பதேர் பாஞ்சாலி: Difference between revisions

From Tamil Wiki
Line 7: Line 7:
விபூதிபூஷண் பந்தோபாத்யாய ( Bibhutibhushan Bandyopadhyay''')''' மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர். (பார்க்க [[விபூதிபூஷண் பந்தோபாத்யாய]])  
விபூதிபூஷண் பந்தோபாத்யாய ( Bibhutibhushan Bandyopadhyay''')''' மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர். (பார்க்க [[விபூதிபூஷண் பந்தோபாத்யாய]])  
== எழுத்து வெளியீடு ==
== எழுத்து வெளியீடு ==
[[பதேர் பாஞ்சாலி]] 1927ல் பிரபாஸ் இலக்கிய இதழில் தொடராக வெளிவந்து 1928ல் நூல்வடிவம் பெற்றது.  இந்நாவலின் தொடர்ச்சியாக விபூதிபூஷன் அபராஜிதோ (தோல்வியற்றவன்) என்னும் நாவலை ல் எழுதினார். அதை முடிக்கும் முன்பே காலமானார். அவர் மகன் தாராநாதாஸ் பந்தோபாத்யாய அதை முழுமைசெய்து 1952ல் வெளியிட்டார்.
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
பதேர் பாஞ்சாலி அப்பு என்னும் சிறுவனின் இளமைப்பருவம் பற்றியது. நிச்சிந்தாபுரம் என்னும் சிற்றூரில் அப்பு அவன் அக்கா துர்க்காவுடனும் பெற்றோருடனும் வாழ்கிறான். அவன் அப்பா புராணக் கதைசொல்லி. வறுமையான வாழ்க்கை. ஆனால் அப்புவும் துர்க்காவும் கிராமம் முழுக்க சுற்றியலைகிறார்கள். கையில் சிக்கியவற்றை எல்லாம் உண்கிறார்கள்.அப்புவின் அம்மா சர்வஜயாவின் வயோதிக நாத்தனாராகிய இந்திரா உயிர்த்துடிப்பும் வாழும் இச்சையும் கொண்ட முதியவள். அவளுடைய சாவு அவர்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தை காட்டுகிறது. துர்க்கா ஒரு காய்ச்சலில் இறந்து போகிறாள். அப்புவும் சர்வஜயாவும் அப்பா ஹரிஹர சர்மாவும் காசிக்குச் செல்கிறார்கள். அங்கே ஹரிஹர சர்மா கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார். வாழ்க்கை மீண்டு வரும் தருணத்தில் மறைகிறார். ஒரு ஜமீன்தார் இல்லத்தில் வேலைக்காரர்களாக இருக்கிறார்கள் சர்வஜயாவும் அப்புவும். அப்பு தன்னுள் உள்ள எழுத்தாளனை அங்கே கண்டுகொள்கிறான். லீலா மட்டுமே அங்கே அவனை அவ்வண்ணம் புரிந்துகொள்கிறாள். அப்பு மீண்டும் நிச்சிந்தாபுரம் திரும்ப முடிவெடுக்கிறான்.
== திரைவடிவங்கள் ==
== திரைவடிவங்கள் ==
சத்யஜித் ரே மூன்று தொடர் திரைப்படங்களாக பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ ஆகியவற்றை எடுத்தார். பதேர் பாஞ்சாலி அபுர் சன்சார், அபராஜிதோ. அவை உலகப்புகழ்பெற்ற திரைப்படங்கள்.
== இலக்கியப் பதிவுகள் ==
== இலக்கியப் பதிவுகள் ==
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.jeyamohan.in/192/ விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’]
[https://www.jeyamohan.in/192/ விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’]

Revision as of 12:09, 1 July 2022

பாதேர் பாஞ்சாலி
விபூதிபூஷன் பந்தோபாத்யாய

பதேர் பாஞ்சாலி ( ) விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். தமிழில் ஆர்.ஷண்முகசுந்தரம் மொழியாக்கத்தில் வெளியாகியது. விபூதி பூஷ்ண் பந்த்யோபாத்யாயவின் தன் வரலாறு என்று கொள்ளத்தக்க இந்நாவல் சத்யஜித் ரே இயக்கத்தில் புகழ்பெற்ற இரு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.

