ஜார்ஜ் திபாட்: Difference between revisions
| Line 16: | Line 16: | ||
* பிரம்மசூத்திரம் (பகுதி 38) சங்கரர் உரையுடன் 1896 | * பிரம்மசூத்திரம் (பகுதி 38) சங்கரர் உரையுடன் 1896 | ||
* பிரம்ம சூத்திரம் (பகுதி 48) ராமானுஜர் உரையுடன் 1904 | * பிரம்ம சூத்திரம் (பகுதி 48) ராமானுஜர் உரையுடன் 1904 | ||
====== கார்பேயுடன் ====== | |||
திபோட் [[ரிச்சர்ட் கார்பே]]யுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார். கார்பே வாரணாசிக்கு வந்து திபோட்டைச் சந்தித்திருக்கிறார். | |||
== இதழியல் == | == இதழியல் == | ||
| Line 31: | Line 34: | ||
== மறைவு == | == மறைவு == | ||
திபாட் 10914ல் ஹைடல்பர்கில் மறைந்தார். | திபாட் 10914ல் ஹைடல்பர்கில் மறைந்தார். | ||
மதிப்பீடு | |||
திபாட் இந்தியவியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றிய முன்னோடி. | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Revision as of 11:56, 20 March 2025

ஜார்ஜ் திபாட். ஜார்ஜ் ஃப்ரெடரிக் வில்லியம் திபாட் (George Frederick William Thibaut ) (20 மார்ச் 1848 – 1914) ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர். பிரம்ம சூத்திரம் முதலிய நூல்களை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தவர். வாரணாசி சம்ஸ்கிருத கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்திய வானவியல், கணிதவியல் ஆகியவற்றிலும் ஆய்வுகளைச் செய்தார்.
பிறப்பு, கல்வி
திபாட் ஜெர்மனியில் ஹெய்டல்பர்க் (Heidelberg) என்னும் ஊரில் 20 மார்ச் 1848ல் பிறந்தார். ஜெர்மனியில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றபின் சிறிதுகாலம் பிரிட்டனில் வாழ்ந்தார். 1870ல் நடைபெற்ற ஜெர்மனி- பிரான்ஸ் போரில் பங்கெடுத்தார்.
கல்விப்பணி
1875ல் திபாட் வாரணாசி அரசு சம்ஸ்கிருதக் கல்லூரியில் பேராசிரியராக பணியேற்றார். 1888 முதல் 1895 வரை அலஹாபாதில் மூர் மத்தியக்கல்லூரியில் (Muir Central College ) பணியாற்றினார். அலாஹாபாத் பல்கலையின் பதிவாளராகவும் பணியாற்றினார். கல்கத்தா பல்கலைகழக பதிவாளர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தத்துவப்பணி
திபாட் 1875 முதல் 1878 வரை வேள்விக்கூடம் அமைப்பதைப் பற்றிய சுருதி மரபின் (ஸ்ரௌத மரபு) சுல்ப சூத்திரம் என்னும் நூலை பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார்.போதாயன சுல்ப சூத்ரத்தை மொழியாக்கம் செய்தார். வராஹமிஹிரர் எழுதிய வானியல் நூலான பஞ்ச சித்தாந்திகா என்ற நூலை பண்டித சுதாகர் திவிவைதி உதவியுடன் மொழியாக்கம் செய்தார்.
மாக்ஸ் முல்லர் கீழைநாட்டு புனிதநூல்கள் என்னும் நூல்தொகுப்பை வெளியிட்டபோது அதில் திபாட் கீழ்க்கண்ட நூல்களை மொழியாக்கம் செய்தார்
- பிரம்ம சூத்திரம் (பகுதி 34) சங்கரர் உரையுடன். 1890
- பிரம்மசூத்திரம் (பகுதி 38) சங்கரர் உரையுடன் 1896
- பிரம்ம சூத்திரம் (பகுதி 48) ராமானுஜர் உரையுடன் 1904
கார்பேயுடன்
திபோட் ரிச்சர்ட் கார்பேயுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார். கார்பே வாரணாசிக்கு வந்து திபோட்டைச் சந்தித்திருக்கிறார்.
இதழியல்
திபோட் சம்ஸ்கிருத ஆய்வுகளுக்காக The Pundit என்னும் மாத இதழை நடத்தினார்.
கணிதவியல்
திபோட் இந்திய வானியல் மற்றும் கணிதவியலில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டார். கட்டுரைகளையும் எழுதினார். ராதாசரண் குப்தாவுக்குப் பின் இந்திய கணிதவியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவராகக் கருதப்படுகிறார்.
சுவடி ஆய்வுகள்
திபாட் சம்ஸ்கிருத சுவடிகளை சேகரிப்பது, ஒப்பிடுவது, பாடபேதம் பார்ப்பது ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலையின் போட்லியன் நூலகத்திற்கு அவற்றை வழங்கினார்.
விருது
திபாட் 1906 ல் ஏழாம் ஜார்ஜ் மன்னர் அளித்த புத்தாண்டு விருதுகளில் CIE விருதைப் பெற்றார்.
மறைவு
திபாட் 10914ல் ஹைடல்பர்கில் மறைந்தார்.
மதிப்பீடு
திபாட் இந்தியவியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றிய முன்னோடி.