under review

தந்திரி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:
* ஆலயம் முறையாக புதுப்பிக்கப்படுகிறதா என கண்காணிப்பது.
* ஆலயம் முறையாக புதுப்பிக்கப்படுகிறதா என கண்காணிப்பது.
== நவீன மாற்றங்கள் ==
== நவீன மாற்றங்கள் ==
கேரளத்தில் நாராயண குருவின் ஆன்மிக -சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் விளைவாக அனைத்துச் சாதிகளில் இருந்தும் தாந்த்ரீகக் கல்வி பெற்றவர்கள் உருவானார்கள். அவர்களால் நிறுவப்பட்ட தாந்த்ரீகப் பயிற்சி நிலையங்கள் எல்லா சாதிகளில் இருந்தும் ஆலயப்பூசகர்களை பயிற்சியளித்து உருவாக்குகிறார்கள். அவர்கள் அரசால் ஆலயங்களில் பூசகர்களாக நியமிக்கப்படுகிறார்கள். கேரளத்தின் முதன்மையான தந்திரிகளில் ஒருவர் [[பரவூர் ஸ்ரீதரன் தந்திரி]] நாராயண குருவின் வழிவந்தவர். ஈழவச் சாதியைச் சேர்ந்தவர். அவரால் பயிற்சியளிக்கப்பட்ட தலித் சாதியைச் சேர்ந்தவர்களும் ஆலயப்பூசகர்களாக பணிபுரிகின்றனர்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://sarva.kerala.gov.in/ கேரள கலைக்களஞ்சியம்]
* [https://sarva.kerala.gov.in/ கேரள கலைக்களஞ்சியம்]
* மகாக்ஷேத்ரங்களுட நடையில்: நாலாங்கல் கிருஷ்ணபிள்ளை
* மகாக்ஷேத்ரங்களுட நடையில்: நாலாங்கல் கிருஷ்ணபிள்ளை
* திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல்:திவான் வேலுப்பிள்ளை  
* திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல்:திவான் வேலுப்பிள்ளை  
*https://www.jeyamohan.in/102968/
*
*[https://www.jeyamohan.in/102968/ கேரள தலித் அர்ச்சகர் நியமனம் கேள்வி பதில்கள்_ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/102895/ கேரளத் தலித் அர்ச்சகர் நியமனம்]
*[https://www.jeyamohan.in/102895/ கேரளத் தலித் அர்ச்சகர் நியமனம்]
*https://www.thehindu.com/news/national/kerala/the-unique-distinction-of-yadukrishna/article19829095.ece
*[https://www.thehindu.com/news/national/kerala/the-unique-distinction-of-yadukrishna/article19829095.ece The hindu]
 
{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:22, 26 May 2022

தந்திரி: (தந்த்ரி) கேரளத்து இந்து ஆலயங்களில் ஆலயங்களை நிறுவவும், வழிபாடுகளையும் திருவிழாக்களையும் ஒருங்கிணைக்கவும் பொறுப்பு கொண்டவர். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்து இந்து ஆலயங்களில் இவர்கள் பொறுப்பில் உள்ளனர். பழைய திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில் ஆலயங்களில் காராய்மை என்னும் மரபின்படி இவர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பதவி இன்றும் வாரிசுரிமையாகத் தொடர்கிறது.

தாந்த்ரீகபூசை

தமிழ்நிலத்தில் சோழ,பாண்டிய நாட்டு ஆலயங்களில் சைவ, வைணவ ஆகமங்களின் அடிப்படையில் பூசை நிகழ்கிறது. கேரளத்து ஆலயங்களில் தந்த்ரசமுச்சயம் போன்ற சில தாந்த்ரீக நூல்களின் நூலின் அடிப்படையிலேயே ஆலய தெய்வங்கள் நிறுவப்பட்டு, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தந்த்ரம் என்னும் சொல் ‘செயல்முறை’ என பொருள்கொண்டது. உருவ வழிபாடு, ஆலய வழிபாடு சார்ந்த குறியீட்டுச் செயல்பாடுகளை அச்சொல் குறிக்கிறது. தாந்த்ரீகமுறை பல்வேறு மறைஞானக் கொள்கைகள், வழிபாட்டுச் சடங்குகள், அவற்றுக்குரிய மந்திரங்கள் மற்றும் நடைமுறை நெறிகள் ஆகியவை அடங்கியது.தாந்த்ரிக முறை பூசை கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளம் முழுக்கவும், கர்நாடகத்தில் துளுநாடு எனப்படும் தெற்கு கனரா மாவட்டத்திலும் நடைமுறையிலுள்ளது.

