எஸ். செந்தில்குமார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(எஸ். செந்தில்குமார் - பதிவு பெயர் மாற்றம்)
Line 1: Line 1:
[[File:Sen.jpg|thumb|எஸ்.செந்தில்குமார்]]
[[File:Sen.jpg|thumb|எஸ்.செந்தில்குமார்]]
எஸ். செந்தில்குமார் (20-11-1973) தமிழ் எழுத்தாளர். தேனி மாவட்டத்தின் பின்னணியில் கதைகளை எழுதுபவர். பேசும் புதியசக்தி மற்றும் பொம்மி மாத இதழின் பொறுப்பாசிரிராக திருவாரூரில் பணிபுரிகிறார். 2009ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிக்களுக்கான ‘சுந்தரராமசாமி விருது’  பெற்றவர்.
எஸ். செந்தில்குமார் (நவம்பர் 20, 1973) தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர். இதழாளர்.


==பிறப்பு,கல்வி==
==பிறப்பு,கல்வி==
   
   
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கா.சுப்பிரமணியன், சு.முருகேஸ்வரி ஆகியோருக்கு மகனாக  1973 நவம்பர் 20 ஆம் நாள் பிறந்தார்.
எஸ். செந்தில்குமார், கா.சுப்பிரமணியன் - சு.முருகேஸ்வரி இணையருக்கு போடிநாயக்கனூரில் (தேனி மாவட்டம்) நவம்பர் 20,1973 ல் பிறந்தார். இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை போடிநாயக்கனூரிலுள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் முடித்தார்.
 
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஐ.கா.நி. ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார்  இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை போடிநாயக்கனூரிலுள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் முடித்தார்.
==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
    
    
மலர்விழியை நவமபர் 16, 2005’ல் மணம் புரிந்தார்.   ஒரே மகள் மஞ்சுளா காதம்பரி.
எஸ். செந்தில்குமாரின் மனைவியின் பெயர் மலர்விழி. திருமண நாள் நவமபர் 16, 2005. ஒரே மகள், மஞ்சுளா காதம்பரி. எஸ். செந்தில்குமார் போடிநாயக்கனூரில் வசித்து வருகிறார். பேசும் புதியசக்தி மற்றும் பொம்மி மாத இதழ்களின் பொறுப்பாசிரிராக திருவாரூரில் பணிபுரிந்து வருகிறார்


==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==


எஸ்.செந்தில்குமாரின் முதல் கவிதை  கனவு இதழில் 1996 ல் வெளியானது. அவ்வாண்டே முதல் சிறுகதை ’காணாமல் போனவர்கள்’ கணையாழியில்  வெளியானது.   
எஸ். செந்தில்குமார் 1999 முதல் எழுதிவருகிறார். இலக்கியச் சிற்றிதழ்களில் இவருடைய கதைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வெயில் உலர்த்திய வீடு என்னும் முதல் சிறுகதை தொகுதியை 2006ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தன் ஆதர்ச எழுத்தாளராக அசோகமித்திரனைக் குறிப்பிடுகிறார். ‘சமூகம் குறித்த அக்கறைகள் படைப்புகளில் பிரதிபலிக்காததற்குத் தனிமனிதன் குறித்து எழுத ஆரம்பித்ததும் அகவுலகைப் பிரதானமாக எழுதுவதும் முக்கியமான காரணங்கள். அப்படி எழுத ஆரம்பிக்கும்போது அவனது பிராந்தியம், சாதிதான் வெளிப்படுகிறது. பொதுக்குரல் என்பது சாதியத்திலிருந்து வராது’ என்று சொல்லும் எஸ்.செந்தில்குமார் சாதியப்பார்வை இல்லாத, குறுகிய எல்லைகளுக்குள் நின்றுவிடாத புனைவுகளை எழுதமுயல்வதாகச் சொல்கிறார்<ref>https://saabakkaadu.wordpress.com/2018/11/25/s-senthilkumar-interview/</ref>.   


