under review

கே.எஸ். மணியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Madhusaml moved page கே.எஸ் மணியம் to கே.எஸ். மணியம் without leaving a redirect: Missing dot added for initial)
(No difference)

Revision as of 06:12, 27 June 2022

கே. எஸ். மணியம்

கே.எஸ்.மணியம் மலேசிய எழுத்தாளர், கல்வியாளர். இவர் இயற்பெயர் கிருஷ்ணன் சுப்ரமணியம். இவர் சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் போன்ற படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் படைப்புகள் தென்கிழக்காசியாவில் கவனம் பெற்றவை.

தனி வாழ்க்கை

கே.ஸ்.மணியம் 1942-ஆம் ஆண்டு மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள பீடோங் என்ற சிறுநகரில் பிறந்தார். இவரின் பெற்றோர் மருத்துவமனையில் சலவைத் தொழில், தோட்டத்தில் பால் மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். பீடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஒரு வருடம் காலம் மட்டுமே பயின்றார். பின்னர் சுங்கை பட்டாணி பட்டணத்தில் அமைந்திருக்கும் இப்ராஹிம் ஆங்கில பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். 1960-இல் பள்ளிப் படிப்பை முடித்த அவர் சில மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், மருத்துவ படிப்பிற்காக இந்தியாவுக்கும், 1962 முதல் 1964 வரை வோல்வெர்ஹாம்டனில் உள்ள மலாயா ஆசிரியர் கல்லூரியில் பயில இங்கிலாந்துக்கும் சென்றார். மலேசியாவுக்குத் திரும்பிய கே.எஸ். மணியம் கெடாவில் உள்ள பல கிராமப்புற பள்ளிகளில் பாடம் போதித்தார். அதற்குப் பின், அவர் 1970-ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ஆங்கில துறையில் செய்தார். தொடர்ந்து, தனது முதுகலைப் பட்டக் கல்வியை மலாயாப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். 1979-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைகழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரிய தொடங்கினார். 1997-ஆம் ஆண்டு ஆங்கிலத் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் தனது கடைசி காலம்வரை மனைவி, மகன் மற்றும் மகளுடன் மலேசியா, சுபாங் ஜெயாவில் வசித்து வந்தார்.

மரணம்

பிப்ரவரி 19, 2020 அன்று புற்று நோயின் காரணமாக உயிரிழந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கே. எஸ். மணியம்

இளம் வயதில் எழுதத்தொடங்கிய கே.எஸ்.மணியம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத்துறையிலும் இலக்கிய வாசிப்பிலும் தீவிர ஈடுபாடுடன் இயங்கியவர். இரத்தனமுனி (Ratnamuni) அவரது முதல் சிறுகதையாகும். அவரது முதல் நாவலான தி ரிட்டர்ன் (The Return) 1981 ல் வெளியிடப்பட்டது. இரண்டாவது, இன் எ ஃபார் கன்ட்ரி (In A Far Country), 1993 இல் வெளியிடப்பட்டது. இவருடைய கதைகள் உலகளவில் ஏராளமான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மலேசிய நாட்டின் ஆங்கில இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம். அவருடைய சில படைப்புகள் பள்ளி மாணவர்களுக்குப் பாடப்பகுதியாக போதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அவருடைய படைப்புகள் சார்ந்தும், கதைகளில் அவர் கையாண்டுள்ள உத்திகளைப் பற்றியும் பல்கலைகழகங்களில் நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இந்தியர்களின் சிக்கலைச் சார்ந்தே இருக்கும். சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின், மலாயா நாடு மலேசியாவாக மாற்றம் அடைந்த காலம் என இம்மூன்று காலக்கட்டத்தில் இந்தியர்களின் நிலை, மனப்பாங்கு, எதிர்நோக்கிய சிக்கல், அவர்கள் புதிய கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ எடுத்த முயற்சிகள் மற்றும் பல முக்கிய விடயங்களைத் தனது நாவல்களிலும் சிறுகதையிலும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளை சீனர்கள் மேடை நாடகங்களாகவும் இயற்றியுள்ளர். இவரது சிறுகதை தமிழில் 'கே. எஸ். மணியம் சிறுகதைகள்' எனும் தலைப்பில் வல்லினம் வெளியீடாக வந்துள்ளது. விஜயலட்சுமி அவர் சிறுகதைகளை மொழிப்பெயர்த்தார்.

