அதரிடைச் செலவு: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 21: | Line 21: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|23-Apr-2025, 13:58:32 IST}} | |||
Revision as of 03:44, 24 April 2025
அதரிடைச் செலவு கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர்கள் கவர்ந்த ஆநிரைகளை மீட்க இறங்கிய கரந்தை மறவர்கள், வெட்சி மறவர்கள் நிரையுடன் செல்லும் வழியாக அவ்ர்களைத்தேடிச் செல்வது பற்றிக் கூறுவதால், அதரிடைச் செலவு எனப் பெற்றது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் தாம் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை ஏகின்று(கொளு 2.4)
வெண்பா
சங்கும் கருங்கோடும் தாழ்பீலிப் பல்லியமும்
எங்கும் பறையோடு எழுந்தார்ப்ப - வெங்கல்
அழற்சுரம் தாம் படர்ந்தார் ஆன்சுவட்டின் மேலே
நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து (24)
பொருள்: சங்கும், பறையும், பல்லியமும் முழங்க மிகுந்த வெப்பமான பொழுதில் வெட்சியார் சென்ற தடத்தில் வேல் மின்னச் சென்றனர் கரந்தை வீரர்.
உசாத்துணை
கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 13:58:32 IST