under review

சஜு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 10: Line 10:

== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
சஜு தன் பத்து வயதிலிருந்து கோவில்களில் செண்டை மேளம் வாசித்து வருகிறார். பள்ளிப் பருவத்தில்  கவிதை வாசிப்பில் ஆர்வம் கொண்டார். கல்லூரி நாட்களில் இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டார். முதல் தொகுப்பு ’துமிதங்கள்’ 2021-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு ’நீரருந்தும் நதி’ .  
சஜு தன் பத்து வயதிலிருந்து கோவில்களில் செண்டை மேளம் வாசித்து வருகிறார். பள்ளிப் பருவத்தில்  கவிதை வாசிப்பில் ஆர்வம் கொண்டார். கல்லூரி நாட்களில் இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டார். முதல் தொகுப்பு ’துமிதங்கள்’ 2021-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு ’நீரருந்தும் நதி’ (2022).  

== ஆய்வுப் பணி ==
== ஆய்வுப் பணி ==
சஜு தன் செண்டை மேளம் சார்ந்த அனுபவ குறிப்புகளைத் தொகுத்து ‘கொட்டடிக்காரன்’ என்னும் புத்தகத்தை 2023 ஆண்டு வெளியிட்டார். மணவாளக்குறிச்சியில் தனது குலத்தெய்வமான ஆற்றுமாடன் தம்புரான் குறித்து சஜு எழுதி நூல் 2025-ல் வெளிவந்தது. ஆற்றுமாடன் தம்புரான் வரலாறு நிகழ்வான ‘மண்ணாப்பேடி, புலைப்பேடி’ ஒழிப்பு போராட்டத்தையும், வலியகேசி, சிறியகேசி என்ற நாட்டார் கதாப்பாத்திரங்களையும் கொண்டு அமையப் பெற்ற கதைப்பாடல், வரலாறு, கோவில்கள் பற்றியே ஆய்வு நூல்.  
சஜு தன் செண்டை மேளம் சார்ந்த அனுபவ குறிப்புகளைத் தொகுத்து ‘கொட்டடிக்காரன்’ என்னும் புத்தகத்தை 2023-ல் வெளியிட்டார். மணவாளக்குறிச்சியில் தனது குலத்தெய்வமான ஆற்றுமாடன் தம்புரான் குறித்து சஜு எழுதிய நூல் 2025-ல் வெளிவந்தது. ஆற்றுமாடன் தம்புரான் வரலாறு நிகழ்வான ‘மண்ணாப்பேடி, புலைப்பேடி’ ஒழிப்பு போராட்டத்தையும், வலியகேசி, சிறியகேசி என்ற நாட்டார் கதாபாத்திரங்களையும் கொண்டு அமையப் பெற்ற கதைப்பாடல், வரலாறு, கோவில்கள் பற்றியே ஆய்வு நூல்.  

பார்க்க: [[ஆற்றுமாடன் தம்புரான்]]  
பார்க்க: [[ஆற்றுமாடன் தம்புரான்]]  

Revision as of 06:24, 24 May 2025

Saju (1).jpg

சஜு (பிறப்பு: பெப்ரவரி 22, 1998) நாட்டாரியல் ஆய்வாளர், கவிஞர். குமரி மாவட்டம் மணவாளகுறிச்சி பகுதியில் நாட்டார் தெய்வம், கலைகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார்.

பிறப்பு, கல்வி

Saju1.jpeg

சஜு பெப்ரவரி 22, 1998 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் சகாதேவன், லதா தம்பதியருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர் ஒரு அக்கா (சஜிதா). சஜு அரம்பப் பள்ளியை கடியப்பட்டிணம் அரசு தொடப்பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டு வரை மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் செயிண்ட் சேவியர் கத்தோலிக் கல்லூரியில் சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சஜு பங்கு சந்தை வணிகமும், பகுதி நேர கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.

கலை வாழ்க்கை

சஜு தன் பத்து வயதிலிருந்து கோவில்களில் செண்டை மேளம் வாசித்து வருகிறார். பள்ளிப் பருவத்தில் கவிதை வாசிப்பில் ஆர்வம் கொண்டார். கல்லூரி நாட்களில் இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டார். முதல் தொகுப்பு ’துமிதங்கள்’ 2021-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு ’நீரருந்தும் நதி’ (2022).

ஆய்வுப் பணி

சஜு தன் செண்டை மேளம் சார்ந்த அனுபவ குறிப்புகளைத் தொகுத்து ‘கொட்டடிக்காரன்’ என்னும் புத்தகத்தை 2023-ல் வெளியிட்டார். மணவாளக்குறிச்சியில் தனது குலத்தெய்வமான ஆற்றுமாடன் தம்புரான் குறித்து சஜு எழுதிய நூல் 2025-ல் வெளிவந்தது. ஆற்றுமாடன் தம்புரான் வரலாறு நிகழ்வான ‘மண்ணாப்பேடி, புலைப்பேடி’ ஒழிப்பு போராட்டத்தையும், வலியகேசி, சிறியகேசி என்ற நாட்டார் கதாபாத்திரங்களையும் கொண்டு அமையப் பெற்ற கதைப்பாடல், வரலாறு, கோவில்கள் பற்றியே ஆய்வு நூல்.

பார்க்க: ஆற்றுமாடன் தம்புரான்

நூல்கள்

ஆய்வு நூல்கள்

  • கொட்டடிக்காரன் (2023)
  • ஆற்றுமாடன் தம்புரான் (2025)

கவிதை நூல்கள்

  • துமிதங்கள் (2021)
  • நீரருந்தும் நதி (2022)

உசாத்துணை

வெளி இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.