வேளாண் வாகை: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 16: | Line 16: | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847 வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{Second review completed}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 02:11, 3 July 2025
வேளாண் வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகைத்திணையில் அரசனின் போர் வெற்றிச் சிறப்பைத் தவிரவும் பிற மக்களின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. வேளாளரின் சிறப்பைக் கூறுவது வேளாண் வாகை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மேற்பட்டவரான அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்பும் வண்ணம் அவர்கள் இட்ட பணியைச் செய்து முடிக்கும் வேளாளர் வெற்றியைச் சொல்வது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி ஒழிகின்று(கொளு 8.11)
வெண்பா
முவரும் நெஞ்சமர முற்றி அவர் அவர்
ஏவல் எதிர் கொண்டு மீண்டு உரையான் - ஏவல்
வழுவான் வழிநின்று மண்டார் வயலுள்
உழுவான் உலகுக்கு உயிர் (165)
பொருள்: அந்தணர் அரசர் வணிகர் எனச் சொல்லப்பட்ட மூவரும் மனம் விரும்புமாறு ஒழுக்கத்தால் முதிர்ந்து, அவரவர் ஏவின செயலை ஏற்றுக்கொண்டு மீண்டும் மறுத்துச்சொல்லாதவனாய், நீதிநூல் ஏவிய வழியே வழுவாதவனாய், முறையே நிலைபெற்று, வண்டினம் நிறையும் கழனியுள் உழுதலைச் செய்யும் அவனே, உலகுக்கு உயிர் அனையான்.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.