under review

அழகிய திருச்சிற்றம்பல அடிகள்: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom)
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Azhagiya Thiruchitrambala Adigal|Title of target article=Azhagiya Thiruchitrambala Adigal}}
[[File:அழகியசிற்றம்பல அடிகள்.png|thumb|அறிவானந்த சமுத்திரம்-அழகியசிற்றம்பல அடிகள்]]
[[File:அழகியசிற்றம்பல அடிகள்.png|thumb|அறிவானந்த சமுத்திரம்-அழகியசிற்றம்பல அடிகள்]]
அழகிய திருச்சிற்றம்பல அடிகள் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். கிளி விடு தூது நூல் முக்கியமான படைப்பு.
அழகிய திருச்சிற்றம்பல அடிகள் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். கிளி விடு தூது நூல் முக்கியமான படைப்பு.

Revision as of 11:51, 5 June 2022

To read the article in English: Azhagiya Thiruchitrambala Adigal. ‎

அறிவானந்த சமுத்திரம்-அழகியசிற்றம்பல அடிகள்

அழகிய திருச்சிற்றம்பல அடிகள் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். கிளி விடு தூது நூல் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

அழகிய திருச்சிற்றம்பல அடிகள் காவிரியின் தென்கரையில் உள்ள திருவம்பர்மா காளத்தைச் சேர்ந்த மாகாள இலந்துறையில் பிறந்தார். சோழிய வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்.

இளமையிலேயே தருமபுரி ஆதீனத்தில் திருவம்பல தேசிகரிடம் மாணவராகச் சேர்ந்து அவரிடம் தீட்சை பெற்றுக்கொண்டார். தருமபுரி ஆதீனத்தின் எட்டாவது பட்டம் பெற்றார். திருவம்பல தேசிகரின் ஆணைப்படி சொர்க்கபுரம் என்னும் ஊரில் ஒரு மடம் நிறுவினார் .அந்த மடத்திற்கு பாபு சாகேப் ஏகோஜி நிலங்ங்களை கொடையளித்தார். தஞ்சாவூர் அரசி கஜானாபாயும், மன்னர் சரபோஜி II -ம் 1737ல் நேரில் மடத்துக்கு வந்து வழிபட்டு மானியங்களை அளித்தனர்.

இலக்கிய வாழ்க்கை

கிளி விடு தூது நூலை தன் ஞான ஆசிரியர் திருவம்பல தேசிகரின் மேல் பாடினார். சைவ சமய நூல்கள் பல இயற்றினார்.

மாணவர்கள்

  • நாகை வடிவியார்
  • அழகியார்
  • வைத்தியலிங்கத் தம்பிரான்
  • அகரக் கோந்தை சுப்ப நாயனார்

மறைவு

கார்த்திகை மாதம் 1748-ஆம் ஆண்டு அழகிய திருச்சிற்றம்பல அடிகள் காலமானார்.

நூல் பட்டியல்

  • கிளி விடு தூது
  • அறிவானந்த சரித்திரம்
  • வினாவுரை
  • திரிபதார்த்த தீபம்
  • சித்தார்த்த நிச்சயம்
  • அநுட்டான விதி
  • உசாத்தானத் தோத்திரம்
  • அருட்பாமாலை

உசாத்துணை

✅Finalised Page