தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:
தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம் ( 1994) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஆய்வு நூல். தஞ்சை பெருவுடையார் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வுகள் அடங்கியது, சிற்பவியல், ஆகமமுறைகள் மற்றும் வழிபாட்டுமுறைகளை விவரிக்கும் வரலாற்றாய்வுநூல்.

== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==
1994-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டிற்காக [[குடவாயில் பாலசுப்ரமணியன்]] எழுதிய 'தஞ்சாவூர்' என்னும் நூல் பெரிய கோவிலின் 1001-ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்தது. இந்த ஆய்வு 1995-ஆம் ஆண்டு அகரம் பதிப்பகத்தால் நூல் வடிவம் கண்டது. இதன் விரிவாக்கமாக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சைபெரியகோயில்- இராஜராஜேச்சரம் என்னும் ஆய்வுநூல் 2010-ல் வெளிவந்தது. 2020ல் அன்னம் வெளியீடாக இந்நூல் இராஜராஜேச்சரம் என்னும் பெயரில் வெளிவந்தது.
1994-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டிற்காக [[குடவாயில் பாலசுப்ரமணியன்]] எழுதிய 'தஞ்சாவூர்' என்னும் நூல் பெரிய கோவிலின் 1001-ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்தது. இந்த ஆய்வு 1995-ஆம் ஆண்டு அகரம் பதிப்பகத்தால் நூல் வடிவம் கண்டது. இதன் விரிவாக்கமாக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சைபெரியகோயில்- இராஜராஜேச்சரம் என்னும் ஆய்வுநூல் 2010-ல் வெளிவந்தது. சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் இதை வெளியிட்டது. 2020ல் மறுபதிப்பு இராஜராஜேச்சரம் என்னும் பெயரில் வெளிவந்தது.
 
== உள்ளடக்கம் ==
இந்நூல் ஒன்பது பகுதிகளும் பின்னிணைப்பும் கொண்டது. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் கோபுரங்கள், கட்டிட அமைப்பு ஆகியவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கோயிலின் அனைத்துச் சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் விழாக்கள், ஆசாரங்கள், ஆகமநெறிகள் கூறப்பட்டுள்ளந
பின்னிணைப்பில் கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா, கருவூர்ப் புராணம் ஆகியவை உரையுடன் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்த சாந்தார அறையின் சுவரில் சோழர் கால சுவரோவியங்கள்  இருப்பதை 1931இல் கண்டு உலகுக்கு அறிவித்த பேராசிரியர் எஸ். கே. கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
 
== ஆய்வு இடம் ==
தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை மட்டும் மையமாக்கி வரலாற்றாய்வை நிகழ்த்தும் நுண்வரலாற்றாய்வுமுறையின் மிகச்சிறந்த உதாரணமாக இந்நூல் அமைந்துள்ளது. ஏற்கனவே கே.கே.பிள்ளை எழுதிய சுசீந்திரம் பேராலய வரலாறே இந்நூலின் முன்னோடியாகும். தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை மட்டும் கொண்டு சோழர் ஆட்சிக்காலத்தின் சித்திரத்தை அளிக்கிறது. கலைவரலாற்றை எழுதுவதிலும் இந்நூல் முன்னோடியானது.
 
== உசாத்துணை ==

Revision as of 00:27, 22 July 2022

இராஜராஜேச்சரம்

தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம் ( 1994) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஆய்வு நூல். தஞ்சை பெருவுடையார் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வுகள் அடங்கியது, சிற்பவியல், ஆகமமுறைகள் மற்றும் வழிபாட்டுமுறைகளை விவரிக்கும் வரலாற்றாய்வுநூல்.

எழுத்து, வெளியீடு

1994-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டிற்காக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய 'தஞ்சாவூர்' என்னும் நூல் பெரிய கோவிலின் 1001-ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்தது. இந்த ஆய்வு 1995-ஆம் ஆண்டு அகரம் பதிப்பகத்தால் நூல் வடிவம் கண்டது. இதன் விரிவாக்கமாக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சைபெரியகோயில்- இராஜராஜேச்சரம் என்னும் ஆய்வுநூல் 2010-ல் வெளிவந்தது. சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் இதை வெளியிட்டது. 2020ல் மறுபதிப்பு இராஜராஜேச்சரம் என்னும் பெயரில் வெளிவந்தது.

உள்ளடக்கம்

இந்நூல் ஒன்பது பகுதிகளும் பின்னிணைப்பும் கொண்டது. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் கோபுரங்கள், கட்டிட அமைப்பு ஆகியவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கோயிலின் அனைத்துச் சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் விழாக்கள், ஆசாரங்கள், ஆகமநெறிகள் கூறப்பட்டுள்ளந பின்னிணைப்பில் கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா, கருவூர்ப் புராணம் ஆகியவை உரையுடன் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்த சாந்தார அறையின் சுவரில் சோழர் கால சுவரோவியங்கள்  இருப்பதை 1931இல் கண்டு உலகுக்கு அறிவித்த பேராசிரியர் எஸ். கே. கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

ஆய்வு இடம்

உசாத்துணை