சிசில் ராஜேந்திரா: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
[[File:சிசில் 01.jpg|thumb|200x200px|சிசில் ராஜேந்திரா]] | [[File:சிசில் 01.jpg|thumb|200x200px|சிசில் ராஜேந்திரா]] | ||
சிசில் ராஜேந்திரா | சிசில் ராஜேந்திரா (1941) மலேசிய கவிஞர் மற்றும் வழக்கறிஞர். இவரது கவிதைகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
சிசில் ராஜேந்திரா 1941 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் பிறந்தார். | சிசில் ராஜேந்திரா 1941 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் பிறந்தார். ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி படிப்பை செயின்ட் சேவியர் பள்ளியில் முடித்தார். பின், சிங்கப்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்றார். அதன் பின், லண்டனில் அமைந்திருந்த லிங்கனின் வழக்கறிஞர் விடுதியில் (Lincoln’s Inn) சேர்ந்து 1964ஆம் ஆண்டு தன் சட்டக்கல்வியைப் பயிலத் தொடங்கி, 1969ஆம் ஆண்டு சட்டக்கல்வியை முடித்து மலேசியா திரும்பினார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
[[File:சிசில் 02.jpg|thumb]] | [[File:சிசில் 02.jpg|thumb]] | ||
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் | சட்டம் பயின்று திரும்பிய சிசில் ராஜேந்திராவுக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சில சட்ட நிறுவனங்களில் இருந்து சட்டம் பழக வாய்ப்புகள் வந்தன. எனினும், ஓர் எழுத்தாளராக தனது திறமைகளை இன்னும் மெருகேற்ற வேண்டும் என்று உணர்ந்த செசில் இராஜேந்திரா, மீண்டும் லண்டனுக்குச் செல்ல முடிவு செய்தார். 1965 இல் 'எம்ப்ரியோ' (Embryo) என்ற தலைப்பில் அவர் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். | ||
அக்காலக்கட்டத்தில் பிரிட்டன் நாட்டில் பரவலாக வளர்ந்து கொண்டிருந்த நிற தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் (Black Consciousness Movement - Anti-Apartheid Activist Movement) அவருடைய ஈடுபாடு மென்மேலும் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு லண்டன் தேனீர் விடுதியில் 'Historic Black Voices Forum' என்ற பெயரில் கறுப்பின மக்களுக்கான மன்றம் ஒன்றை நிறுவினார். அங்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்களின் படைப்புகள் மற்றும் 'Galaxy Of Third World Activities' என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்பட்டன. வளர்ந்து வரும் நாடுகளின் நிலையை கவிதை மற்றும் இசை ஊடாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து 'Third World' என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை உருவாக்கினார். | |||
[[File:சிசில் 04.jpg|thumb]] | [[File:சிசில் 04.jpg|thumb]] | ||
சிசில் இராஜேந்திரா | சிசில் இராஜேந்திரா மொத்தம் 25 புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய கவிதைகள் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில், ஜெர்மன், பிரஞ்சு, சீனம், தமிழ், தகலாகு மொழி (Tagalog), எஸ்கிமோ (Esquimaux), மற்றும் ஜப்பானிய மொழி (Japanese) உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டைம் இதழ் (Time), நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic), ஆசியாவீக் (Asiaweek), ஆசியா பத்திரிகை (Asia Magazine), தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal), நியூ ஸ்டேட்ஸ்மேன் (New Statesman), தி அசாஹி ஷிம்பூன் (The Asahi Shimbun), தி கார்டியன் (The Guardian), ஃப எஸ்டன் எகொனொமிக் ரிவ்வியு (Far Eastern Economic Review), அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (United Nations High Commissioner for Refugees), ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children’s Fund), பிபிசி (BBC) மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) போன்ற பிரசுரங்களில் இவருடைய கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியப் பள்ளி பாடப்புத்தகங்கள், இடைநிலைக் கல்விக்கான பொதுச் சான்றிதழ் (General Certificate of Secondary Education), தேர்வுத் தாள்கள், சுற்றுச்சூழல் பிரசுரங்கள், மனித உரிமை ஆய்வுகள் போன்றவற்றிலும் தொடர்ந்து அவருடைய கவிதைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “The Hills and The Sea” என்ற கவிதைவழி தன் கிராமத்திற்கு ஏற்பட்ட நிலையை பதிவு செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு விருது பெற்ற ஒளிப்பதிவரான ஆண்ட்ரூ என்ஜி (Andrew Ng) என்பவர் இக்கவிதையால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இடம்பெயர்ந்த மீனவர்களின் அவல நிலை குறித்த ஆவணப்படம் ஒன்றை அதே தலைப்பில் வெளியிட்டுள்ளார். | ||
== சமூக வாழ்க்கை == | == சமூக வாழ்க்கை == | ||
[[File:சிசில் 03.jpg|thumb]] | [[File:சிசில் 03.jpg|thumb]] | ||
சிசில் ராஜேந்திரா லண்டனில் தீவிரமாக செயல்பட்டு வந்த பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International), தீண்டாமை ஒழிப்பு இயக்கம் (Anti Apartheid Movement), குடியுரிமைகளுக்கான தேசிய சபை (National Council for Civil Liberties) கருப்பின மக்களின் தீண்டாமை குறித்த விழிப்புணர்வு குழுக்கள் (black awareness groups) மற்றும் கருப்பின மக்களின் கல்விக்காக இலவச பல்கலைக்கழகம் (Free University of Black Studies) போன்ற மனிதவுரிமை சார்ந்த குழுக்களில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி கொண்டவர். | சிசில் ராஜேந்திரா லண்டனில் தீவிரமாக செயல்பட்டு வந்த பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International), தீண்டாமை ஒழிப்பு இயக்கம் (Anti Apartheid Movement), குடியுரிமைகளுக்கான தேசிய சபை (National Council for Civil Liberties) கருப்பின மக்களின் தீண்டாமை குறித்த விழிப்புணர்வு குழுக்கள் (black awareness groups) மற்றும் கருப்பின மக்களின் கல்விக்காக இலவச பல்கலைக்கழகம் (Free University of Black Studies) போன்ற மனிதவுரிமை சார்ந்த குழுக்களில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி கொண்டவர். | ||
மாணவர் கிறிஸ்தவ இயக்கம் (Student Christian Movement - SCM) மற்றும் ஐக்கிய பேரரசின் சமூக உறவுகள் ஆணையம் (United Kingdom Community Relations Commission) உடன் சேர்ந்து சட்ட அலுவலராகவும் பணியாற்றினார். சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்வையிடுவது, நீதிமன்ற வழக்குகளில் கலந்துகொள்வது, பிணை ஆணை ஏற்பாடு செய்தல், சட்டரீதியான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.\ | |||