இலக்கிய இடம்

கே. எஸ். மணியம் படைப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும் அவை மலாயா தமிழர்களின் சிக்கல்களை புனைக்கதையின் அழகியலோடு முன்வைத்தது. மலேசிய இந்தியர்களின் உளவியல், வாழ்வியலை பிற இனத்தவர்களிடம் பரவலாக எடுத்துச் சென்றதில் கே.எஸ்.மணியத்தின் படைப்புகள் பெரும் பங்காற்றின.

விருதுகள் / பரிசுகள்

  • நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் - மெக்டொனால்ட் சிறுகதை போட்டியில் பரிசு (1987)
  • தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -ஷெல் சிறுகதை போட்டியில் பரிசு (1990)
  • இலக்கியத்திற்கான ராஜா ராவ் விருது (புது டெல்லி, 2000)

நூல்கள்

நாவல்கள்
  • தி ரிட்டர்ன் (லண்டன்: ஸ்கூப், 1981, 1993) (The Return - London: Skoob)
  • இன் எ ஃபார் கன்ட்ரி (1993) (In A Far Country )
  • பிட்வீன் லைவ்ஸ் (2003) (Between Lives )
நாடகங்கள்

தி கார்டு (1983) (The Cord)

  • தி சாண்ட்பிட்: வுமன்சிஸ் (1990) (The Sandpit: Womensis)
சிறுகதை தொகுப்புகள்
  • தி ஈகிள்ஸ் (1976) (The Eagles)
  • ரிமொவல் இன் பாசிர் பஞ்சாங் (1981) (Removal in Pasir Panjang)
  • தி பெலண்டுக் (1981) (The Pelanduk)
  • தி தேற்ட் சாயில்ட் (1981) (The Third Child)
  • தி ட்ரீம் ஆஃப் வசந்தா (1981) (The Dream of Vasantha)
  • திட்டம்: கிராஃப்ட் மேன் (1983) (Project: Graft Man)
  • வி மேக் இட் டு தி கேபிடல் (1984) (We Make It To The Capital)
  • தி அபார்ட்டிங் (1986) (The Aborting)
  • என்கவுண்டர்ஸ் (1989) (Encounters)
  • பரபெலம்ஸ் (1989) (Parablames)
  • ப்ளாட் (1989) (Plot)
  • ஹாண்டிங் தி டைகர் (1990) (Haunting the Tiger)
  • சென்சியஸ் ஹொரைசன்ஸ்: தி ஸ்டோரிஸ் & தி ப்ளேஸ் (1994) (Sensuous Horizons: The Stories & The Plays)
  • இன் ஃபலைட் (எழுதப்பட்டது 1993, வெளியிடப்பட்டது 1995) (In Flight)
  • ஹர்ராய்விங்...என்ட் ஹதெர் ஸ்டோரிஸ் (1995) (Arriving ...and other stories)
  • ஃபேஸ்டு அவுட் (2004) (Faced Out)
  • கார்டியன் க்னொட் (Guardian Knot)
  • எ ஸ்ட்ரெஞ்சர் டு லவ் (2018) (A Stranger to Love)

உசாத்துணை

கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்

கே.எஸ்.மணியம் , மலேசிய இலக்கியத்தை வடிவமைத்த எழுத்தாளர்

கே. எஸ். மணியம்: அடையாளம் காணப்படாத ஆளுமை

கே.எஸ். மணியம் சிறுகதைகள் விமர்சனம் - இமையம்

நாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்!

An interview with K. S. Maniam : Bernard Wilson (1993) An interview with K. S. Maniam, World Literature Written in English, 33:2, 17-23, DOI: 10.1080/17449859308589203

A Special Feature on the Late KS Maniam: Tribute and Interview

The Path of the Imagination: A Conversation with KS Maniam



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.