being created

கமலா சத்தியநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Para corrected)
Line 37: Line 37:
1919-ல் கமலா, தனது குழந்தைகளின் மேற் கல்விக்காக, தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு அதில் கிடைத்த தொகை மூலம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

== இங்கிலாந்து வாழ்க்கை ==
== இங்கிலாந்து வாழ்க்கை ==
வாழ்க்கையின் அதுநாள் வரையிலான கவலைகளை மறக்கக் கூடிய சூழல் கமலாவுக்கு இங்கிலாந்தில் அமைந்தது. புதிய பல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. தனது ஓய்வு நேரத்தில் இந்தியன் ரீ ஃபார்மர் போன்ற இந்திய இதழ்கள் சிலவற்றிற்கு இங்கிலாந்திலிருந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார். மகன் பில், ஐ.சி.எஸ். தேர்ச்சி பெறும் வரை இங்கிலாந்தில் இருந்த கமலா சத்தியநாதன் அதன் பின் தமிழ்நாடு திரும்பினார்.  

== சமூகப் பணிகள் ==
== சமூகப் பணிகள் ==
[[File:Kamala Books From Academy.jpg|thumb|Kamala Books]]
சென்னை திரும்பிய கமலா சத்தியநாதன், தனது இங்கிலாந்து அனுபவங்களை, தி ஹிந்து இதழில், 1925-ம் ஆண்டு முதல், ’மை இப்ம்ரஷன்ஸ் ஆஃப் இங்லாண்ட்’ (My Impressions of England) என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதினார்.  

இங்கிலாந்தில் வசித்த தனது தோழி திருமதி ஈ.எஸ்.அப்பாசுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார் கமலா சத்தியநாதன். அதற்கு ‘வித்யோதயா’ <ref>https://vidyodayaschools.in/history.php</ref> என்று பெயர் சூட்டியதுடன் பள்ளியின் முதல் முதலவர் ஆகவும் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் மூன்றாண்டுகள் சென்னைப்பல்கலையிலும், ஆந்திரப் பல்கலையிலும் செனட் உறுப்பினராக இருந்தார். ராயல் ஆசியாடிக் சொசைட்டியிலும், சென்னை ஒய்.எம்.சி.ஏ.விலும் உறுப்பினராகப் பணிபுரிந்தார். சென்னை மற்றும் விஜயநகரில் கெளரவ மாஜிஸ்திரேட் ஆகவும் பணியாற்றினார். பெண்கள் கல்விக்கான மத்திய ஆலோசனைக் கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.

மகள் பத்மினி க்வீன் மேரீஸ் கல்லூரியில் பயின்றார். மகன் பில் சத்தியநாதன் இங்கிலாந்தில் ICS பயிற்சியை முடித்து விட்டுத் திரும்பியிருந்தார். அவர் அரசாங்கத்தால் தஞ்சையின் உதவி கலெக்டர் ஆக நியமிக்கப்பட்டார். அவருடன் சென்று வசித்தார் கமலா. பின் திருநெல்வேலிக்கு மகனுக்குப் பணி மாறுதல் பெற்றபோது அங்கும் சென்று வசித்தார். அப்போதுதான், ஆகஸ்ட் 1927 -ல், மீண்டும் ‘தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ இதழை ஆரம்பித்தார். தனது மகள் பத்மினியை அவ்விதழின் உதவி ஆசிரியராக நியமித்தார். திருநெல்வேலியில் ஒரு குழந்தைகள் நல மற்றும் மகப்பேறு மையம் அமையக் காரணமானார்.  

கண்ணனூருக்கு மகனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததால் அங்கு சென்றும் சில காலம் வசித்தார். தன் மகன் எந்தப் பொறுப்பில் எந்த ஊரில் வசித்தாலும் அந்தந்தப் பகுதி சுகாதார அதிகாரிகளையும், துப்புரவு ஆய்வாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் குடிசைப் பகுதிகள் மேம்பாட்டுக்கு உழைப்பது கமலாவின் வழக்கமாக இருந்தது.  ஏழை மக்கள் கல்வியறிவு பெறவும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறவும் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.  
 
