சதீஷ்குமார் சீனிவாசன்: Difference between revisions
No edit summary |
|||
Line 5: | Line 5: | ||
இலக்கிய ஆதர்சங்களாக மனுஷ்யபுத்திரன், சாருநிவேதா, பெருந்தேவி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஜி. கார்ல் மார்க்ஸ், கோபிகிருஷ்ணன், ஆத்மாநாம், ஆ. மார்க்ஸ். நீட்சே, ஃபூகோ, லாக் தெரிதா, சார்டர் போன்றோரைக் குறிப்பிடுகிறார். நிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த சதீஷ்குமார் சீனிவாசனின் முதல் தொகுப்பு ”உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்” உயிர்மை பதிப்பகம் வெளியீடாக 2021இல் வந்தது. சதீஷ்குமார் சீனிவாசன் தொடந்து கவிதைகள் எழுதி வருகிறார். | இலக்கிய ஆதர்சங்களாக மனுஷ்யபுத்திரன், சாருநிவேதா, பெருந்தேவி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஜி. கார்ல் மார்க்ஸ், கோபிகிருஷ்ணன், ஆத்மாநாம், ஆ. மார்க்ஸ். நீட்சே, ஃபூகோ, லாக் தெரிதா, சார்டர் போன்றோரைக் குறிப்பிடுகிறார். நிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த சதீஷ்குமார் சீனிவாசனின் முதல் தொகுப்பு ”உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்” உயிர்மை பதிப்பகம் வெளியீடாக 2021இல் வந்தது. சதீஷ்குமார் சீனிவாசன் தொடந்து கவிதைகள் எழுதி வருகிறார். | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
"சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதைகள் அனைத்திலுமே ஓர் இலையுதிர்காலத்து உளச்சித்திரத்தை அடைந்துகொண்டிருந்தேன். உயரமான கட்டிடங்களின் நிழலைத் தாளமுடியாமல் ஏந்தி நின்றிருக்கும் அசையமுடியாத இலையை அசைக்கும் காற்று போல சிலசொற்கள் எழுந்து கவிதையாகின்றன." என எழுத்தாளர் ஜெயமோகன் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளை மதிப்பிடுகிறார். | |||
== நூல்கள் பட்டியல் == | == நூல்கள் பட்டியல் == | ||
* உன்னைக் கைவிடவே விரும்புகிறேன். | * உன்னைக் கைவிடவே விரும்புகிறேன். |
Revision as of 16:30, 22 August 2022
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
சதீஷ்குமார் சீனிவாசன் பிப்ரவரி 21, 1997இல் சீனிவாசன், சம்பூரணம் இணையருக்கு கும்பகோணம் மாவட்டம் திருவைக்காவூர் மேலமாஞ்சேரியில் பிறந்தார். மேலமாஞ்சேரி நடு நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். கும்பகோணம் பாபநாசம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு வரை பயின்றார். பின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிப்படிப்பு தடைபட்டது. திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் கார்மெண்ட்ஸ் கம்பெனிகளில் பணிபுரிந்தார். சென்னை உயிர்மை இணையைதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
இலக்கிய ஆதர்சங்களாக மனுஷ்யபுத்திரன், சாருநிவேதா, பெருந்தேவி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஜி. கார்ல் மார்க்ஸ், கோபிகிருஷ்ணன், ஆத்மாநாம், ஆ. மார்க்ஸ். நீட்சே, ஃபூகோ, லாக் தெரிதா, சார்டர் போன்றோரைக் குறிப்பிடுகிறார். நிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த சதீஷ்குமார் சீனிவாசனின் முதல் தொகுப்பு ”உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்” உயிர்மை பதிப்பகம் வெளியீடாக 2021இல் வந்தது. சதீஷ்குமார் சீனிவாசன் தொடந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
இலக்கிய இடம்
"சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதைகள் அனைத்திலுமே ஓர் இலையுதிர்காலத்து உளச்சித்திரத்தை அடைந்துகொண்டிருந்தேன். உயரமான கட்டிடங்களின் நிழலைத் தாளமுடியாமல் ஏந்தி நின்றிருக்கும் அசையமுடியாத இலையை அசைக்கும் காற்று போல சிலசொற்கள் எழுந்து கவிதையாகின்றன." என எழுத்தாளர் ஜெயமோகன் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளை மதிப்பிடுகிறார்.
நூல்கள் பட்டியல்
- உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்.
- லதா என்ற ஆண்பூனை
- குடும்ப ஆண்