64 சிவவடிவங்கள்: 50-ஏகபாத த்ரிமூர்த்தி: Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 24: | Line 24: | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 12:14, 12 November 2024
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ஏகபாத த்ரிமூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஐம்பதாவது மூர்த்தம் ஏகபாத த்ரிமூர்த்தி. தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகங்கள், உயிர்கள் அனைத்தையும் தாங்கும் மூர்த்தியாகச் சிவபெருமான் ஒற்றைக்காலில் நிற்பதாலும், பிரம்மாவும், விஷ்ணுவும் அவரின் இரு புறத்திலும் அமைந்து மூன்று மூர்த்திகளாக இருப்பதாலும் அவர் ஏகபாத த்ரிமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
தொன்மம்
தொடக்கமும், முடிவும் அற்றவர் சிவபெருமான். அவரே உலகின் ஆதியாகவும் அந்தமாகவும் உள்ளார். அவரன்றி எப்பொருளும் பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை அனைத்து இயக்கமும் அவராலேயே தொடர்ந்து நடைபெறுகின்றன. அவராலேயே முடிகின்றன. சிவபெருமான் உயிர்களுக்கு அருள்வதற்காகவே பிரம்மன், திருமால், ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளைத் தோற்றுவித்துப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்விக்கிறார்.
சிவபெருமானின் இதயத்தில் இருந்து ருத்திரரும், இடப்பாகத்திலிருந்து பிரம்மாவும், வலப்பாகத்தில் இருந்து திருமாலும் தோன்றினர். கண்களில் இருந்து சூரியனும், சந்திரனும், மூக்கிலிருந்து வாயுவும், கழுத்தில் இருந்து கணேசரும், இதயத்தின் ஒரு பாகத்தில் இருந்து கந்தனும் தோன்றினர். சிவபெருமானின் உந்தியிலிருந்து இந்திரன், குபேரன், வருணன், எமன் ஆகியோரும், பிரத்யங்கத்தில் இருந்து 50 கோடி தேவர்களும், ரோமங்களிலிருந்து எண்ணிக்கையற்ற முனிவர்களும் தோன்றியதாகச் சிவாகமங்கள் கூறுகின்றன.
இவ்வாறு சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் ஊழிக்காலத்தில் அவரிடமே ஒடுங்குகின்றன. ஊழிக்காலம் முடிந்து ஒவ்வொரு முறையும் உலகத்தைப் புதியதாய்ப் புதுப்பிக்கும் போது மேற்க்கண்ட அனைவரும் தோன்றுவர். உயிரினங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி, தீயவர்களை அழித்து இறுதியில் சிவபெருமானிடத்தில் ஐக்கியமாவர். சிவபெருமான், உலகை மீண்டும் மீண்டும் தோற்றுவித்துத் தம்முள் அடக்குவதால், அவருக்குப் பிறப்பென்பதும், இறப்பென்பதும் இல்லாமல் அனைத்தின் பிறப்பிடமாக உள்ளார்.
தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகங்கள், உயிர்கள் அனைத்தையும் தாங்கும் மூர்த்தியாகச் சிவபெருமான் ஒற்றைக்காலில் நிற்பதால் அவர் ஏகபாதத்ரிமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாடு
திருவிடைமருதூர், தொப்பளாம்புலியூர், திருவொற்றியூர், மண்டகப்பட்டு குகைக்கோயில் போன்ற தலங்களில் சிவபெருமான் ஏகபாத த்ரிமூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். திருவிடைமருதூரின் மூலவர் மகாலிங்கேஸ்வரர், இறைவி பெருநலமுலையம்மை. இங்குள்ள காருண்ய தீர்த்ததில் நீராடி அஸ்வமேதப் பிரகாரத்தில் வலம் வர ஏவல், பில்லி, சூனியம், மனநிலைப் பிறழ்வு போன்ற நோய்கள் அகலும் என்றும், வெள்ளிக்கிழமைகளில் வில்வார்ச்சனையும் வெண்பொங்கல் நைவேத்தியமும் முக்காலத்தையும் அறியும் அறிவு, முப்பிணி அகலல், நீண்ட ஆயுள் ஆகியவற்றை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page