தந்திரிகள்

ஆலயங்களை ஒட்டி இரண்டுவகை நிர்வாக அமைப்புகள் இருந்தன. ஊராய்மை எனப்படுவது பொதுமக்கள் சபை. காராய்மை எனப்படுவது சடங்குகளைச் செய்பவர்களின் சபை. காராய்மை அமைப்பின் தலைவர் தலைமைத் தந்த்ரி. ஆலயத்திற்கு உரிய தந்த்ரநூலைக் கற்றறிந்து, அந்நூலின் அடிப்படையில் ஆலயங்களை நிறுவவும், வழிபாடுகளை நடத்தவும் நியமிக்கப்பட்டவர்கள் தந்த்ரிகள் எனப்படுகின்றனர். பொதுவாக இவர்கள் ஸ்ரௌத பிராமணர்கள் என்னும் நம்பூதிரிகள். போற்றிகள் எனப்படும் துளு பிராமணர்களும் அரிதாக தந்த்ரிகளாக நியமிக்கப்படுவதுண்டு. சபரிமலை போன்ற தனித்தன்மை கொண்ட ஆலயங்களில் இவ்விரு சாதியினரும் அல்லாத தனியான குடும்பங்கள் தந்த்ரிகளாக மரபுமுறைப்படி நியமிக்கப்படுகிறார்கள். தந்த்ரிகள் சுருதிகளின் (வேதங்கள், வேதங்களை அடிப்படையாகக் கொண்ட நூல்கள்) அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் சிரௌதிகள் எனப்படுவதுண்டு. குடும்பப் பாரம்பரியமாக இப்பதவி மூத்தமகன் அல்லது மருமகன் வழியாக அடுத்த தலைமுறைக்கு கைமாறப்படுகிறது. பெரிய ஆலயங்களுக்கு அவ்வாலயங்களுக்குரிய தந்த்ரிகள் உண்டு. ஒரு வட்டாரத்திலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் பொறுப்பு கொண்ட தந்த்ரிகளும் உண்டு. .

பணிகள்

  • முறையான சடங்குகள் வழியாக பிராணப்பிரதிஷ்டை செய்து ஆலயச் சிலைகளை நிறுவுவது
  • ஆலயங்களுக்குரிய பூசை, வழிபாடு, திருவிழா முறைமைகளை உரிய தந்த்ர நூலின் அடிப்படையில் வகுப்பது
  • ஆலயவழிபாடுகளும் திருவிழாக்களும் முறையாக நிகழ வழிகாட்டுவது, நிகழ்கின்றனவா என கண்காணிப்பது
  • ஆலயவழிபாட்டில் பிழைகள் ஏற்பட்டால் கண்டறிந்து பிழைகளைக் களைவது. உரிய பிழைநீக்கச் சடங்குகளைச் செய்வது
  • ஆலயப் புதுப்பித்தலின்போது தெய்வச்சிலைகளை இடமாற்றம் செய்வது, மீண்டும் நிறுவுவது.
  • ஆலயம் முறையாக புதுப்பிக்கப்படுகிறதா என கண்காணிப்பது.

நவீன மாற்றங்கள்

கேரளத்தில் நாராயண குருவின் ஆன்மிக -சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் விளைவாக அனைத்துச் சாதிகளில் இருந்தும் தாந்த்ரீகக் கல்வி பெற்றவர்கள் உருவானார்கள். அவர்களால் நிறுவப்பட்ட தாந்த்ரீகப் பயிற்சி நிலையங்கள் எல்லா சாதிகளில் இருந்தும் ஆலயப்பூசகர்களை பயிற்சியளித்து உருவாக்குகிறார்கள். அவர்கள் அரசால் ஆலயங்களில் பூசகர்களாக நியமிக்கப்படுகிறார்கள். கேரளத்தின் முதன்மையான தந்திரிகளில் ஒருவர் பரவூர் ஸ்ரீதரன் தந்திரி நாராயண குருவின் வழிவந்தவர். ஈழவச் சாதியைச் சேர்ந்தவர். அவரால் பயிற்சியளிக்கப்பட்ட தலித் சாதியைச் சேர்ந்தவர்களும் ஆலயப்பூசகர்களாக பணிபுரிகின்றனர்.

உசாத்துணை

✅Finalised Page