being created

பா. தாவூத்ஷா: Difference between revisions

From Tamil Wiki
(Para Added, Image Added)
 
(Para Added)
Line 1: Line 1:
எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர், புத்தக வெளியீட்டாளர் எனப் பல களங்களில் இயங்கியவர், பா. தாவூத் ஷா. இஸ்லாமிய இதழான ‘தாருல் இஸ்லாம்’ இதழின் நிறுவனர்.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர், புத்தக வெளியீட்டாளர் எனப் பல களங்களில் இயங்கியவர், பா. தாவூத் ஷா. இஸ்லாமிய இதழான ‘[[தாருல் இஸ்லாம்]]’ இதழின் நிறுவனர்.
[[File:Davudh sha.jpg|thumb|தாவூத் ஷா]]
[[File:Davudh sha.jpg|thumb|தாவூத் ஷா]]
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தாவூத் ஷா, தஞ்சாவூரில் உள்ள கீழ்மாந்தூர் என்னும் குக்கிராமத்தில், மார்ச் 29, 1885 அன்று பாப்பு ராவுத்தர் - குல்ஸும் பீவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை சொந்த ஊரான நாச்சியார் கோவிலிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். இடைநிலைக் கல்வியை கும்பகோணம் நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது இவருடன் பயின்ற மாணவர் தான் பிற்காலத்தில் கணித மேதையாக உயர்ந்த ராமாநுஜம். தனது 18-ம் வயதில் தந்தையை இழந்தார் தாவூத் ஷா. தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்று எஃப்.ஏ. மற்றும்  பி.ஏ. பட்டம் பெற்றார். உ.வே. சாமிநாத ஐயர், டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாவூத்ஷாவிற்கு ஆசிரியர்களாக இருந்தனர்.  உயர் கல்வியை முடித்த தாவூத் ஷா, மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பரிசாக வென்றார். தமிழோடு ஆங்கிலம், அரபு, உருது ஆகிய மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.
தாவூத் ஷா, தஞ்சாவூரில் உள்ள கீழ்மாந்தூர் என்னும் குக்கிராமத்தில், மார்ச் 29, 1885 அன்று பாப்பு ராவுத்தர் - குல்ஸும் பீவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை சொந்த ஊரான நாச்சியார் கோவிலிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். இடைநிலைக் கல்வியை கும்பகோணம் நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது இவருடன் பயின்ற மாணவர் தான் பிற்காலத்தில் கணித மேதையாக உயர்ந்த ராமாநுஜம்.

தனது 18-ம் வயதில் தந்தையை இழந்தார் தாவூத் ஷா. தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்று எஃப்.ஏ. மற்றும்  பி.ஏ. பட்டம் பெற்றார். உ.வே. சாமிநாத ஐயர், டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாவூத்ஷாவிற்கு ஆசிரியர்களாக இருந்தனர்.  உயர் கல்வியை முடித்த தாவூத் ஷா, மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பரிசாக வென்றார். தமிழோடு ஆங்கிலம், அரபு, உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
ஏப்ரல் 24, 1908-ல், சபுரா பீவியுடன் திருமணம் நடந்தது. அவர் மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 1912-ல், சபுரா பீவி உடல்நலக் குறைவால் காலமானார். தென்னாற்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் தாவூத் ஷா. 1915-ல், மைமூன் பீவியை மணம் செய்து கொண்டார். மூன்று புதல்வர்கள் மற்றும் நான்கு புதல்விகள் பிறந்தனர். சில வருடங்களுக்குப் பின் இலாகா தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, 1917-ல், உதவி நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். ஒன்பது வருடங்கள் அப்பணியில் இருந்தார்.  
ஏப்ரல் 24, 1908-ல், சபுரா பீவியுடன்ம, தாவூத்ஷாவுக்குத் திருமணம் நடந்தது. அவர் மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 1912-ல், சபுரா பீவி உடல்நலக் குறைவால் காலமானார். அதன் பின் அரசுப் பணி வாய்ப்பு வந்தது. தென்னாற்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் தாவூத் ஷா. 1915-ல், மைமூன் பீவியை மணம் செய்து கொண்டார். மூன்று புதல்வர்கள் மற்றும் நான்கு புதல்விகள் பிறந்தனர். சில வருடங்களுக்குப் பின் இலாகா தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, 1917-ல், உதவி நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். ஒன்பது வருடங்கள் அப்பணியில் இருந்தார்.  
[[File:Tharul islam 1927.jpg|thumb|தாருல் இஸ்லாம் இதழ்]]
[[File:Tharul islam 1927.jpg|thumb|தாருல் இஸ்லாம் இதழ்]]
== இதழியல் வாழ்க்கை ==
== இதழியல் வாழ்க்கை ==
தாவூத் ஷாவிற்கு இளமையிலேயே இதழியல் துறையில் ஆர்வம் இருந்தது. எழுத்து, பேச்சு இரண்டிலுமே ஈடுபாடு உடையவராக இருந்தார். தனது பேச்சுக்களை “முஸ்லிம் சங்க முதற் கமலம்” என்ற தலைப்பில்  நூலாக வெளியிட்டு வந்தார். இஸ்லாமிய மக்களிடையே எழுச்சியையும், விழிப்புணர்ச்சியையும் தூண்டி அவர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக 1919, ஜனவரியில்,  ‘முதல் கமலம்’ இதழையே பெயர் மாற்றி, ‘தத்துவ இஸ்லாம்’ (ISLAM AS IT IS) என்ர பெயரில் ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பின், 1923-ல், அதனைத் ‘தாருல் இஸ்லாம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். முதலில் மாத இதழாக வெளிவந்த  ’தாருல் இஸ்லாம்’ பின்னர் மாதமிருமுறை இதழாகவும், வார இதழாகவும், நாளிதழாகவும் வெளியாகிப் பின்னர் மாத இதழாக 1957 வரை வெளிவந்தது.
தாவூத் ஷாவிற்கு இளமையிலேயே இதழியல் துறையில் ஆர்வம் இருந்தது. எழுத்து, பேச்சு இரண்டிலுமே ஈடுபாடு உடையவராக இருந்தார். தனது சிந்தனைகளை “முஸ்லிம் சங்க முதற் கமலம்” என்ற தலைப்பில்  நூலாக வெளியிட்டு வந்தார். இஸ்லாமிய மக்களிடையே எழுச்சியையும், விழிப்புணர்ச்சியையும் தூண்டி அவர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக 1919, ஜனவரியில்,  ‘முதல் கமலம்’ இதழையே பெயர் மாற்றி, ‘தத்துவ இஸ்லாம்’ (ISLAM AS IT IS) என்ர பெயரில் ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பின், 1923-ல், அதனைத் ‘தாருல் இஸ்லாம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். முதலில் மாத இதழாக வெளிவந்த  ’தாருல் இஸ்லாம்’ பின்னர் மாதமிருமுறை இதழாகவும், வார இதழாகவும், நாளிதழாகவும் வெளியாகிப் பின்னர் மாத இதழாக 1957 வரை வெளிவந்தது.
 