தான் வளர்ந்த தேனி மாவட்டப்பின்னணியில் கதைகளை எழுதிவரும் எஸ்.செந்தில்குமார் பேசும் புதியசக்தி இதழிலும் பொம்மி இதழிலும் இலக்கியப்படைப்புக்களையும் விமர்சனங்களையும் பிரசுரித்துவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளை மதிப்பிட்டு ஒரு தொடரை எழுதினார்.  
== இலக்கிய இடம் ==
எஸ்.செந்தில்குமாரின் கதைகள் மூன்று இயல்புகள் கொண்டவை. அ.நுண்வரலாறு. ஆ.யதார்த்தவாத சித்தரிப்பு இ.மிகையற்ற உணர்ச்சிப்பெருக்கற்ற நிகழ்வோட்டமாக அமைதல். அவருடைய காலகண்டம் பொற்கொல்லர்களின் வாழ்க்கையை களமாகக் கொண்டது.கழுதைப்பாதை கழுதைகளில் மலைகளில் பொதிகளை ஏற்றி இறக்குபவர்களின் வாழ்க்கையை பற்றிப் பேசுவது. அவ்வாழ்க்கைகளை துல்லியமான தகவல்களுடன் சித்தரிக்கிறார். அவற்றைக்கொண்டு ஒரு கதையை கட்டமைப்பதில்லை. மிகையில்லாத வாழ்க்கைச்சித்திரங்களாகவே காட்டுகிறார். ‘வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் என தொடங்கி அனுபவக்குறிப்புகள் வாழ்க்கைநிகழ்வுகள் என கோத்துக்கொண்டே சென்று ஒரு சமூகத்துளியின் வரலாற்றைச் சொல்லிவிடுகிறது இந்நாவல்’ என கழுதைப்பாதை நாவலைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார்<ref>https://www.jeyamohan.in/147503/</ref>.  


== இலக்கிய இடம் ==
==படைப்புகள் ==
தேனிமாவட்டத்தை பின்புலமாகக் கொண்ட எஸ்.செந்தில்குமாரின் கதைகள் நுண்ணிய தகவல்களை தொடர்ச்சியாக அடுக்கி விரிந்த நிலக்காட்சியையும் மானுடமுகங்களையும் உருவாக்கி ஒரு நிகர்வாழ்க்கையை காட்டுகின்றன. வன்முறை காமம் ஆகியவற்றை நுணுக்கமாகக் காட்டுபவை இவருடைய படைப்புக்கள். அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை இவரது பெரும்பாலான கதைகள். பொற்கொல்லர்களின் வாழ்க்க்கையை சித்தரிக்கும் ''காலகண்டம்'', மலையில் கழுதைகள் வழியாக சரக்குப்போக்குவரத்து செய்பவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ''கழுதைப்பாதை'' போன்றவை  குறிப்பிடத்தக்க நாவல்கள். 


”வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் என தொடங்கி அனுபவக்குறிப்புகள் வாழ்க்கைநிகழ்வுகள் என கோத்துக்கொண்டே சென்று ஒரு சமூகத்துளியின் வரலாற்றைச் சொல்லிவிடுகிறது இந்நாவல்” என்று விமர்சகர் ஜெயமோகன் இவருடைய கழுதைப்பாதை என்னும் நாவலைப்பற்றிச் சொல்கிறார்[https://www.jeyamohan.in/147503/ *]. குடும்பம் போன்ற அமைப்புகளுக்குப் பதிலாக ஒரு பண்பாட்டுக்கூறின் வழியாக மொத்தச் சமூகத்தையும் சொல்ல முயல்பவை இவருடைய படைப்புக்கள். “எனது படைப்புகளில் கடந்த காலம் என்பது சிறுவயது மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகளாக மட்டுமில்லாமல் ஒரு இனத்தின் வரலாறு சார்ந்ததாக ஓரளவு விஸ்தரித்துக் கொள்கிறேன்” என்று எஸ்.செந்தில்குமார் தன் படைப்பியக்கம் பற்றிச் சொல்கிறார்.[https://www.hindutamil.in/news/literature/144414--2.html *].தனது இலக்கிய செயல்பாட்டிற்கு உத்வேகமாக எழுத்தாளர் அசோகமித்திரனை குறிப்பிடுகிறார்.
====== சிறுகதைத் தொகுப்புகள் ======


==நூல்பட்டியல் ==
* வெயில் உலர்த்திய வீடு 2006 உயிர்மை பதிப்பகம்
* சித்திரப்புலி 2008 உயிர்மை பதிப்பகம்
* மஞ்சள் நிற பைத்தியங்கள் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
* விலகிச்செல்லும் பருவம் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
* மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி  இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
* அலெக்ஸாண்டர் என்கிற கிளி 2015 உயிர்மை பதிப்பகம்
* .அனார்கலியின் காதலர்கள் 2016 உயிர்மை பதிப்பகம்
* சிவப்புக்கூடை திருடர்கள்  2019 உயிர்மை பதிப்பகம்


====== நாவல்கள் ======
====== நாவல்கள் ======
* ஜீ. சௌந்தரராஜனின் கதை 2007 உயிர்மை பதிப்பகம்
* ஜீ. சௌந்தரராஜனின் கதை 2007 உயிர்மை பதிப்பகம்
* முறிமருந்து 2009 தோழமை பதிப்பகம்
* முறிமருந்து 2009 தோழமை பதிப்பகம்
Line 32: Line 38:
* கழுதைப்பாதை 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்
* கழுதைப்பாதை 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்