சென்னையில் மகனுக்கு டைரக்டர் ஆஃப் லாண்ட் ரெகார்ட்ஸ் ஆகப் பணி மாறுதல் கிடைத்ததால் சென்னைக்கு வந்தார். அக்காலக்கட்டத்தில் அவர் பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அவர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைப்புகள் பலவற்றை ஏற்படுத்தினார். வங்கிக் கடன் கிடைக்க உதவினார். தொழில் புரிய வழிகாட்டினார். அவர்கள் வாழ்க்கை உயர்வுக்கு வழிவகுத்தார். கமலா சத்தியநாதனின் முயற்சியால் அனந்தபூரில் பெண்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் சென்னையில் ஒன்பது கூட்டுறவுச் சங்கங்கள் உருவாயின.  

== ஆவணம் ==
== ஆவணம் ==
The Indian Ladies' Magazine இதழின் சில இதழ்கள் சென்னை தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கிருபா பாய் சத்தியநாதன், கமலா சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன், W.T. சத்தியநாதன், [[அன்னா சத்தியநாதன்]] மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளைத் தொகுத்து, Eunice De Souza, ‘The Satthianadhan Family Album’ என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி மூலம் வெளியிட்டுள்ளார். அந்நூலில், சாமுவேல் சத்தியநாதன், கமலா சத்தியநாதன் இணைந்து எழுதிய, கிறிஸ்தவர்களின் அக்கால வாழ்க்கைச் சூழல்களைக் கூறும் ‘Stories of Indian Christian Life (1899) நூலில் இருந்தும் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  
[[File:Sathyanandhan family album.jpg|thumb|Family Album]]
 
கமலா சத்தியநாதனின் வாழ்க்கையை அவரது மகள் பத்மினி சென்குப்தா ‘ The Portrait of an Indain Woman என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி எஸ். ராதாகிருஷ்ணன். கமலா சத்தியநாதனை, அவரது பணிகளை நினைவு கூந்துள்ளார், கமலா சத்தியநாதன் தனது கணவர் சாமுவேல் சத்தியநாதனின் நினைவாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் Ethics-ல் முதலாவதாக வரும் சிறந்த மாணவருக்கு, தங்கப் பதக்கத்துடன் கூடிய நினைவுப் பரிசு ஒன்றை நிறுவியிருந்தார். அந்தப் பதக்கத்தை முதன் முதலில் பெற்றவர் ராதாகிருஷ்ணன் தான். அதை அவர் அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  

== மறைவு ==
== மறைவு ==
இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26, 1950-ல், குடியரசு தின நிகழ்வுகளை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தவாறே கமலா சத்தியநாதன் காலமானார்.

== நூல்கள் ==
== நூல்கள் ==
* கட்டுரையாளராகவும், இதழாசிரியராகவும் இருந்த கமலா சத்தியநாதன் எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். ’stories of Indian christian life’ என்ற நூலைக் கணவர் சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து எழுதி, 1898-ல் வெளியிட்டிருக்கிறார். இந்தியன் சோஷியல் ரிஃபார்ம் இதழிலும் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.  

* தனது இங்கிலாந்து வாழ்க்கை அனுபவங்களை, 1925-ல், ஹிந்து இதழில், மை இப்ம்ரஷன்ஸ் ஆஃப் இங்லாண்ட்’ (My Impressions of England) என்ற தலைப்பில் தொடராக எழுதியிருக்கிறார்  

Line 70: Line 69:
* முதல் பெண்கள், நிவேதிதா லூயிஸ், மைத்ரி புக்ஸ்

== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{Being created}}
<references />{{Being created}}

Revision as of 23:35, 8 July 2022

கமலா சத்தியநாதன்

கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: 1879-1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி. ஆங்கிலத்தில் வெளியான தென்னிந்தியாவின் முதல் பெண்கள் இதழான ‘The Indian Ladies Magazine’-ன் ஆசிரியர். கல்வியாளர் சாமுவேல் சத்தியநாதனின் மனைவி.

