ஒக்கூர்மாசாத்தியார்: Difference between revisions
No edit summary |
|||
Line 11: | Line 11: | ||
* மகளிரின் வீரம், மனத்திடம் புலப்பபடும் பாடலாகவும் அமைந்துள்ளது. | * மகளிரின் வீரம், மனத்திடம் புலப்பபடும் பாடலாகவும் அமைந்துள்ளது. | ||
===== அகநானூறு ===== | ===== அகநானூறு ===== | ||
* முல்லை நிலக்காட்சி: பசுந்தளிர் நிறம் கொண்ட கிளி மரப் பொந்தில் | * முல்லை நிலக்காட்சி: பசுந்தளிர் நிறம் கொண்ட கிளி மரப் பொந்தில் வளர்க்கும் கிளிப்பிள்ளையின் தூவிச்சிறகு போலச் சுனையில் பாசி படர்ந்த நீர் நிறைந்திருக்கிறது. முழக்கும் பறையின் கண் போன்ற சுனையில் மழைத்துளி படும்போது நீர்க்குமிழிகள் துள்ளுகின்றன. காற்று பூக்களை உதிர்க்கிறது. நிலம் மணக்கப் பூக்கள் காற்றில் பறந்தோடுகின்றன. மரம்கொத்திப் பறவையின் சிறகு போல் தோன்றிப் பறந்தோடுகின்றன. அறல் அறலாகப் படிந்திருக்கும் மணலில் பறந்தோடுகின்றன. தேன் உண்ணும் வண்டுகள் காற்றால் உதிர்ந்த பூக்களிலும் மொய்க்கின்றன. | ||
* | * | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
Line 57: | Line 57: | ||
<poem> | <poem> | ||
</poem> | </poem> | ||
குறுந்தொகை | குறுந்தொகை 220 | ||
<poem> | <poem> | ||
</poem> | </poem> | ||
Line 64: | Line 64: | ||
</poem> | </poem> | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* அகநானூறு 324 | * [http://vaiyan.blogspot.com/2016/10/agananuru-324.html அகநானூறு 324] | ||
* அகநானூறு 384 | * அகநானூறு 384 | ||
* குறுந்தொகை 139 | * குறுந்தொகை 139 | ||
* குறுந்தொகை 186 | * குறுந்தொகை 186 | ||
* குறுந்தொகை | * குறுந்தொகை 220 | ||
* குறுந்தொகை 275 | * குறுந்தொகை 275 | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 14:17, 1 August 2022
ஒக்கூர்மாசாத்தியார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய எட்டு பாடல்கள் சங்கத்தொகை நூலில் உள்ளன. புறநானூற்றில் தமிழர்களின் வீரத்தைச் சொல்லும் இவர் பாடிய 279வது பாடலுக்காக நினைவுகூரப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
மாசாத்தியார் ஒக்கூரில் பிறந்தார். ஒக்கூர் சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் அருகே உள்ளது. இயற்பெயர் சாத்தியார்.
இலக்கிய வாழ்க்கை
ஒக்கூர்மாசாத்தியார் பாடிய எட்டு பாடல்கள் சங்கத்தொகை நூலில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று புறத்துறையும், பிற ஏழும் அகத்துறைப்பாடலாக அமைந்துள்ளது. புறநானூற்றில் 279வது பாடலும், அகநானூற்றில் 324, 384வது பாடல்களும், குறுந்தொகையில் 126, 139, 186, 220 மற்றும் 275வது பாடல்களும் பாடியுள்ளார்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புற நானூறு 279
- வாகைத்திணைப்பாடல், மூதின் முல்லை துறையைச் சார்ந்த பாடல்.
- போர்ப்பறை ஒலிக்கக் கேட்ட பெண் ஏற்கனவே நிகழந்த போரில் முன் வரிசையில் நின்று யானைப்படையை எதிர்த்து போரிட்டு அண்ணனையும், கணவனையும் பறிகொடுத்திருந்ததால் இந்த முறை போருக்கு அனுப்ப தன் வீட்டில் ஆண்மகன் இல்லையே என வருத்தமுறுகிறாள். பின் சென்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் இள மகனுக்கு எண்ணெய் நீவி ”போருக்குச் செல்க” என்று சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.
- தமிழகத்தில் தொடர்ந்து போர் நிகழ்ந்து அமைதியின்மை இருந்ததை அறிய முடிகிறது.
- மகளிரின் வீரம், மனத்திடம் புலப்பபடும் பாடலாகவும் அமைந்துள்ளது.
அகநானூறு
- முல்லை நிலக்காட்சி: பசுந்தளிர் நிறம் கொண்ட கிளி மரப் பொந்தில் வளர்க்கும் கிளிப்பிள்ளையின் தூவிச்சிறகு போலச் சுனையில் பாசி படர்ந்த நீர் நிறைந்திருக்கிறது. முழக்கும் பறையின் கண் போன்ற சுனையில் மழைத்துளி படும்போது நீர்க்குமிழிகள் துள்ளுகின்றன. காற்று பூக்களை உதிர்க்கிறது. நிலம் மணக்கப் பூக்கள் காற்றில் பறந்தோடுகின்றன. மரம்கொத்திப் பறவையின் சிறகு போல் தோன்றிப் பறந்தோடுகின்றன. அறல் அறலாகப் படிந்திருக்கும் மணலில் பறந்தோடுகின்றன. தேன் உண்ணும் வண்டுகள் காற்றால் உதிர்ந்த பூக்களிலும் மொய்க்கின்றன.
பாடல் நடை
- புறநானூறு 279
கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், 5
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள், 10
செருமுக நோக்கிச் செல்க என விடுமே!
அகநானூறு 324
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!
அகநானூறு 384
"...பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? 10
உரைமதி வாழியோ, வலவ!"
குறுந்தொகை 126
குறுந்தொகை 139
குறுந்தொகை 186
குறுந்தொகை 220
குறுந்தொகை 275
இணைப்புகள்
- அகநானூறு 324
- அகநானூறு 384
- குறுந்தொகை 139
- குறுந்தொகை 186
- குறுந்தொகை 220
- குறுந்தொகை 275
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்
- ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் இலக்கிய வளமை: சி. மகேஸ்வரி
- வீரத்திற்கு வித்திட்ட புலவர் மாசாத்தியார்...! கேட்பாரின்றிக் கிடக்கும் நினைவிடம்: vikatan
- சங்ககால புலவர் ஒக்கூர் மாசாத்தியர் பற்றி: dailythanthi
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.