======சிறுகதைத் தொகுப்புகள்======  
======கட்டுரைத் தொகுப்புகள்======
* வெயில் உலர்த்திய வீடு
* சித்திரப்புலி 
* மஞ்சள் நிற பைத்தியங்கள்
* விலகிச்செல்லும் பருவம்
* மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி
* அலெக்ஸாண்டர் என்கிற கிளி
* அனார்கலியின் காதலர்கள்
* சிவப்புக்கூடை திருடர்கள் 


======கட்டுரைத்தொகுப்பு======
* சிறுகதை (தமிழ்கதைகள் குறித்த கட்டுரைகள்) 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்
* சிறுகதை (தமிழ்கதைகள் குறித்த கட்டுரைகள்)  


======கவிதைத் தொகுப்புகள்======
======கவிதைத் தொகுப்புகள்======
Line 60: Line 57:


* சுந்தர ராமசாமி விருது 2009 | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
* சுந்தர ராமசாமி விருது 2009 | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
*https://www.hindutamil.in/news/literature/144414--2.html எஸ்.செந்தில்குமார் பேட்டி
*https://www.hindutamil.in/news/literature/144414--2.html எஸ். செந்தில்குமார் பேட்டி
*[https://www.jeyamohan.in/147503/ எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை-ஜெயமோகன்]  
*[https://www.jeyamohan.in/147503/ எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை-ஜெயமோகன்]  
* விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
* விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ். செந்தில்குமார் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
* மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்): https://sureshezhuthu.blogspot.com/2017/
* மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்): https://sureshezhuthu.blogspot.com/2017/
* மரப்பாச்சி கூடுகை எண் 22 - எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாருடன் சந்திப்பு: * https://marapachiilakiyavattam.blogspot.com/
* மரப்பாச்சி கூடுகை எண் 22 - எழுத்தாளர் எஸ். செந்தில்குமாருடன் சந்திப்பு: * https://marapachiilakiyavattam.blogspot.com/
* ஜீ.சௌந்தரராஜனின் கதை:https://www.udumalai.com/g-soundarajanin-kadhai.htm
* ஜீ.சௌந்தரராஜனின் கதை:https://www.udumalai.com/g-soundarajanin-kadhai.htm
* முன் சென்ற காலத்தின் சுவை: https://www.udumalai.com/mun-senra-kaalathin-suvai.htm
* முன் சென்ற காலத்தின் சுவை: https://www.udumalai.com/mun-senra-kaalathin-suvai.htm
* சிவப்புக்கூடை திருடர்கள், வலிகளைச் சொல்லும் வா வாசனைகள்!:https://www.hindutamil.in/news/literature/172642-.html
* சிவப்புக்கூடை திருடர்கள், வலிகளைச் சொல்லும் வா வாசனைகள்!:https://www.hindutamil.in/news/literature/172642-.html
* https://youtu.be/arlw2gIrXXo
* https://youtu.be/0V6DQmgYITc
* https://youtu.be/evB-WoLcCe8
* https://youtu.be/afuQHNubTiA

Revision as of 02:06, 30 January 2022

எஸ்.செந்தில்குமார்

எஸ். செந்தில்குமார் (நவம்பர் 20, 1973) தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர். இதழாளர்.

பிறப்பு,கல்வி

எஸ். செந்தில்குமார், கா.சுப்பிரமணியன் - சு.முருகேஸ்வரி இணையருக்கு போடிநாயக்கனூரில் (தேனி மாவட்டம்) நவம்பர் 20,1973 ல் பிறந்தார். இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை போடிநாயக்கனூரிலுள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் முடித்தார்.

தனிவாழ்க்கை

எஸ். செந்தில்குமாரின் மனைவியின் பெயர் மலர்விழி. திருமண நாள் நவமபர் 16, 2005. ஒரே மகள், மஞ்சுளா காதம்பரி. எஸ். செந்தில்குமார் போடிநாயக்கனூரில் வசித்து வருகிறார். பேசும் புதியசக்தி மற்றும் பொம்மி மாத இதழ்களின் பொறுப்பாசிரிராக திருவாரூரில் பணிபுரிந்து வருகிறார்

