கு. மகுடீஸ்வரன்: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
[[File:கு. மகுடீஸ்வரன்.png|thumb|கு. மகுடீஸ்வரன்]] | [[File:கு. மகுடீஸ்வரன்.png|thumb|கு. மகுடீஸ்வரன்]] | ||
கு. மகுடீஸ்வரன் (நவம்பர் 6, 1959) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். சுவடிகளைப் பெயர்த்து பதிப்பித்துள்ளார். | கு. மகுடீஸ்வரன் (நவம்பர் 6, 1959) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர். சுவடிகளைப் பெயர்த்து பதிப்பித்துள்ளார். சமணக்காப்பியத் தலைவர்கள் நூலுக்காக மூவேந்தர் விருது பெற்றுள்ளார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கு. மகுடீஸ்வரன் நவம்பர் 6, 1959இல் பிறந்தார். எம்.ஏ; எம்.ஃபில்; எம்.எட்; பி.எச்.டி பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், “பாட்டியல் நூல்களில் சமூகம்” என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டமும் பெற்றார். ”சமணக்காப்பியங்களில் தலைவர்கள்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். | கு. மகுடீஸ்வரன் நவம்பர் 6, 1959இல் பிறந்தார். எம்.ஏ; எம்.ஃபில்; எம்.எட்; பி.எச்.டி பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், “பாட்டியல் நூல்களில் சமூகம்” என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டமும் பெற்றார். ”சமணக்காப்பியங்களில் தலைவர்கள்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். | ||
Line 6: | Line 6: | ||
பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ஈரோடு கோபிச்செட்டிபாளையம், கோபி கலை அறிவியல் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ்த்துறைத்தலைவராக உள்ளார். | பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ஈரோடு கோபிச்செட்டிபாளையம், கோபி கலை அறிவியல் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ்த்துறைத்தலைவராக உள்ளார். | ||
[[File:சமணக் காப்பியத் தலைவர்கள்.jpg|thumb|300x300px|சமணக் காப்பியத் தலைவர்கள்]] | [[File:சமணக் காப்பியத் தலைவர்கள்.jpg|thumb|300x300px|சமணக் காப்பியத் தலைவர்கள்]] | ||
== இலக்கியச் செயல்பாடுகள் == | == இலக்கியச் செயல்பாடுகள் == | ||
கனவைத்தொலைத்தவர்கள் என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாறு, கொங்குச் செல்வங்கள், இலக்கியங்களில் கொங்கு போன்ற நூல்களை எழுதியுள்ளார். ஓலைச் சுவடிகளிலிருந்து பெயர்த்து தக்கை ராமாயணம், தலைய நல்லூர் குறவஞ்சி, பெரியண்ணன் குறவஞ்சி போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சமண காப்பியங்களான பெருங்கதை, சிந்தாமணி ஆகியவற்றின் கதைத் தலைவர்கள் படைப்பமைவு அமைந்த விதம் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதனடிப்படையில் கண்ட முடிவுகளை ”சமணக் காப்பியத் தலைவர்கள்” என்ற நூலாக 'தி பார்க்கர்' பதிப்பகம் மூலம் 2004இல் வெளியிட்டார். | கனவைத்தொலைத்தவர்கள் என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாறு, கொங்குச் செல்வங்கள், இலக்கியங்களில் கொங்கு போன்ற நூல்களை எழுதியுள்ளார். ஓலைச் சுவடிகளிலிருந்து பெயர்த்து தக்கை ராமாயணம், தலைய நல்லூர் குறவஞ்சி, பெரியண்ணன் குறவஞ்சி போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சமண காப்பியங்களான பெருங்கதை, சிந்தாமணி ஆகியவற்றின் கதைத் தலைவர்கள் படைப்பமைவு அமைந்த விதம் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதனடிப்படையில் கண்ட முடிவுகளை ”சமணக் காப்பியத் தலைவர்கள்” என்ற நூலாக 'தி பார்க்கர்' பதிப்பகம் மூலம் 2004இல் வெளியிட்டார். | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* 2004இல் “சமணக்காப்பியத் தலைவர்கள் நூல்” மூவேந்தர் விருது பெற்றது. | * 2004இல் “சமணக்காப்பியத் தலைவர்கள் நூல்” மூவேந்தர் விருது பெற்றது. |
Revision as of 13:49, 8 August 2022
கு. மகுடீஸ்வரன் (நவம்பர் 6, 1959) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர். சுவடிகளைப் பெயர்த்து பதிப்பித்துள்ளார். சமணக்காப்பியத் தலைவர்கள் நூலுக்காக மூவேந்தர் விருது பெற்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கு. மகுடீஸ்வரன் நவம்பர் 6, 1959இல் பிறந்தார். எம்.ஏ; எம்.ஃபில்; எம்.எட்; பி.எச்.டி பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், “பாட்டியல் நூல்களில் சமூகம்” என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டமும் பெற்றார். ”சமணக்காப்பியங்களில் தலைவர்கள்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ஈரோடு கோபிச்செட்டிபாளையம், கோபி கலை அறிவியல் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ்த்துறைத்தலைவராக உள்ளார்.
இலக்கியச் செயல்பாடுகள்
கனவைத்தொலைத்தவர்கள் என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாறு, கொங்குச் செல்வங்கள், இலக்கியங்களில் கொங்கு போன்ற நூல்களை எழுதியுள்ளார். ஓலைச் சுவடிகளிலிருந்து பெயர்த்து தக்கை ராமாயணம், தலைய நல்லூர் குறவஞ்சி, பெரியண்ணன் குறவஞ்சி போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சமண காப்பியங்களான பெருங்கதை, சிந்தாமணி ஆகியவற்றின் கதைத் தலைவர்கள் படைப்பமைவு அமைந்த விதம் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதனடிப்படையில் கண்ட முடிவுகளை ”சமணக் காப்பியத் தலைவர்கள்” என்ற நூலாக 'தி பார்க்கர்' பதிப்பகம் மூலம் 2004இல் வெளியிட்டார்.
விருதுகள்
- 2004இல் “சமணக்காப்பியத் தலைவர்கள் நூல்” மூவேந்தர் விருது பெற்றது.
நூல் பட்டியல்
- கனவைத்தொலைத்தவர்கள் (கவிதைத்தொகுப்பு)
- சமணக் காப்பியத் தலைவர்கள்
- தமிழ் இலக்கிய வரலாறு
- கொங்குச் செல்வங்கள்
- இலக்கியங்களில் கொங்கு
சுவடிப்பதிப்பு
- தக்கை ராமாயணம்
- தலைய நல்லூர் குறவஞ்சி
- பெரியண்ணன் குறவஞ்சி