பிறப்பு, கல்வி

ஹன்னா ரத்தினம் கிருஷ்ணம்மா என்னும் இயற்பெயர் கொண்ட கமலா சத்தியநாதன், ஜூலை 2, 1879-ல், ராஜமுந்திரியில், ஒருகன்டி சிவராமன் கிருஷ்ணம்மா - நானி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பிராமணர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய குடும்பம் அவர்களுடையது. உயர்கல்வியை உள்ளூரில் முடித்த கமலா, தனது சகோதரி சுந்தரத்துடன் கல்லூரிப் படிப்பை மசூலிப்பட்டினத்தில் உள்ள நோபிள் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு இண்டர்மீடியட் படிப்பில் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

தனி வாழ்க்கை

தன் மகள் கமலா மேற்கல்வி கற்க வேண்டும் என்று விரும்பினார் சிவராம கிருஷ்ணம்மா. சென்னை சர்வகலாசாலையில் (சென்னைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய பெயர்) கமலாவைச் சேர்த்தார். இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் ரெவரண்ட் W.T. சத்தியநாதன் அறிமுகமானார். அவரது மகனான சாமுவேல் சத்தியநாதனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைக்க விரும்பினார் சிவராமன். சாமுவேல் சத்தியநாதன் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றவர். சென்னை பிரசிடெர்ன்ஸி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏற்கனவே மணமாகி மனைவி கிருபா பாயை இழந்தவர் சாமுவேல் என்பதை சிவராம கிருஷ்ணம்மா அறிந்திருந்தார். கமலாவை விட 19 வயது அதிக வயதுடையவர் என்பதும் தெரிந்திருந்தார். ஆனாலும், சென்னை ராஜதானியின் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்த சாமுவேலுக்கே தனது மகள் கமலாவை அவர் மணம் முடிக்க எண்ணினார். கமலா - சாமுவேல் சத்தியநாதன் திருமணம் 1898-ல் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் அவர்கள் குடியேறினர்.

மனைவி கமலாவின் ஆர்வங்களை அறிந்த சாமுவேல் சத்தியநாதன், கமலா முறையாக மேற் கல்வி பயில ஊக்குவித்தார். இளங்கலைப் பட்டத்திற்குப் பின் தான் பயின்ற அதே சென்னைப் பல்கலையில் முதுகலை ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார் கமலா. கணவரின் ஊக்குவிப்பால் செஸ், டென்னிஸ், பேட்மிட்டன் போன்றவை விளையாடக் கற்றுக் கொண்டார்.

சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரி

கமலா சத்தியநாதன் எம்.ஏ.பட்டம் பெற்ற குறிப்பு

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த கமலா, ஆங்கிலத்தை மிக விரும்பிக் கற்றார். சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். அப்போதைய சென்னை ராஜதானியின் ஆங்கில இலக்கியத்தில் முதல் முதுகலைப்பட்டதாரியும் கமலா சத்தியநாதன் தான். இதனை அக்காலத்தில் வெளிவந்த இதழ்கள் பாராட்டி எழுதின.

சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழ் - தி இண்டியன் லேடீஸ் மேகஸின்

பல்வேறு மொழிகள் அறிந்திருந்த கமலா சத்தியநாதன், பெண்களின் உயர்வு பற்றிச் சிந்தித்தார். பிரிட்டிஷாரால் வெளியிடப்பட்ட ஆங்கில இதழ்களுக்கு அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்த அவர், நாமே ஏன் பெண்களுக்கான ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்தக் கூடாது என்று நினைத்தார். கணவர் சாமுவேல் சத்தியநாதனும் அவரை ஊக்குவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழான ‘தி இண்டியன் லேடீஸ் மேகஸின்’ (The Indian Ladies' Magazine) 1901-ல் உருவானது.

தி இந்தியன் லேடீஸ் மேகஸினின் சிறப்புகள்

தி இந்தியன் லேடீஸ் மேகஸின் - 1905-ம் ஆண்டு இதழ்

பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை ’தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ தான். இவ்விதழ் மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவை பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வந்தது. By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும், ஹெச். கிருஷ்ணம்மா, An Indian Mother என்பது போன்ற புனை பெயர்களிலும் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளை ‘கமலா சத்தியநாதன்’ எழுதினார்.

சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட், மேரி கரோலி, பண்டித ரமாபாய், லேடி ஹர்னாம் சிங், கொர்னிலியா சொராப்ஜி உள்ளிட்ட பலர் அவ்விதழில்  எழுதினர். பெண்கள் பலர் நன்கொடை செலுத்தி இவ்விதழ் வளர்ச்சிக்கு உதவினர். இந்தியா முழுமைக்குமான பெண்கள் இதழாக இவ்விதழ் இருந்தது. ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி இவ்விதழ் வெளியானது. 15-ம் தேதிக்குள் சந்தாதாரர்களைச் சென்றடைந்தது.

’தி லண்டன் டைம்ஸ்’, ‘தி லண்டன் டெய்லி டெலிக்ராப்’ போன்ற இதழ்கள் தி இந்தியன் லேடீஸ் மேகஸின் வரவைப் பாராட்டி எழுதின. எட்வின் அர்னால்ட், ஹெலன் கெல்லர் உள்ளிட்டோரும் இவ்விதழைப் பாராட்டி வரவேற்றனர்.

1901-1918 வரை இவ்விதழ் வெளியானது. சில ஆண்டுகாலத் தடைக்குப் பின் மீண்டும் 1927-ல் தொடங்கப்பட்டு 1938 வரை இவ்விதழ் வெளிவந்தது.

கமலா - சாமுவேல் சத்தியநாதன்

குடும்பம்

கமலா - சாமுவேல் சத்தியநாதன் இணையருக்கு இரண்டு குழந்தைகள். முதல் மகன் பில் சத்தியநாதன் 1900-த்தில் பிறந்தார். இரண்டாவது மகளான பத்மினி 1905-ல் பிறந்தார்.

சாமுவேலின் பிரிவு

இந்தியத் தத்துவங்கள் குறித்து ஆழக் கற்றவர் சாமுவேல் சத்தியநாதன். அது பற்றி உரையாற்றுவதற்காக அவர் மார்ச், 1906-ல் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு சில பல்கலைகளில் உரையாற்றினார். ஜப்பானில் இருந்தும் உரையாற்ற அவருக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். ஜப்பானுக்குச் சென்று இறங்கியதுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சையில் இருந்தும் பலனளிக்காமல் ஏப்ரல் 4, 1906 அன்று, ஜப்பானில் உள்ள யோகோஹமாவில் சாமுவேல் சத்தியநாதன் காலமானார்.

ஆறு வயது மகனுடனும், கைக்குழந்தையான மகளுடனும் ஜப்பானுக்குச் சென்று கணவருக்கு இறுதி மரியாதைகளைச் செய்துவிட்டு இந்தியா திரும்பினார் கமலா சத்தியநாதன்.

பீதாபுரத்தில் கமலா சத்தியநாதன்

கணவரைப் பிரிந்த கமலாவுக்கு உறுதுணையாக அவரது தாய் நானி இருந்தார். அதே 1906-ம் ஆண்டில் சாமுவேல்- கமலா இணையர் பணம் சேர்த்து வைத்திருந்த அர்பத்நாட் வங்கி திவாலானது. சேர்த்து வைத்திருந்த அனைத்துப் பணத்தையும் இழந்தார் கமலா சத்தியநாதன். மிகவும் துயரமான அந்தக் காலகட்டங்களை மிகுந்த மன உறுதியுடன் எதிர்கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு பீதாபுரத்து ராணிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணி வாய்ப்பு வந்தது. மகன் பில், மகள் பத்மினி, தாய் நானி மற்றும் சில உதவியாளர்களுடன் பீதாபுரத்துக்குச் சென்றார் கமலா. அங்கு சுமார் ஆறு ஆண்டுகள் தங்கி ராணிக்கு ஆங்கிலமும் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்போதும் தொய்வில்லாமல் ‘தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ இதழை நடத்தினார் கமலா.

