முரச வாகை: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Jayashree (talk | contribs)
No edit summary
Line 17: Line 17:


==உசாத்துணை==
==உசாத்துணை==
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]  
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214223-19847  வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]


 
{{Second review completed}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:10, 1 July 2025

முரச வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வெற்றி பெற்ற அரசனின் முரசின் சிறப்பைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒலிக்கின்ற சூழல் அணிந்த அரசனின் அகன்ற அரண்மனையில் உள்ள வீரரிடத்துப் பலியைப் பெறும் முரசின் தன்மையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒலிகழலான் அகல்அருள்
பலிபெறு முரசின் பண்பு உரைத்தன்று(கொளு 8.4)

வெண்பா

மதிஏர் நெடும்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய - நிதியம்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு (158)

பொருள்: பகையுள்ள காலத்தே அதிரும் முரசு, திங்களையொத்த உயர்ந்த கொற்றக் குடையினை உடைய அரசர்கள் பலரும் பணிந்து புகழ்மாலையினைச் சூட்ட, செல்வத்தை இரவலர்க்கு வழங்கும். பெரிய கையினையுடைய நம் அரசனது, விண்ணைத் தொடுமளவு உயரத்தைக் கொண்டதான மாளிகையில், இப்பொழுது வெற்றிமுழக்கத்தை எழுப்புகிறது.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.