழும் வண்ணம் முக்காலத்தையும் உணர்ந்த அறிவனுடைய இயல்பைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

புகழ் நுவல முக்காலமும்
நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று(கொளு 8.13 )

வெண்பா

இம்மூலகில் இருள் கடியும் ஆய்கதிர் போல்
அம்மூன்றும் முற்ற அறிதலால் - தம்மின்
உழறா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியார் வாய்ச் சொல் (167)

பொருள்: மேல் கீழ் நடு வென்று சொல்லப்படுகின்ற மூன்று உலகங்களிலும், நிறைந்த இருளினைப் போக்கும் அழகிய கதிரவனைப் போல, இறப்பு நிகழ்வு எதிர்வென்னும் மூன்று காலத்தையும் முற்றவும் அறிதலால், தம்மின் தாம் மாறுபடாதன கலங்கி மாறுபடுதல் உளவாயினும், அறிவரின் வாய் மொழியாகப் பிறந்த சொற்கள், எக்காலத்தினும் தப்பாதவை.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.