சந்திரா சரவணமுத்து: Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 37: | Line 37: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf ”இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு” செல்லையா - மெற்றாஸ்மயில்] | * [https://noolaham.net/project/75/7475/7475.pdf ”இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு” செல்லையா - மெற்றாஸ்மயில்] | ||
{{ | {{first review completed}}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 11:44, 22 June 2022
சந்திரா சரவணமுத்து (ஆகஸ்ட் 12, 1939) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்களில் நடனம் ஆடினார். இந்தியாவிலும், இலங்கையிலும் நாடகங்களில் நடித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
கேரள மாநிலம் திரிசூரில் ஆகஸ்ட் 12, 1939 அன்று சந்திரா பிறந்தார். பொள்ளாச்சி மிஷன் பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் பயின்றார். சந்திராவின் தந்தை இசையில் ஆர்வம் கொண்டவர், புல்லாங்குழல் வாசிப்பவர். சந்திராவை சிறு வயது முதலே இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டியங்கள் பார்க்க தந்தை அழைத்துச் சென்றார். சந்திரா இயல்பாகவே சங்கீதம் பாடும் திறனுடையவர். பத்து வயது முதல் கோயமுத்தூரிலுள்ள 'பாய்ஸ் கம்பெனி'யில் (ஐயப்ப தமிழ் நாடக சபா) சேர்ந்து பரத நாட்டியம், நாடகம் பயின்றார். பாய்ஸ் கம்பெனி நடனம், நாடகம் ஆகியவற்றில் ஆர்வமிக்கவர்களைப் பழக்கி, பல ஊர்களுக்குச் சென்று அரங்கேற்றி வந்தது. 1949-ல் சின்னத்துரை சந்திராவையும், சகோதரியையும் இலங்கைக்கு நாடகங்களில் நடனத்திற்காக அழைத்து வந்தார். சந்திராவை சரவணமுத்து காதலித்து மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்.
கலை வாழ்க்கை
சந்திரா முதன் முதலில் சீதா கல்யாணம் நாடகத்தில் சிறு பாத்திரத்தில் நடித்தார். பல நாடகங்களில் நடிப்பதும் நடனமாடுவதும் தொடர்ந்தது. இரண்டு ஆண்டுகளில் பாய்ஸ் கம்பெனி மூடப்பட்டதால் சந்திராவும், சகோதரியும் 'மாடன் தியேட்டரில்' திரைப்படத்தில் நடிக்கச் சென்றனர். லஷ்மி விஜயம் படத்தில் குழுநடனம், சிறு வேடங்களில் நடித்தார்கள். பொள்ளாச்சி நகரிலுள்ள சிறு நாடகக் கம்பெனியின் நாடகங்களில் நடித்தனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் இரண்டாண்டுகள் நடனம் ஆடினர். சரவணமுத்துவை திருமணம் செய்து கொண்ட பின் முப்பத்தியைந்து ஆண்டுகள் இலங்கையில் இருவரும் சேர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்தனர். சந்திரா செல்லமுத்து நடித்த சமூக நாடகமான வீரமைந்தன் மனோகரா தியேட்டரில் அரங்கேறியபோது பாராட்டுக்களைப் பெற்றார்.
இணைந்து நடித்தவர்கள்
- சி.ரி. செல்வராசா
- வி.வி. வைரமுத்து
- நற்குணம்
- சின்னமணி
- செல்வம்
- ராமலட்சுமி
- கன்னியா
- பரமேஸ்வரி
- சகுந்தலா
- சாந்தா
- கனகா
பாராட்டுக்கள்
- வீரமைந்தன் நாடகத்திற்காக 'ரசிக ரஞ்சன சபா' மூலம் கலையரசு சொர்ணலிங்கம் நற்சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கிப் பாராட்டினார்.
நடித்த நாடகங்கள்
- நந்தனார் - வேதியன் மனைவி
- சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி
- வள்ளி திருமணம் - வள்ளி
- ஸ்ரீவள்ளி - வள்ளி
- பவளக்கொடி- அல்லி, பவளக்கொடி
- கண்ணகி - கண்ணகி, மாதவி
- சம்பூர்ண ராமாயணம் - சீதை
- நல்லதங்காள் - நல்லதங்காள்
- அசோக்குமார் - காஞ்சனா
- ஞானசெளந்தரி - ஞானசெளந்தரி
- அரிச்சந்திரா - சந்திரமதி
- பாமாவிஜயம் - ருக்மணி
- வீரமைந்தன்
- சங்கிலியன்
- அத்தைமகள்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories. }