under review

கே. நல்லதம்பி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்)
Line 74: Line 74:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்]]

Revision as of 12:14, 17 November 2024

நல்லதம்பி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நல்லதம்பி (பெயர் பட்டியல்)
கே.நல்லதம்பி
கே.நல்லதம்பி

கே.நல்லதம்பி (பிறப்பு:1949) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறார். மொழிபெயர்ப்பிற்கான கேந்திய சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளார்.

பிறப்பு,கல்வி

கே.நல்லதம்பி 1949-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் பிறந்தார். தன் சொந்த நகரத்திலேயே இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

தனியார் நிறுவனம் ஒன்றின் வியாபார பிரிவில் அகில இந்திய மேலாளராக முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிழற்பட கலையில் ஆர்வம் உள்ளவர். சர்வதேச மற்றும் தேசியக் கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பரிசுகளும் பெற்றிருக்கின்றன. தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழியாக்கங்கள் செய்து வருகிறார். சங்கக் கவிதைகள் சிலவற்றை கன்னட எழுத்தாளர் திருமதி. லலிதா சித்தபசவய்யாவுடன் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார். அவை ‘நிச்சம் பொசது’ (2016) என்ற தொகுப்பாக வந்துள்ளது.

சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு அத்தர் 2022-ம் ஆண்டு வெளிவந்தது. மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார். 2022-ம் ஆண்டிற்கான சாதித்ய அக்காதமியின் மொழியாக்கத்துக்கான விருதை நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதியயாத் வஷேம்என்னும் நூலின் தமிழ் மொழியாக்கத்திற்காக பெற்றார்.

விருதுகள்

  • நல்லி திசை எட்டும் விருது (2018)
  • திருப்பூர் இலக்கிய விருது - மொழியாக்க விருது (2019)
  • ஸ்பாரோ - மொழியாக்க விருது (2020)
  • விஜயா - மொழியாக்க விருது (2022)
  • குவெம்பு பாஷா பாரதி ப்ராதிகாரா (2022) கர்நாடகா - ‘கௌரவ விருது’
  • குப்பம் திராவிட பல்கலைக்கழகம் மற்றும் திராவிட பாஷா மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் - Award of Recognition (2022)
  • கேந்திரிய சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது (2022)

நூல்கள்

சிறுகதை தொகுப்பு

  • அத்தர் (2022)

மொழிபெயர்ப்பு செய்த படைப்புகள்

கன்னடத்திலிருந்து தமிழில்

கவிதை
  • மொட்டு விரியும் சத்தம் (லங்கேஷ்)
நாவல்
  • யாத்வஷேம் (நேமிச்சந்த்ரா)
  • காச்சர் கோச்சர் (விவேக் ஷாண்பாக்)
  • கடுகு வாங்கி வந்தவள் (பாரதி பி.வி.)
  • ஓடை (ஸ்ரீனிவாச வைத்யா)
  • காஞ்சன சீதை (கிருஷ்ணமூர்த்தி சந்தர்)
  • கப்பரை (எம்.எஸ்.மூர்த்தி)
சிறுகதை
  • இதிகாசம் (எஸ்.திவாகர்)
  • மகிழம் பூ மணம் (ஜயந்த் காய்கிணி)
  • மயில் புராணம்:பிரிவினை கதைகள் (இன்திஜார் ஹுசைன்)
  • மோகனசாமி (வசுதேந்த்ரா)
  • வாட்டர் மெலன் (கனகராஜ் பாலசுப்ரமணியம்)
  • புத்த மணியோசை:கன்னட சிறுகதைகள் (தொகுப்பு)
  • வாக்கியம்,உயிர் மெய்யெழுத்து,இலக்கணம் போன்றவை:தற்கால கன்னட சிறுகதைகள் (தொகுப்பு)
நாடகம்
  • ஹயவதனம் (கிரிஷ் கார்னாட்)
தன்வரலாறு
  • அம்ரிதா நினைவுகள் (ரேணுகா நிடகுந்தி)
கட்டுரைகள்
  • கேலிச்சித்திர வரலாறு (டாக்டர் ஜே.பாலகிருஷ்ணா)
  • உண்மை இராமாயணத்தின் தேடல் (ஜி.என்.நாகராஜ்)
  • புதுவை என்னும் புத்துணர்வு (சந்தியா ராணி)

தமிழிலிருந்து கன்னடத்தில்

நாவல்
  • இடபம் (கண்மணி குணசேகரகன்) - கூளி
  • ஒரு புளிய மரத்தின் கதை (சுந்தர ராமசாமி) - ஹுனசே மரத கதே
  • பூக்குழி (பெருமாள் முருகன்) - ஹூ கொண்டா
  • மாதொரு பாகன் (பெருமாள் முருகன்) - அர்தநாரீஷ்வரா
  • பூனாச்சி (பெருமாள் முருகன்) - பூனாச்சி
சிறுகதை
  • தமிழ் பத்து கதைகள்: தற்கால தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் (தொகுப்பு) - தமிளு ஹத்து கதெகளு
  • தி.ஜானகிராமன் கதைகள் - குடி கண்டே
கட்டுரை
  • சத்தியத்தின் ஆட்சி (பாவண்ணன்) - பாபு ஹெஜ்ஜெகளல்லி
  • பேலியோ டயட் (நியாண்டர் செல்வன்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Dec-2022, 22:08:12 IST