being created

உதயணன்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 29: Line 29:


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
களஆய்வு மேற்கொண்டு பல்லவ மன்னர்களைப் பற்றிய நாவல்களை எழுதியவர்கள் இவர் குறிப்பிடத்தக்கவர்.  இவரின் சரித்திர, வரலாற்று நாவல்களில் எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் மொழிநடைத் தாக்கம் உள்ளது.  இவர் நாவல்களில் உருவாக்கியுள்ள கதைக்களம், நாவல் மாந்தர்வர்ணனை, வரலாற்றுத் தகவல்களை கதைமுழுவதும் இழையோடச் செய்யும் உத்தி ஆகியவற்றைக் கொண்டு இவரையும் எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் வரிசையில் இருத்தலாம்.  
களஆய்வு மேற்கொண்டு பல்லவ மன்னர்களைப் பற்றிய நாவல்களை எழுதியவர்கள் இவர் குறிப்பிடத்தக்கவர்.  இவரின் சரித்திர, வரலாற்று நாவல்களில் எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் மொழிநடைத் தாக்கம் உள்ளது.  இவர் நாவல்களில் உருவாக்கியுள்ள கதைக்களம், நாவல் மாந்தர்வர்ணனை, வரலாற்றுத் தகவல்களைக் கதையோட்டத்தில் இழையோடச் செய்யும் உத்தி ஆகியவற்றைக் கொண்டு இவரையும் எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் வரிசையில் இருத்தலாம்.  


== நூல்கள் ==
== நூல்கள் ==
Line 71: Line 71:
# கடம்பவனத்துக் குயில்
# கடம்பவனத்துக் குயில்
# சோழ மோகினி
# சோழ மோகினி
# என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்
# மன்னன் மகன்
# மன்னன் மகன்
# பள்ளிகொண்ட பெருமாள்
# பள்ளிகொண்ட பெருமாள்
Line 80: Line 79:
====== சிறுகதைத் தொகுப்பு ======
====== சிறுகதைத் தொகுப்பு ======


# உதயணனின் சிறுகதைகள்  
# என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்
#உதயணனின் சிறுகதைகள்  


====== கட்டுரைத் தொகுப்பு ======
====== கட்டுரைத் தொகுப்பு ======
Line 88: Line 88:
====== பிற நூல்கள் ======
====== பிற நூல்கள் ======


# இவை பொன்மொழிகள் அல்ல
# இவை பொன்மொழிகள் அல்ல (விமர்சன நூல்)
# பொன்மொழிகள் 1000 (தொகுப்பாசிரியர்)
# பொன்மொழிகள் 1000 (தொகுப்பாசிரியர்)
#பெரிய கடவுள் (ஆன்மிக நூல்)


[[File:U 4.jpg|thumb|உதயணன் எழுதிய நாவல்கள் சிலவற்றின் முன் அட்டைப் படங்கள்]]
[[File:U 4.jpg|thumb|உதயணன் எழுதிய நாவல்கள் சிலவற்றின் முன் அட்டைப் படங்கள்]]
Line 97: Line 98:


https://www.facebook.com/udhayanan.narasiman/?ref=page_internal
https://www.facebook.com/udhayanan.narasiman/?ref=page_internal
https://www.goodreads.com/author/show/6585642._Udhayanan_


<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>

Revision as of 20:36, 1 February 2022



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

எழுத்தாளர் உதயணன்

உதயணன் (செப்டம்பர் 6, 1949) எழுத்தாளர், பதிப்பாளர், கள ஆய்வாளர், சரித்திர நாவலாசிரியர், வரலாற்று நாவலாசிரியர். பல்லவ மன்னர்களைப் பற்றிக் கள ஆய்வு செய்து பல நாவல்களை எழுதியுள்ளார். எழுத்தாளர் சாண்டில்யனை ஆதர்சனமாகக் கொண்டவர். இவர் எழுதியுள்ள சரித்திர, வரலாற்று நாவல்களுள் 20க்கும் மேற்பட்ட நாவல்கள் ஆயிரம் பக்கங்களைக் கொண்டவை.

பிறப்பு, கல்வி

உதயணனின் இயற்பெயர் நரசிம்மன். வீட்டில் செல்லமாக ‘ஜாலி’ என அழைப்பர். செப்டம்பர் 6, 1949இல்  காஞ்சிபுரத்தில் பிறந்தார்.

அப்பா சீனிவாசன் ஆந்திரா மாநிலம். அம்மா சீரங்கம்மாள் கர்நாடகா மாநிலம். அப்பா சீனிவாசன் பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். அவருக்கு ஒன்பது பிள்ளைகள். ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள்.

உதயணன் 1969இல் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

உதயணன் சென்னையில் 1971 முதல் மருத்துவத் துறையில் பணியாற்றினார்.  1983இல் வைதேகி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தன் மனைவியின் பெயரிலும் (வைதேகி பதிப்பகம்) தன்னுடைய புனைபெயரிலும் (உதயணன் பதிப்பகம்) பதிப்பகங்களைத் தொடங்கினார். அவற்றின் வழியாகப் பத்துப் புத்தகங்களை வெளியிட்டார். பெரும் இழப்பு ஏற்பட்டதால் இரண்டு பதிப்பகப் பணியை நிறுத்திக்கொண்டார். இவரின் மனைவி வைதேகி 2012இல் காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

உதயணன் மாணவராக இருக்கும்போதே ‘மனோன்மணியம்’ செய்யுள் மீது ஈடுபாடுகொண்டார். அதன் உந்துதலால் கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கியிருந்தார்.  பின்னர் அவரின் விருப்பம் சரித்திரக் கதைகளின் மீது திரும்பியது. இதன் விளைவாகத் தனக்கு ‘உதயணன்’ என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்.

எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் எழுத்துகளில் தீராக் காதலோடு இருந்தார். எழுத்தாளர் சாண்டில்யனை ஆதர்சனமாகக் கொண்டார். பின்னாளில் சரித்திர, வரலாற்று நாவல்களை எழுதத் தொடங்கினார். எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் ‘பொன் விலங்கு’ நாவலின் மீது இவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் சமூக நாவல்களையும் எழுதினார். இவரின் சமூக நாவல்களில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் மொழிநடைத் தாக்கத்தைக் காணமுடிகிறது.

இவர் ஒவ்வொரு சரித்திர நாவல் எழுதுவதற்கு முன்பும் கள ஆய்வு செய்வார். தொடர்புள்ள இடங்களுக்கும் ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்வார். எண்ணற்ற பக்கங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வார். அதன்பின்னரே அந்த நாவலைக் கையெழுத்தில் எழுதத் தொடங்குவார்.

இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்பதால், அந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை மையப்படுத்தி, பெரும்பான்மையான சரித்திர, வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். குறிப்பாகப் பல்லவ மன்னர்களை மையப்படுத்தி எழுதியுள்ளார்.

பின்னாளில் ‘வானதி பதிப்பகம்’ இவருடைய மூன்று நாவல்களையும் யாழினி பதிப்பகம் இவரின் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டன. கௌரா பதிப்பகம் இவரின் அனைத்துப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

சரித்திர, வரலாற்று நாவல்கள் - 33, சமூக நாவல்கள் – 06, சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை இவரின் 44 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

எழுத்தாளர் உதயணன்

இலக்கிய இடம்

களஆய்வு மேற்கொண்டு பல்லவ மன்னர்களைப் பற்றிய நாவல்களை எழுதியவர்கள் இவர் குறிப்பிடத்தக்கவர். இவரின் சரித்திர, வரலாற்று நாவல்களில் எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் மொழிநடைத் தாக்கம் உள்ளது. இவர் நாவல்களில் உருவாக்கியுள்ள கதைக்களம், நாவல் மாந்தர்வர்ணனை, வரலாற்றுத் தகவல்களைக் கதையோட்டத்தில் இழையோடச் செய்யும் உத்தி ஆகியவற்றைக் கொண்டு இவரையும் எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் வரிசையில் இருத்தலாம்.

நூல்கள்

சமூக நாவல்கள்
  1. மலராத மொட்டு
  2. வேதவிலாசம்
  3. மனவிலங்கு
  4. வெண்தாமரை
  5. நான்
  6. வாழ்க்கை விலங்கு
சரித்திர, வரலாற்று நாவல்கள்
  1. வேள்வித்தூண்
  2. சோழ குலாந்தகன்
  3. மானவர்மன்
  4. சிங்களத்துப் புயல்
  5. பாண்டியன் முரிசு
  6. வெற்றி வேந்தன்
  7. பல்லவ முரசு
  8. மகாவம்சம்
  9. பராந்தகன் கனவு
  10. மயில் கோட்டை
  11. ரோம ராஜ்யம்
  12. மயில்நிற மங்கை
  13. மௌரியப் புயல்
  14. ஆபுத்திரன்
  15. ஸ்ரீமுகன்
  16. வேங்கை வாசல்
  17. பரிமேலழகன்
  18. விஷ்ணு பல்லவம்
  19. உத்தமச் செல்வி
  20. கடல் கோட்டை
  21. விஹார மகாதேவி
  22. மேல்கோட்டை
  23. அரேபியச் சேரமான்
  24. மங்கை வேந்தன்
  25. மாய பாண்டியன்
  26. கடம்பவனத்துக் குயில்
  27. சோழ மோகினி
  28. மன்னன் மகன்
  29. பள்ளிகொண்ட பெருமாள்
  30. கடல்நிலா
  31. இரத்தின தீபம்
  32. நாகபல்லவன்
சிறுகதைத் தொகுப்பு
  1. என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்
  2. உதயணனின் சிறுகதைகள்
கட்டுரைத் தொகுப்பு
  1. உதயணனின் கட்டுரைகள்
பிற நூல்கள்
  1. இவை பொன்மொழிகள் அல்ல (விமர்சன நூல்)
  2. பொன்மொழிகள் 1000 (தொகுப்பாசிரியர்)
  3. பெரிய கடவுள் (ஆன்மிக நூல்)
உதயணன் எழுதிய நாவல்கள் சிலவற்றின் முன் அட்டைப் படங்கள்

உசாத்துணை

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17458&id1=9&issue=20201122

https://www.facebook.com/udhayanan.narasiman/?ref=page_internal

https://www.goodreads.com/author/show/6585642._Udhayanan_

[[Category:Tamil Content]]