1976ஆம் ஆண்டு மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பிய அவர் அப்போதைய மலேசிய இந்திய காங்கிரசு தலைவரும், மாநில செயற்குழு மன்றத் தலைவருமான டத்தோ தி சுப்பையாவிற்கு கீழ் “மெஸ்ஸர் சுப்பையா & கோ” (Messrs Subbiah & Co) என்ற நிறுவனத்தில் பணியாற்றினார். சில வழக்கறிஞர்கள், இரண்டு விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலரின் ஆதரவோடு பினாங்கு சட்ட ஆலோசனை மையம் (Penang Legal Advisory Centre - PLAC) என்ற பெயரில் 1980இல் நாட்டின் முதல் கிராமப்புற சட்ட உதவி மையத்தைத் தொடங்கினார். சிசில் இராஜேந்திரா அவர்கள் வாக்குப்பதிவு மூலம் மலேசிய வழக்கறிஞர் கழகத்தின் பொறுப்புகளில் நியமிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர், வழக்கறிஞர் கழகத்தின் தேசிய சட்ட உதவி குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். திரு. புரவலன் முத்து ராமன் மற்றும் திரு. சிவராசா ராசையா போன்ற வழக்கறிஞர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்ட உதவி மையம் திறக்க வலியுறுத்தினார். பின், 2000ஆம் ஆண்டு சிற்றூர்தி (Van) மூலமாக பல இடங்களுக்கு சென்று நடமாடும் சட்ட உதவி மையமாகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு, முதல் தேசிய சட்ட உதவி மாநாட்டை (National Legal Aid Conference) “ராயல் சிலாங்கூர் கிளப்பில்” (Royal Selangor Club) சிசில் இராஜேந்திரா அவர்கள் ஏற்பாடு செய்தார். | 1976ஆம் ஆண்டு மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பிய அவர் அப்போதைய மலேசிய இந்திய காங்கிரசு தலைவரும், மாநில செயற்குழு மன்றத் தலைவருமான டத்தோ தி சுப்பையாவிற்கு கீழ் “மெஸ்ஸர் சுப்பையா & கோ” (Messrs Subbiah & Co) என்ற நிறுவனத்தில் பணியாற்றினார். சில வழக்கறிஞர்கள், இரண்டு விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலரின் ஆதரவோடு பினாங்கு சட்ட ஆலோசனை மையம் (Penang Legal Advisory Centre - PLAC) என்ற பெயரில் 1980இல் நாட்டின் முதல் கிராமப்புற சட்ட உதவி மையத்தைத் தொடங்கினார். சிசில் இராஜேந்திரா அவர்கள் வாக்குப்பதிவு மூலம் மலேசிய வழக்கறிஞர் கழகத்தின் பொறுப்புகளில் நியமிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர், வழக்கறிஞர் கழகத்தின் தேசிய சட்ட உதவி குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். திரு. புரவலன் முத்து ராமன் மற்றும் திரு. சிவராசா ராசையா போன்ற வழக்கறிஞர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்ட உதவி மையம் திறக்க வலியுறுத்தினார். பின், 2000ஆம் ஆண்டு சிற்றூர்தி (Van) மூலமாக பல இடங்களுக்கு சென்று நடமாடும் சட்ட உதவி மையமாகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு, முதல் தேசிய சட்ட உதவி மாநாட்டை (National Legal Aid Conference) “ராயல் சிலாங்கூர் கிளப்பில்” (Royal Selangor Club) சிசில் இராஜேந்திரா அவர்கள் ஏற்பாடு செய்தார். | ||
மனித உரிமை தினத்தை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 10ஆம் திகதி வழக்கறிஞர்கள் கழகத்தில் “Festival of Rights” என்னும் விழா சிசில் அவர்களின் முயற்சியினாலேயே கொண்டாடப்படத் தொடங்கியது. மலேசியாவின் மிகவும் மதிப்பிற்குரிய வழக்கறிஞரான ராஜா அஜீஸ் அட்ரூஸின் (Raja Aziz Addruse) அவர்களின் கோரிக்கையை ஏற்று, சிசில் இராஜேந்திரா இரண்டு முறை தேசிய மனித உரிமைகள் சங்கத்தின் (HAKAM) தலைவராக பணியாற்றினார். | மனித உரிமை தினத்தை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 10ஆம் திகதி வழக்கறிஞர்கள் கழகத்தில் “Festival of Rights” என்னும் விழா சிசில் அவர்களின் முயற்சியினாலேயே கொண்டாடப்படத் தொடங்கியது. மலேசியாவின் மிகவும் மதிப்பிற்குரிய வழக்கறிஞரான ராஜா அஜீஸ் அட்ரூஸின் (Raja Aziz Addruse) அவர்களின் கோரிக்கையை ஏற்று, சிசில் இராஜேந்திரா இரண்டு முறை தேசிய மனித உரிமைகள் சங்கத்தின் (HAKAM) தலைவராக பணியாற்றினார். | ||
