under review

நா. சின்னத்துரை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 29: Line 29:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf ”இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு” செல்லையா - மெற்றாஸ்மயில்]
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf ”இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு” செல்லையா - மெற்றாஸ்மயில்]
{{first review completed}}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:00, 1 July 2022

நா. சின்னத்துரை (நன்றி: செல்லையா - மெற்றாஸ்மயில்)

நா. சின்னத்துரை(அக்டோபர் 4, 1926) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். கதைவழிக் கூத்து, நாட்டுக் கூத்து, மரபுவழி இசை நாடகம் நடித்தார். நாட்டுக்கூத்துக்கள் பல பழக்கி அரங்கேற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னத்துரையின் தந்தை நாட்டுக்கூத்து மத்தள அண்ணாவியார். பல நாட்டுக்கூத்துக்களில் நடித்தவர். தந்தை வழியாக சின்னத்துரை கலை உணர்வைவளர்த்துக் கொண்டார். நாதஸ்வரம் கற்றார்.

கலை வாழ்க்கை

சின்னத்துரை இளமையிலிருந்தே சங்கீதத்திலே விருப்பம் கொண்டிருந்தார். வாத்தியக் குழுவினருடன் சேர்ந்து பல இடங்களில் நாதஸ்வர இசை வழங்கியுள்ளார். பல நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசித்துதுள்ளார். மரபுவழி இசைநாடகங்களுக்கும், கதைவழிக் கூத்துக்களுக்கும் ஆர்மோனியம் வாசித்துள்ளார். பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினர் நடத்திய நாடகப்போட்டியிலே ’பவளக்கொடி’ நாடகத்தினை அரங்கேற்றினார். பல்கலைக்கழகத்தில் நாட்டுக்கூத்துக்கள் பழக்கி அரங்கேற்றியுள்ளார்.

நடித்த நாடகங்கள்

கதைவழிக் கூத்து
  • கோவலன் நாடகம் - கோவலன்
  • புலேந்திரன் களவு - புலேந்திரன்
  • அல்லி அருச்சுனன் - கிருஷ்ணன்
  • பவளக்கொடி - கிருஷ்ணன்
மரபுவழி இசை நாடகம்
  • அரிச்சந்திரா - சத்தியகீர்த்தி
  • ஸ்ரீவள்ளி - நாரதர்
  • பொன்னிரவு(சிவராத்திரி) - நாரதர்
  • சத்தியவான் சாவித்திரி - நாரதர்
  • மார்க்கண்டேயர் - நாரதர்
நாட்டுக் கூத்து
  • எம்பரதோர் - எம்பரதோர்
  • ஏகலைவன் - ஏகலைவன்
  • குசலவன் - இலட்சுமணன்
  • அனுபுத்திரனில் - குமாரன்
  • தாடகை வதம் - இலட்சுமணன்

பழக்கிய நாடகங்கள்

  • பவளக்கொடி - கதைவழிக் கூத்து
  • சங்கிலியன் - நாட்டுக் கூத்து
  • கோவலன் - நாட்டுக்கூத்து

உசாத்துணை


✅Finalised Page