இலக்கிய வாழ்க்கை

எஸ். செந்தில்குமார் 1999 முதல் எழுதிவருகிறார். இலக்கியச் சிற்றிதழ்களில் இவருடைய கதைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வெயில் உலர்த்திய வீடு என்னும் முதல் சிறுகதை தொகுதியை 2006ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தன் ஆதர்ச எழுத்தாளராக அசோகமித்திரனைக் குறிப்பிடுகிறார். ‘சமூகம் குறித்த அக்கறைகள் படைப்புகளில் பிரதிபலிக்காததற்குத் தனிமனிதன் குறித்து எழுத ஆரம்பித்ததும் அகவுலகைப் பிரதானமாக எழுதுவதும் முக்கியமான காரணங்கள். அப்படி எழுத ஆரம்பிக்கும்போது அவனது பிராந்தியம், சாதிதான் வெளிப்படுகிறது. பொதுக்குரல் என்பது சாதியத்திலிருந்து வராது’ என்று சொல்லும் எஸ்.செந்தில்குமார் சாதியப்பார்வை இல்லாத, குறுகிய எல்லைகளுக்குள் நின்றுவிடாத புனைவுகளை எழுதமுயல்வதாகச் சொல்கிறார்[1].

இலக்கிய இடம்

எஸ்.செந்தில்குமாரின் கதைகள் மூன்று இயல்புகள் கொண்டவை. அ.நுண்வரலாறு. ஆ.யதார்த்தவாத சித்தரிப்பு இ.மிகையற்ற உணர்ச்சிப்பெருக்கற்ற நிகழ்வோட்டமாக அமைதல். அவருடைய காலகண்டம் பொற்கொல்லர்களின் வாழ்க்கையை களமாகக் கொண்டது.கழுதைப்பாதை கழுதைகளில் மலைகளில் பொதிகளை ஏற்றி இறக்குபவர்களின் வாழ்க்கையை பற்றிப் பேசுவது. அவ்வாழ்க்கைகளை துல்லியமான தகவல்களுடன் சித்தரிக்கிறார். அவற்றைக்கொண்டு ஒரு கதையை கட்டமைப்பதில்லை. மிகையில்லாத வாழ்க்கைச்சித்திரங்களாகவே காட்டுகிறார். ‘வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் என தொடங்கி அனுபவக்குறிப்புகள் வாழ்க்கைநிகழ்வுகள் என கோத்துக்கொண்டே சென்று ஒரு சமூகத்துளியின் வரலாற்றைச் சொல்லிவிடுகிறது இந்நாவல்’ என கழுதைப்பாதை நாவலைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார்[2].

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • வெயில் உலர்த்திய வீடு 2006 உயிர்மை பதிப்பகம்
  • சித்திரப்புலி 2008 உயிர்மை பதிப்பகம்
  • மஞ்சள் நிற பைத்தியங்கள் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • விலகிச்செல்லும் பருவம் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி  இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • அலெக்ஸாண்டர் என்கிற கிளி 2015 உயிர்மை பதிப்பகம்
  • .அனார்கலியின் காதலர்கள் 2016 உயிர்மை பதிப்பகம்
  • சிவப்புக்கூடை திருடர்கள்  2019 உயிர்மை பதிப்பகம்
நாவல்கள்
  • ஜீ. சௌந்தரராஜனின் கதை 2007 உயிர்மை பதிப்பகம்
  • முறிமருந்து 2009 தோழமை பதிப்பகம்
  • நீங்கள் நான் மற்றும் மரணம் 2010 தோழமை பதிப்பகம்
  • காலகண்டம் 2013 உயிர்மை பதிப்பகம்
  • மருக்கை 2016 உயிர்மை பதிப்பகம்
  • கழுதைப்பாதை 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்
கட்டுரைத் தொகுப்புகள்
  • சிறுகதை (தமிழ்கதைகள் குறித்த கட்டுரைகள்) 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்
கவிதைத் தொகுப்புகள்
  • குழந்தைகள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள்
  • சமீபத்திய காதலி
  • முன்சென்ற காலத்தின் சுவை (கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியிடு)

விருதுகள்

  • 2009ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிக்களுக்கான ‘சுந்தரராமசாமி விருது’
  • 2013ஆம் ஆண்டிற்காக SRV பள்ளி நிறுவனத்திலிருந்து வழங்கிய படைப்பூக்கத்திற்கான தமிழ் விருது.
  • 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா அறக்கட்டளையிலிருந்து வழங்கிய சுஜாதா சிறுகதை விருது.
  • 2018ஆம் ஆண்டிற்கான கோவை வாசகர் வட்டமும் விஜயா பதிப்பகமும் இணைந்து வழங்கிய கவிஞர் மீரா விருது.
  • 2018ஆம் ஆண்டிற்கான Sparrow இலக்கிய விருது.

இணைப்புகள்