சிசில் ராஜேந்திரா சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து எழுதியவர். மலேசியாவின் வளர்ச்சி, அதன் சுற்றுச்சூழல் அமைப்பு, இதனால் கடுமையாக பாதித்த மக்களின் வாழ்வாதாரம் எனத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் | |||
== விருதுகள் / பரிசுகள் == | == விருதுகள் / பரிசுகள் == | ||
* மலேசிய வாழ்நாள் மனிதநேய விருதை – 2004 | * மலேசிய வாழ்நாள் மனிதநேய விருதை – 2004 | ||
Line 21: | Line 28: | ||
* வாழ்நாள் சாதனையாளர் விருது (Malaysian Bar Lifetime Achievement Award) – 2019 (மலேசிய வழக்கறிஞர்கள் கழகம் வழங்கியது) | * வாழ்நாள் சாதனையாளர் விருது (Malaysian Bar Lifetime Achievement Award) – 2019 (மலேசிய வழக்கறிஞர்கள் கழகம் வழங்கியது) | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
====== கவிதைகள் ====== | ====== கவிதைகள் ====== | ||
*எம்ப்ரியோ – 1965 (Embryo) | *எம்ப்ரியோ – 1965 (Embryo) |
Revision as of 18:25, 2 August 2022
சிசில் ராஜேந்திரா (1941) மலேசிய கவிஞர் மற்றும் வழக்கறிஞர். இவரது கவிதைகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தனி வாழ்க்கை
சிசில் ராஜேந்திரா 1941 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் பிறந்தார். ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி படிப்பை செயின்ட் சேவியர் பள்ளியில் முடித்தார். பின், சிங்கப்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்றார். அதன் பின், லண்டனில் அமைந்திருந்த லிங்கனின் வழக்கறிஞர் விடுதியில் (Lincoln’s Inn) சேர்ந்து 1964ஆம் ஆண்டு தன் சட்டக்கல்வியைப் பயிலத் தொடங்கி, 1969ஆம் ஆண்டு சட்டக்கல்வியை முடித்து மலேசியா திரும்பினார்.
இலக்கிய வாழ்க்கை
சட்டம் பயின்று திரும்பிய சிசில் ராஜேந்திராவுக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சில சட்ட நிறுவனங்களில் இருந்து சட்டம் பழக வாய்ப்புகள் வந்தன. எனினும், ஓர் எழுத்தாளராக தனது திறமைகளை இன்னும் மெருகேற்ற வேண்டும் என்று உணர்ந்த செசில் இராஜேந்திரா, மீண்டும் லண்டனுக்குச் செல்ல முடிவு செய்தார். 1965 இல் 'எம்ப்ரியோ' (Embryo) என்ற தலைப்பில் அவர் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
அக்காலக்கட்டத்தில் பிரிட்டன் நாட்டில் பரவலாக வளர்ந்து கொண்டிருந்த நிற தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் (Black Consciousness Movement - Anti-Apartheid Activist Movement) அவருடைய ஈடுபாடு மென்மேலும் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு லண்டன் தேனீர் விடுதியில் 'Historic Black Voices Forum' என்ற பெயரில் கறுப்பின மக்களுக்கான மன்றம் ஒன்றை நிறுவினார். அங்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்களின் படைப்புகள் மற்றும் 'Galaxy Of Third World Activities' என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்பட்டன. வளர்ந்து வரும் நாடுகளின் நிலையை கவிதை மற்றும் இசை ஊடாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து 'Third World' என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை உருவாக்கினார்.