ஆறாண்டுகளுப் பின் சில சூழல்களால் கமலா சத்தியநாதன் பீதாபுரத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து வால்டருக்கும், ராஜமுந்திரிக்கும் சென்று வசித்தார். பின்னர் சென்னை லேடீஸ் க்ளப்பில் மணமான பெண்களுக்கு ஆங்கிலம், வரலாறு, புவியியல் கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு வந்தார். சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் நாடகங்கள் சிலவற்றை உருவாக்கி கதை, வசனம் எழுதி அரங்கேற்றினார். அதற்கு அக்கால இதழ்களிலிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. அக்காலகட்டத்திலும் ‘தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ தொய்வில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தது.

1919-ல் கமலா, தனது குழந்தைகளின் மேற் கல்விக்காக, தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு அதில் கிடைத்த தொகை மூலம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இங்கிலாந்து வாழ்க்கை

வாழ்க்கையின் அதுநாள் வரையிலான கவலைகளை மறக்கக் கூடிய சூழல் கமலாவுக்கு இங்கிலாந்தில் அமைந்தது. புதிய பல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. தனது ஓய்வு நேரத்தில் இந்தியன் ரீ ஃபார்மர் போன்ற இந்திய இதழ்கள் சிலவற்றிற்கு இங்கிலாந்திலிருந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார். மகன் பில், ஐ.சி.எஸ். தேர்ச்சி பெறும் வரை இங்கிலாந்தில் இருந்த கமலா சத்தியநாதன் அதன் பின் தமிழ்நாடு திரும்பினார்.

சமூகப் பணிகள்

Kamala Books

சென்னை திரும்பிய கமலா சத்தியநாதன், தனது இங்கிலாந்து அனுபவங்களை, தி ஹிந்து இதழில், 1925-ம் ஆண்டு முதல், ’மை இப்ம்ரஷன்ஸ் ஆஃப் இங்லாண்ட்’ (My Impressions of England) என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். இங்கிலாந்தில் வசித்த தனது தோழி திருமதி ஈ.எஸ்.அப்பாசுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார் கமலா சத்தியநாதன். அதற்கு ‘வித்யோதயா’ [1] என்று பெயர் சூட்டியதுடன் பள்ளியின் முதல் முதலவர் ஆகவும் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் மூன்றாண்டுகள் சென்னைப்பல்கலையிலும், ஆந்திரப் பல்கலையிலும் செனட் உறுப்பினராக இருந்தார். ராயல் ஆசியாடிக் சொசைட்டியிலும், சென்னை ஒய்.எம்.சி.ஏ.விலும் உறுப்பினராகப் பணிபுரிந்தார். சென்னை மற்றும் விஜயநகரில் கெளரவ மாஜிஸ்திரேட் ஆகவும் பணியாற்றினார். பெண்கள் கல்விக்கான மத்திய ஆலோசனைக் கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.

மகள் பத்மினி க்வீன் மேரீஸ் கல்லூரியில் பயின்றார். மகன் பில் சத்தியநாதன் இங்கிலாந்தில் ICS பயிற்சியை முடித்து விட்டுத் திரும்பியிருந்தார். அவர் அரசாங்கத்தால் தஞ்சையின் உதவி கலெக்டர் ஆக நியமிக்கப்பட்டார். அவருடன் சென்று வசித்தார் கமலா. பின் திருநெல்வேலிக்கு மகனுக்குப் பணி மாறுதல் பெற்றபோது அங்கும் சென்று வசித்தார். அப்போதுதான், ஆகஸ்ட் 1927 -ல், மீண்டும் ‘தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ இதழை ஆரம்பித்தார். தனது மகள் பத்மினியை அவ்விதழின் உதவி ஆசிரியராக நியமித்தார். திருநெல்வேலியில் ஒரு குழந்தைகள் நல மற்றும் மகப்பேறு மையம் அமையக் காரணமானார்.