Revision as of 10:44, 21 July 2022

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர், புத்தக வெளியீட்டாளர் எனப் பல களங்களில் இயங்கியவர், பா. தாவூத் ஷா. இஸ்லாமிய இதழான ‘தாருல் இஸ்லாம்’ இதழின் நிறுவனர்.

தாவூத் ஷா

பிறப்பு, கல்வி

தாவூத் ஷா, தஞ்சாவூரில் உள்ள கீழ்மாந்தூர் என்னும் குக்கிராமத்தில், மார்ச் 29, 1885 அன்று பாப்பு ராவுத்தர் - குல்ஸும் பீவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை சொந்த ஊரான நாச்சியார் கோவிலிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். இடைநிலைக் கல்வியை கும்பகோணம் நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது இவருடன் பயின்ற மாணவர் தான் பிற்காலத்தில் கணித மேதையாக உயர்ந்த ராமாநுஜம்.

தனது 18-ம் வயதில் தந்தையை இழந்தார் தாவூத் ஷா. தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்று எஃப்.ஏ. மற்றும்  பி.ஏ. பட்டம் பெற்றார். உ.வே. சாமிநாத ஐயர், டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாவூத்ஷாவிற்கு ஆசிரியர்களாக இருந்தனர்.  உயர் கல்வியை முடித்த தாவூத் ஷா, மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பரிசாக வென்றார். தமிழோடு ஆங்கிலம், அரபு, உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

ஏப்ரல் 24, 1908-ல், சபுரா பீவியுடன்ம, தாவூத்ஷாவுக்குத் திருமணம் நடந்தது. அவர் மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 1912-ல், சபுரா பீவி உடல்நலக் குறைவால் காலமானார். அதன் பின் அரசுப் பணி வாய்ப்பு வந்தது. தென்னாற்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் தாவூத் ஷா. 1915-ல், மைமூன் பீவியை மணம் செய்து கொண்டார். மூன்று புதல்வர்கள் மற்றும் நான்கு புதல்விகள் பிறந்தனர். சில வருடங்களுக்குப் பின் இலாகா தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, 1917-ல், உதவி நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். ஒன்பது வருடங்கள் அப்பணியில் இருந்தார்.

தாருல் இஸ்லாம் இதழ்

இதழியல் வாழ்க்கை

தாவூத் ஷாவிற்கு இளமையிலேயே இதழியல் துறையில் ஆர்வம் இருந்தது. எழுத்து, பேச்சு இரண்டிலுமே ஈடுபாடு உடையவராக இருந்தார். தனது சிந்தனைகளை “முஸ்லிம் சங்க முதற் கமலம்” என்ற தலைப்பில்  நூலாக வெளியிட்டு வந்தார். இஸ்லாமிய மக்களிடையே எழுச்சியையும், விழிப்புணர்ச்சியையும் தூண்டி அவர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக 1919, ஜனவரியில்,  ‘முதல் கமலம்’ இதழையே பெயர் மாற்றி, ‘தத்துவ இஸ்லாம்’ (ISLAM AS IT IS) என்ர பெயரில் ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பின், 1923-ல், அதனைத் ‘தாருல் இஸ்லாம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். முதலில் மாத இதழாக வெளிவந்த  ’தாருல் இஸ்லாம்’ பின்னர் மாதமிருமுறை இதழாகவும், வார இதழாகவும், நாளிதழாகவும் வெளியாகிப் பின்னர் மாத இதழாக 1957 வரை வெளிவந்தது.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.