வி. தேவன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 17: | Line 17: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|29-Oct-2024, 15:43:27 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 01:03, 30 October 2024
வி. தேவன் (பிறப்பு: 1963) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). ஐந்தாம் தலைமுறை கூத்துக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
வி. தேவன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலுள்ள குண்டையார் தண்டலத்தில் 1963-ல் பிறந்தார். தாத்தா சின்னக்குழந்தை, தந்தை வரதப்பன் இருவரும் கூத்துக் கலைஞர்கள். தெருக்கூத்து இல்லாத நேரங்களில் கூலி வேலை செய்தார்.
கலை வாழ்க்கை
வி. தேவன் ஐந்தாம்வகுப்பு படிக்கும்போதே கூத்து ஆடத் தொடங்கினார். தாத்த சின்னக் குழந்தை, அப்பா வரதப்பன், சி. பாலகிருஷ்ணன், வி. தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கூத்து கற்றார். முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் நகுலன், சகாதேவன் ஆகிய பாத்திரங்களில் நடித்தார். ஆரம்ப கால கட்டத்தில் பெண் வேடங்கள் கட்டி ஆடினார். அதன்பிறகு முக்கிய வேடங்களில் ஆடினார். வி. தேவனின் வாத்தியார் சி. வரதப்பன், சி. பாலகிருஷ்ணன், வி. தட்சிணாமூர்த்தி. ஸ்ரீமாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவில் கூத்து ஆடினார்.
மாணவர்கள்
- விநாயகன்
- சத்தியன்
- ஏழுமலை
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்து
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 15:43:27 IST