under review

அனுக்ரஹா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(category & stage updated)
Line 11: Line 11:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[https://solvanam.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ வீடும் வெளியும்_சொல்வனம்]
*[https://solvanam.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ வீடும் வெளியும்_சொல்வனம்]
*[https://padhaakai.com/2021/09/26/on-anugraha/ ச. அனுக்ரஹாவின் வீடும் வெளியும் தொகுப்பினை பற்றி பதாகை இணையப் பக்கம்.]
*[https://padhaakai.com/2021/09/26/on-anugraha/ ச. அனுக்ரஹாவின் வீடும் வெளியும் தொகுப்பினை பற்றி பதாகை இணையப் பக்கம்]
 
{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:37, 26 July 2022

அனுக்ரஹா

அனுக்ரஹா (பிறப்பு:டிசம்பர் 26, 1988) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சங்கரநாராயணன், லக்ஷ்மி தம்பதியினருக்கு டிசம்பர் 26, 1988-ல் மகளாக சென்னையில் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு மூத்த சகோதரி. வளர்ந்தது சேலம். சேலம் சாரதா மகளிர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போது பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கணவர் கார்த்திக் ராமநாதன்.

இலக்கிய வாழ்க்கை

அனுக்ரஹாவின் முதல் படைப்பான கவிதை ‘சொல்வனம்’ இணைய இதழில் 2009-ல் வெளியானது. இவரின் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, வாசிப்பு அனுபவக் கட்டுரைகள் பதாகை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவற்றிலிருந்து கதைகளும் கவிதைகளும் தொகுக்கப்பட்டு யாவரும்/பதாகை வெளியீடாக “வீடும் வெளியும்” என்ற தலைப்பில் 2020-ல் வந்தது. சொல்வனம் இதழின் பதிப்புக் குழுவில், இதழ் வடிவமைப்பில் பங்காற்றுகிறார்.

இலக்கிய இடம்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் "அவரது வீடும் வெளியும் தொகுப்பு சிறுகதைகள் கவிதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என கலவையான வடிவம் கொண்ட பரிசோதனை முயற்சி." எனக் குறிப்பிடுகிறார்

நூல்கள்

  • வீடும் வெளியும்

வெளி இணைப்புகள்


✅Finalised Page