சிசில் இராஜேந்திரா மொத்தம் 25 புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய கவிதைகள் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில், ஜெர்மன், பிரஞ்சு, சீனம், தமிழ், தகலாகு மொழி (Tagalog), எஸ்கிமோ (Esquimaux), மற்றும் ஜப்பானிய மொழி (Japanese) உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டைம் இதழ் (Time), நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic), ஆசியாவீக் (Asiaweek), ஆசியா பத்திரிகை (Asia Magazine), தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal), நியூ ஸ்டேட்ஸ்மேன் (New Statesman), தி அசாஹி ஷிம்பூன் (The Asahi Shimbun), தி கார்டியன் (The Guardian), ஃப எஸ்டன் எகொனொமிக் ரிவ்வியு (Far Eastern Economic Review), அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (United Nations High Commissioner for Refugees), ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children’s Fund), பிபிசி (BBC) மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) போன்ற பிரசுரங்களில் இவருடைய கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியப் பள்ளி பாடப்புத்தகங்கள், இடைநிலைக் கல்விக்கான பொதுச் சான்றிதழ் (General Certificate of Secondary Education), தேர்வுத் தாள்கள், சுற்றுச்சூழல் பிரசுரங்கள், மனித உரிமை ஆய்வுகள் போன்றவற்றிலும் தொடர்ந்து அவருடைய கவிதைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “The Hills and The Sea” என்ற கவிதைவழி தன் கிராமத்திற்கு ஏற்பட்ட நிலையை பதிவு செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு விருது பெற்ற ஒளிப்பதிவரான ஆண்ட்ரூ என்ஜி (Andrew Ng) என்பவர் இக்கவிதையால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இடம்பெயர்ந்த மீனவர்களின் அவல நிலை குறித்த ஆவணப்படம் ஒன்றை அதே தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
சமூக வாழ்க்கை
சிசில் ராஜேந்திரா லண்டனில் தீவிரமாக செயல்பட்டு வந்த பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International), தீண்டாமை ஒழிப்பு இயக்கம் (Anti Apartheid Movement), குடியுரிமைகளுக்கான தேசிய சபை (National Council for Civil Liberties) கருப்பின மக்களின் தீண்டாமை குறித்த விழிப்புணர்வு குழுக்கள் (black awareness groups) மற்றும் கருப்பின மக்களின் கல்விக்காக இலவச பல்கலைக்கழகம் (Free University of Black Studies) போன்ற மனிதவுரிமை சார்ந்த குழுக்களில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி கொண்டவர்.
மாணவர் கிறிஸ்தவ இயக்கம் (Student Christian Movement - SCM) மற்றும் ஐக்கிய பேரரசின் சமூக உறவுகள் ஆணையம் (United Kingdom Community Relations Commission) உடன் சேர்ந்து சட்ட அலுவலராகவும் பணியாற்றினார். சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்வையிடுவது, நீதிமன்ற வழக்குகளில் கலந்துகொள்வது, பிணை ஆணை ஏற்பாடு செய்தல், சட்டரீதியான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.\
1976ஆம் ஆண்டு மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பிய அவர் அப்போதைய மலேசிய இந்திய காங்கிரசு தலைவரும், மாநில செயற்குழு மன்றத் தலைவருமான டத்தோ தி சுப்பையாவிற்கு கீழ் “மெஸ்ஸர் சுப்பையா & கோ” (Messrs Subbiah & Co) என்ற நிறுவனத்தில் பணியாற்றினார். சில வழக்கறிஞர்கள், இரண்டு விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலரின் ஆதரவோடு பினாங்கு சட்ட ஆலோசனை மையம் (Penang Legal Advisory Centre - PLAC) என்ற பெயரில் 1980இல் நாட்டின் முதல் கிராமப்புற சட்ட உதவி மையத்தைத் தொடங்கினார். சிசில் இராஜேந்திரா அவர்கள் வாக்குப்பதிவு மூலம் மலேசிய வழக்கறிஞர் கழகத்தின் பொறுப்புகளில் நியமிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர், வழக்கறிஞர் கழகத்தின் தேசிய சட்ட உதவி குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். திரு. புரவலன் முத்து ராமன் மற்றும் திரு. சிவராசா ராசையா போன்ற வழக்கறிஞர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்ட உதவி மையம் திறக்க வலியுறுத்தினார். பின், 2000ஆம் ஆண்டு சிற்றூர்தி (Van) மூலமாக பல இடங்களுக்கு சென்று நடமாடும் சட்ட உதவி மையமாகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு, முதல் தேசிய சட்ட உதவி மாநாட்டை (National Legal Aid Conference) “ராயல் சிலாங்கூர் கிளப்பில்” (Royal Selangor Club) சிசில் இராஜேந்திரா அவர்கள் ஏற்பாடு செய்தார்.
