நெடுமொழி கூறல்: Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
 
Line 24: Line 24:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|01-Jun-2025, 14:14:44 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 2 June 2025

நெடுமொழி கூறல் கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. கரந்தை மறவர் தம்மைத் தாமே உயர்த்திக் கூறிக் கொள்ளும் மொழி நெடுமொழி

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கரந்தை மன்னனுக்கு, அவனுடைய படை மறவன் ஒருவன் தான் போர்க்களத்தில் சிறந்து செயல்பட்ட பெருமையைத்தானே எடுத்துக் கூறுவது நெடுமொழி கூறல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 மன்மேல்பட்ட மதிக்குடையோற்குத்
தன் மேம்பாடு தான் எடுத்துரைத்தற்று (கொளு 2.12)

வெண்பா

ஆள்அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி
வாளொடு வைகுவேன் ஆக - நாளும்
கழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப்
பிழி மகிழ் உண்பார் பிறர் (32)

பொருள்: அரேச! நான் ஒருவனே, வெட்சி மறவராகிய பகை வெள்ளம் மிக்குவருமாயின் அவ்வெள்ளத்தைக் கல் அணையாகி நின்று தடுத்து நிறுத்துவேன். என்னை ஒழிந்த பிற மறவர் எல்லாரும் நீ வழங்கும் கள்ளின் தெளிவை உண்டு உன்னொடும் இங்கேயே தங்கட்டும்.

தனது வீரத்தைப் பெரிதும் மேம்படுத்துக் கூறும் கரந்தை மறவன் ஒருவன், பகைவர் பகையை எதிர்கொள்ளத் தான் ஒருவனே போதும் என்கின்றான் என்பது கருத்து.

உசாத்துணை

கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:14:44 IST