நாவலின் பெயர்

மூலத்தில் பொதெர் பொஞ்சொலி. பாதையின் பாடல்கள் என்று பொருள். தமிழ் மொழியாக்கத்தில் தொடக்கம் முதலே பாஞ்சாலி என்னும் பெயர்ச்சாயல் வந்துவிட்டமையால் பிழையாக புரிந்துகொள்ளப் படுகிறது. பாதேர் பாஞ்சொலி என்னும் ஒலியாக்கமே தமிழில் சரியாக இருந்திருக்கும்.

ஆசிரியர்

விபூதிபூஷண் பந்தோபாத்யாய ( Bibhutibhushan Bandyopadhyay) மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர். (பார்க்க விபூதிபூஷண் பந்தோபாத்யாய)

எழுத்து வெளியீடு

பதேர் பாஞ்சாலி 1927ல் பிரபாஸ் இலக்கிய இதழில் தொடராக வெளிவந்து 1928ல் நூல்வடிவம் பெற்றது. இந்நாவலின் தொடர்ச்சியாக விபூதிபூஷன் அபராஜிதோ (தோல்வியற்றவன்) என்னும் நாவலை ல் எழுதினார். அதை முடிக்கும் முன்பே காலமானார். அவர் மகன் தாராநாதாஸ் பந்தோபாத்யாய அதை முழுமைசெய்து 1952ல் வெளியிட்டார்.

கதைச்சுருக்கம்

பதேர் பாஞ்சாலி அப்பு என்னும் சிறுவனின் இளமைப்பருவம் பற்றியது. நிச்சிந்தாபுரம் என்னும் சிற்றூரில் அப்பு அவன் அக்கா துர்க்காவுடனும் பெற்றோருடனும் வாழ்கிறான். அவன் அப்பா புராணக் கதைசொல்லி. வறுமையான வாழ்க்கை. ஆனால் அப்புவும் துர்க்காவும் கிராமம் முழுக்க சுற்றியலைகிறார்கள். கையில் சிக்கியவற்றை எல்லாம் உண்கிறார்கள்.அப்புவின் அம்மா சர்வஜயாவின் வயோதிக நாத்தனாராகிய இந்திரா உயிர்த்துடிப்பும் வாழும் இச்சையும் கொண்ட முதியவள். அவளுடைய சாவு அவர்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தை காட்டுகிறது. துர்க்கா ஒரு காய்ச்சலில் இறந்து போகிறாள். அப்புவும் சர்வஜயாவும் அப்பா ஹரிஹர சர்மாவும் காசிக்குச் செல்கிறார்கள். அங்கே ஹரிஹர சர்மா கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார். வாழ்க்கை மீண்டு வரும் தருணத்தில் மறைகிறார். ஒரு ஜமீன்தார் இல்லத்தில் வேலைக்காரர்களாக இருக்கிறார்கள் சர்வஜயாவும் அப்புவும். அப்பு தன்னுள் உள்ள எழுத்தாளனை அங்கே கண்டுகொள்கிறான். லீலா மட்டுமே அங்கே அவனை அவ்வண்ணம் புரிந்துகொள்கிறாள். அப்பு மீண்டும் நிச்சிந்தாபுரம் திரும்ப முடிவெடுக்கிறான்.

திரைவடிவங்கள்

சத்யஜித் ரே மூன்று தொடர் திரைப்படங்களாக பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ ஆகியவற்றை எடுத்தார். பதேர் பாஞ்சாலி அபுர் சன்சார், அபராஜிதோ. அவை உலகப்புகழ்பெற்ற திரைப்படங்கள்.

இலக்கியப் பதிவுகள்

இலக்கிய இடம்

உசாத்துணை

விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’