மனித உரிமை தினத்தை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 10ஆம் திகதி வழக்கறிஞர்கள் கழகத்தில் “Festival of Rights” என்னும் விழா சிசில் அவர்களின் முயற்சியினாலேயே கொண்டாடப்படத் தொடங்கியது. மலேசியாவின் மிகவும் மதிப்பிற்குரிய வழக்கறிஞரான ராஜா அஜீஸ் அட்ரூஸின் (Raja Aziz Addruse) அவர்களின் கோரிக்கையை ஏற்று, சிசில் இராஜேந்திரா இரண்டு முறை தேசிய மனித உரிமைகள் சங்கத்தின் (HAKAM) தலைவராக பணியாற்றினார்.
சிசில் ராஜேந்திரா சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து எழுதியவர். மலேசியாவின் வளர்ச்சி, அதன் சுற்றுச்சூழல் அமைப்பு, இதனால் கடுமையாக பாதித்த மக்களின் வாழ்வாதாரம் எனத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்
விருதுகள் / பரிசுகள்
- மலேசிய வாழ்நாள் மனிதநேய விருதை – 2004
- “DIVA” (Danish International Visiting Artists) விருது – 2011 (சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய அவரது கவிதைகளை அங்கீகரிக்கும் விதமாக, டென்மார்க் நாட்டின் கலை மன்றம் வழங்கியது.)
- தனி மனித உரிமைகள் (Individual Human Rights Award) விருது – 2012 (மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் (Human Rights Commission of Malaysia - SUHAKAM) வழங்கியது)
- “Living Heritage Treasure” அங்கீகாரம் – 2015 (பினாங்கு பாரம்பரிய அறக்கட்டளையால் (Penang Heritage Trust) அங்கீகரிக்கப்பட்டார்.
- வாழ்நாள் சாதனையாளர் விருது (Malaysian Bar Lifetime Achievement Award) – 2019 (மலேசிய வழக்கறிஞர்கள் கழகம் வழங்கியது)
நூல்கள்
கவிதைகள்
- எம்ப்ரியோ – 1965 (Embryo)
- போன்ஸ் அன்ட் ஃபெதெர்சஸ் – 1978 (Bones and Feathers)
- ரெஃவுய்ஜிஸ் & அதெர் டெஸ்பய்ர்ஸ் – 1980 (Refugees & Other Despairs)
- ஹவர் ஆஃப் அசாசின்ஸ் – 1983 (Hour of Assassins)
- சொங்ஸ் ஃபொர் தெ என்சங்...போம்ஸ் ஒன் என்பொயெடிட் இஸ்ஸுஸ் லைக் வார் என் வான்ட், என்ட் ரெஃபுஜீஸ் – 1983 (Songs for the Unsung... Poems on Unpoetic Issues like War and Want, and Refugees)
- சய்ல்ட் அப்ஃ தே சன் – 1986 (Child of the Sun)
- டோவ் ஒன் ஃபயர் : போம்ஸ் ஒன் பீஸ், ஜுச்டிஸ் என்ட் எகொலொஜி – 1986 (Dove on Fire: Poems on Peace, Justice and Ecology)
- லாவர்ஸ், லுனடிட்ஸ் & லல்லாங் – 1989 (Lovers, Lunatics & Lallang)
- ப்ரொகென் பட்ஸ் – 1994 (Broken Buds)
- பெர்சனல் & ப்ரொஃபேன் - Personal & Profane
- லீவ்-தேக்கிங் - Leave-taking
நாவல்
- நோ பெட் ஆஃப் ரோஸஸ்: தி ரோஸ் சான் ஸ்டோரி – 2013 (No Bed of Roses: The Rose Chan Story)
உசாத்துணை
- சிசில் ராஜேந்திரா: உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படும் கவிஞர் - அபிராமி கணேசன்
- Cecil Rajendra: Rose Chan was a living legend, myth–maker : https://www.malaysianbar.org.my/article/news/legal-and-general-news/legal-news/cecil-rajendra-rose-chan-was-a-living-legend-myth-maker
- Citation for Cecil Rajendra Malaysian Bar Lifetime Achievement Award 2019 by Mureli Navaratnam Member of the Bar: https://www.malaysianbar.org.my/cms/upload_files/document/ADD%202019-Citation.MBLAA.pdf
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.