கண்ணனூருக்கு மகனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததால் அங்கு சென்றும் சில காலம் வசித்தார். தன் மகன் எந்தப் பொறுப்பில் எந்த ஊரில் வசித்தாலும் அந்தந்தப் பகுதி சுகாதார அதிகாரிகளையும், துப்புரவு ஆய்வாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் குடிசைப் பகுதிகள் மேம்பாட்டுக்கு உழைப்பது கமலாவின் வழக்கமாக இருந்தது.  ஏழை மக்கள் கல்வியறிவு பெறவும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறவும் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

சென்னையில் மகனுக்கு டைரக்டர் ஆஃப் லாண்ட் ரெகார்ட்ஸ் ஆகப் பணி மாறுதல் கிடைத்ததால் சென்னைக்கு வந்தார். அக்காலக்கட்டத்தில் அவர் பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அவர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைப்புகள் பலவற்றை ஏற்படுத்தினார். வங்கிக் கடன் கிடைக்க உதவினார். தொழில் புரிய வழிகாட்டினார். அவர்கள் வாழ்க்கை உயர்வுக்கு வழிவகுத்தார். கமலா சத்தியநாதனின் முயற்சியால் அனந்தபூரில் பெண்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் சென்னையில் ஒன்பது கூட்டுறவுச் சங்கங்கள் உருவாயின.

ஆவணம்

Family Album

The Indian Ladies' Magazine இதழின் சில இதழ்கள் சென்னை தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கிருபா பாய் சத்தியநாதன், கமலா சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன், W.T. சத்தியநாதன், அன்னா சத்தியநாதன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளைத் தொகுத்து, Eunice De Souza, ‘The Satthianadhan Family Album’ என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி மூலம் வெளியிட்டுள்ளார். அந்நூலில், சாமுவேல் சத்தியநாதன், கமலா சத்தியநாதன் இணைந்து எழுதிய, கிறிஸ்தவர்களின் அக்கால வாழ்க்கைச் சூழல்களைக் கூறும் ‘Stories of Indian Christian Life (1899) நூலில் இருந்தும் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கமலா சத்தியநாதனின் வாழ்க்கையை அவரது மகள் பத்மினி சென்குப்தா ‘ The Portrait of an Indain Woman என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி எஸ். ராதாகிருஷ்ணன். கமலா சத்தியநாதனை, அவரது பணிகளை நினைவு கூந்துள்ளார், கமலா சத்தியநாதன் தனது கணவர் சாமுவேல் சத்தியநாதனின் நினைவாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் Ethics-ல் முதலாவதாக வரும் சிறந்த மாணவருக்கு, தங்கப் பதக்கத்துடன் கூடிய நினைவுப் பரிசு ஒன்றை நிறுவியிருந்தார். அந்தப் பதக்கத்தை முதன் முதலில் பெற்றவர் ராதாகிருஷ்ணன் தான். அதை அவர் அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மறைவு

இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26, 1950-ல், குடியரசு தின நிகழ்வுகளை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தவாறே கமலா சத்தியநாதன் காலமானார்.

நூல்கள்

  • கட்டுரையாளராகவும், இதழாசிரியராகவும் இருந்த கமலா சத்தியநாதன் எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். ’stories of Indian christian life’ என்ற நூலைக் கணவர் சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து எழுதி, 1898-ல் வெளியிட்டிருக்கிறார். இந்தியன் சோஷியல் ரிஃபார்ம் இதழிலும் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.
  • தனது இங்கிலாந்து வாழ்க்கை அனுபவங்களை, 1925-ல், ஹிந்து இதழில், மை இப்ம்ரஷன்ஸ் ஆஃப் இங்லாண்ட்’ (My Impressions of England) என்ற தலைப்பில் தொடராக எழுதியிருக்கிறார்
  • கமலா எழுதிய முதல் நாவல் பத்மா. தன்னுடைய இளவயது வாழ்க்கை அனுபவங்களையே கற்பனை கலந்து நாவலாக்கியிருக்கிறார்.
  • கமலா சத்தியநாதன் தன் இறுதிக்காலத்தில் எழுதிய நாவல்கள் டிடெக்டிவ் ஜானகி (Detective Janaki) மற்றும் சூர்யா ராவ்ஸ் ஆர்டியல் (Surya Rao's ordeal)
  • சில நாடகங்களையும் கமலா சத்தியநாதன் எழுதியிருக்கிறார்.
  • Tales of India and of Animals for Macmillan, Stories of Ancient India, Great Men and Women of India, The Son of Man போன்றவை அவரது பிற படைப்புகளாகும்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.