under review

கூறை கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 16: Line 16:
*[https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/feb/06/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3350440.html அப்பத்தாள் பாவாத்தாள் கோயில் குடமுழுக்கு விழா]

*[https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]
*[https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்]
{{finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 15:50, 18 June 2022

கூறைக் கூட்டம்: கூறைக் குலம்.கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களான அறுபது கூட்டங்களில் ஒன்று. கூறை என்பது துணியைக் குறிக்கும். வெட்டி அளவிடப்பட்ட நிலமும் கூறையே. வேணாட்டில் கூறைநாடு என்னும் ஓர் ஊர் உண்டு. இவ்விரு வேர்களில் இருந்து இப்பெயர் வந்திருக்கலாம்.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

வரலாறு

கூறைக் கூட்டத்தினரின் காணி இடம் தலையநல்லூர். தெய்வம் பொன்காளியம்மன். தலைய நல்லூர் கொங்கு நாட்டு ஊர். ஈரோடு , நசியனூர் , பெருந்துறை , சேலம், திருச்செங்கோடு , நாமக்கல் , ராசிபுரம் , பகுதிகளிலும் கூறைக் கூட்டத்தினர் வாழ்கின்றனர் . சென்னிமலை முருகனுக்கு விளக்கிட்டு நானில் முதல் விளக்கு வைக்கும் உரிமை கொண்டவர்கள் கூறைக் கூட்டத்தினர் .

தலையநல்லூரில் பங்காளிச் சண்டை வந்ததனால் சிலர் நசியனூர் அருகில் ஓலைப்பாளையத்தில் பொன்காளியம்மன் கோவில் கட்டி வழிபட்டனர் . மதுரை நாயக்கன் மன்னன் கூறைப்பாளையத்தில்  குளத்து அமராவதிக் கவுண்டரை வரிவசூல் செய்ய வைத்தான் 28 ஊர்களை இவர் பொறுப்பில் விட்டான் என்று கூறப்படுகிறது. ஈரோடு, திருச்சி , அருகில் உள்ள கூறைக் கூட்டத்தினர் அப்பத்தாள் , பாவாத்தாள், தெய்வங்களை வழிபடுகின்றனர்

நூல்குறிப்புகள்

கூறைக் குல முத்தண்ணக் கவுண்டர் தீபாவளிக்கு எள் நெய்யும் புத்தாடையும் ஏழைகளுக்கும் வழங்கினார் என்று கந்தநாதசாமி சதகம் கூறுகிறது . 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாய்க்கன் காலத்தில் கூறைக் கூட்டத்து தண்டிகைக் காளியண்ணன் , கொடுங்கூர் - கொடுமுடி மகுடேசருக்கு நாள்படி , நந்தாவிளக்கு , வழிபடு பொருள் கொடுத்தான் என்று கொடுமுடிக் குறவஞ்சி கூறுகிறது.

ஊர்கள்

தலைய நல்லூர் , மின்னாம்பள்ளி , சோமூர், சோழன் மாதேவி , திருமால் நசியனூர் , வெள்ளியணை , மேச்சேரி , சௌதாபுரம், கொற்றனூர் பார்பதி, பிடாரியூர், மண்மலை , திண்டமங்கலம், நவணி,அரசிலாமணி , பொய்ப்புவியூர், காளம்பாடி, களங்காணி, ஆகிய ஊர்களை இவர்கள் காணியாகப் பெற்றுள்ளனர் .

உசாத்துணை

✅Finalised Page